
ஒருவருக்கு ஜாதக ரீதியாக எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் போய் முடியும். தலையின் பின்பக்கமானது(புடதி பகுதி) வலிக்கும். நாம் உண்ணும் உணவு நம் வயிற்றில் தங்காது. வாந்தியின் மூலம் வெளியே வந்துவிடும். நம் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். குலதெய்வ வழிபாடு தடைபடும். வீட்டில் இறைவனை வழிபட முடியாது. கோவிலுக்கு செல்ல முடியாது. குரல் வளம் குறையும். நம் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவரிடம் சென்றாலும், எல்லா வகையான பரிசோதனை செய்தாலும் உடலுக்கு எந்த உபாதையும் இல்லை என்ற பதில் தான் வரும். ஆனால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டும் தீரவே தீராது.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் நமக்கு தொடர்ந்து ஏற்பட்டு வந்தால் ஏதோ ஒரு செய்வினை நம்மை பாதித்திருக்கிறது என்பது அர்த்தம். உங்களுக்கான செய்வினையை நீக்க சரியான பரிகாரத்தினை அருகிலுள்ள ஜோசியரிடம் உங்கள் ஜாதகத்தை வைத்து பார்த்து தான் கூற முடியும். பொதுவாக எல்லாவகையான செய்வினைகளிலிருந்து வரும் பாதிப்பிலிருந்து நம் குடும்பத்தையும், தொழிலையும் காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரு சுலபமான துர்க்கை விரத வழிபாடு உள்ளது. அதைப் பற்றி பின்வருமாறு காண்போம்.
வீட்டில் துர்க்கை அம்மனின் படத்திற்கு முன்பு நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து, குங்குமத்தை நீரிலோ அல்லது பன்னீரிலோ கரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உதிரிப்பூக்களை ஒரு தாம்பாளத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்பு அந்த பூக்களை குங்குமம் கரைக்கப்பட்ட தண்ணீரில் தொட்டு துர்க்கை அம்மனின் திருவுருவ படத்திற்கு 108 அம்மன் போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த 108 அம்மன் போற்றிகளைக் கூற முடியாதவர்கள் 108 முறை ‘ஓம் துர்கை அம்மனை போற்றி’ என்ற மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்யலாம். குருதி பூஜை என்று கூறப்படும் இந்த பூஜையை தினம்தோறும் இரவு 7 லிருந்து 8 மணிக்குள் செய்யலாம். தினமும் செய்ய முடியாதவர் விரதம் இருந்து வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வரலாம்.
இதன் மூலம் நமக்கு முன்னேற்றத்தில் இருந்த தடைகள் எல்லாம் படிப்படியாக கண்டிப்பாக குறையும். ஆனால் முழு மனதுடன் அந்த துர்கையை பரிபூரணமாக நம்பி பூஜை செய்வது அவசியம். செய்வினையின் பாதிப்பால் தொடர்ந்து தோல்வியில் அவதிப்பட்டு வருபவர்களுக்கு இந்த விரத பூஜை முறை நல்ல வழிகாட்டியாக அமையும்.