
கிருஷ்ணனின் குழந்தைப் பருவப் படத்தினையோ அல்லது திரு உருவ சிலையையோ வீட்டில் பூஜை அறையில் வைத்து கொள்ள வேண்டும். அதற்கு துளசி மாலை அணிவித்து கொள்ள வேண்டும். கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெயையும் நைவேத்தியமாக படைக்க வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபமும் ஏற்றி வைக்கப்படவேண்டும். கிருஷ்ணனின் திரு உருவ படத்திற்கு முன்னால் ஒரு சிறிய மனபலகையின் மீது அமர்ந்து அந்த கிருஷ்ணனை பிரார்த்தனை செய்து கொண்டு குழந்தை வரத்தை எனக்கு தரவேண்டும் என்பதை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு கிருஷ்ணருக்கு உரிய மந்திரமான இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
‘ஓம் நமோ பகவதே ஜகத்ப்ரஸீதயை நமஹ’.
இந்த மந்திரத்தை பெண்கள் தினம்தோறும் 108 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து அந்த கிருஷ்ணனை விரதம் இருந்து வழிபட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். முடிந்தவரை இந்த விரத பூஜையை சூரிய உதயத்திற்கு முன்பு செய்வது நல்லது. இந்த பூஜையை நீங்கள் தொடங்கிய சில நாட்களிலேயே கருவுற்றாளும் இந்த பூஜையை பாதியில் நிறுத்திவிட வேண்டாம். உங்கள் குழந்தை கருவில் நன்றாக வளரும் வரை இந்த மந்திரத்தை உச்சரிப்பது உங்கள் கருவிற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். உங்கள் குழந்தையும் அந்த மாயக் கண்ணனை போல நல்ல ஆற்றலை கொண்டு பிறப்பதற்கும் இந்த மந்திரமானது உபயோகமானதாக இருக்கும்.