search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தபோது எடுத்தபடம்.
    X
    நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தபோது எடுத்தபடம்.

    நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்தது

    சந்தனக்கூடு ஊர்வலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. விழாவில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
    நாகை மாவட்டம் நாகூரில் உலகப்பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று நடந்தது. இரவு 7 மணி அளவில் நாகையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு 9 மணி அளவில் நாகூர் வந்தடைந்தது.

    இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு என்பதால் நாகை மற்றும் நாகூரில் உள்ள தெருக்களுக்கு செல்லாமல் சந்தனக்கூடு ஊர்வலம் நேரடியாக நாகூர் அலங்கார வாசலை சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து தர்காவில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனை மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

    சந்தனக்கூடு ஊர்வலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் என்றாலே நாகை மற்றும் நாகூர் நகர பகுதிகள் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாகை, நாகூர் பகுதிகள் களையிழந்து காணப்பட்டன. நாகூர் தர்கா பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
    Next Story
    ×