
முதல்வழி: அதன்படி உப்பு, வெந்தயம் மற்றும் கருப்பு எள் ஆகியவற்றை நன்றாக அரைத்து ஒரு துணியில் வைத்து அதை வீட்டின் கன்னி மூலையில் அதாவது, தென்மேற்கு மூலையில் வைத்தால் அந்த பரிகாரம் மூலம் நாம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
இரண்டாவது வழி: என்னவெனில் ஒரு வெற்றிலையை எடுத்து அதன்மீது மூன்று கற்பூரங்களை வைத்து கொளுத்த வேண்டும். அவ்வாறு கொளுத்தும் போது ஒரு சில்வர் தட்டை அந்த கற்பூரம் எரியும் மேற்பகுதியில்காட்டவேண்டும். எரியும் தீயால் அந்த சில்வர் தட்டு மீது மேல் கருப்பு நிறம் படியும். பிறகு அந்த சில்வர் தட்டை எடுத்துக்கொண்டு வந்து தெற்கு நோக்கி அமர்ந்து அந்த சில்வர் தட்டில் உள்ள கறியை வெள்ளைத் துணியால் தொட்டு ஒரு பேப்பரில் அந்த கருப்பு நிறத்தில் கடன் வாங்கியவர் பெயரையும் எவ்வளவு ரூபாய் வாங்கினார் என்பதையும் எழுதி விநாயகர் படத்தின் கீழே நாம் எழுதிய அந்த பேப்பரை நான்காக மடித்து வைத்தால் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
மூன்றாவது வழி: பைரவர் வழிபாடு செய்வதன் மூலம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். பைரவர் வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் எனில் 27 கருப்பு மிளகுகளை எடுத்து அதனை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு அந்த மிளகு அடங்கிய துணியை எண்ணையில் நனைத்து அதன் மூலம் தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு தீபம் ஏற்றும் போது அந்த அகல் விளக்கின் வெளியே சுற்றி குங்குமத்தை வட்டமாக தூவ வேண்டும். அவ்வாறு தூவி கடன்தொடுத்தவர் திரும்பத்தரவேண்டும் என்று மனதார வேண்டினால் கொடுத்த பணம் நமக்கு திரும்ப கிடைக்கும்.