என் மலர்

  ஆன்மிகம்

  ராகு - கேது தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டிய கோவில்
  X

  ராகு - கேது தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டிய கோவில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகராஜ சுவாமி கோவிலில் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் தங்களின் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.
  சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக நாகராஜ சுவாமி கோவில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனாக நாகராஜர் இருக்கிறார்.  இக்கோயிலின் தீர்த்தம் நாக தீர்த்தம் எனப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் தெய்வமான நாகராஜர் சுயம்பு வடிவானவர் என்பது விசேஷ அம்சமாகும்.

  ஆனால் இந்த நாகராஜர் கோயிலில் தர்னேந்திரன் என்கிற ஆண் நாகமும், பத்மாவதி என்கிற பெண் நாகமும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். கோயில் மூலஸ்தானத்தில் பாரம்பரிய ஓலை கூரைக்கடியில் மூலவரான நாகராஜர் இருக்கிறார். இக்கோயிலை இன்றும் தெய்வீக நாகங்கள் பாதுகாப்பதாகவும், அதனாலேயே நாகங்களின் மூலஸ்தானத்தில் ஓலைக்கூரைகள் வேயப்படுவதாகவும் கூறப்படுகிறது.

  செவ்வாய்க்கிழமைகளில் ராகு - கேது தோஷம் உள்ளவர்கள், தோஷங்கள் நீங்க நாகராஜரையும், அம்மச்சி துர்க்கையையும் வழிபடுகின்றனர். மலையாள மொழியில் வயதில் மூத்த பெண்களை அம்மச்சி என்று அழைப்பது வழக்கம். அதனாலேயே இந்த துர்க்கைக்கு அம்மச்சி என்கிற பெயர் உண்டாயிற்று.

  பாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் நகராஜனான ஆதிசேஷன் ஜென்ம நட்சத்திரம் ஆயில்யம் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நட்சத்திர தினத்தில் இக்கோயிலின் மூலவரான நாகராஜருக்கு விஷேஷ பூஜைகள் செய்து, பால் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் தங்களின் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

  அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் நாகர்கோயில் நகரத்தில் அமைந்துள்ளது.

  தொலைபேசி எண் 4652 - 232420
  Next Story
  ×