என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமண தடை நீக்கும் எளிய கால சர்ப்ப தோஷ பரிகாரங்கள்
Byமாலை மலர்6 Jun 2016 6:20 AM GMT (Updated: 6 Jun 2016 6:20 AM GMT)
ராகு கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் இதர அனைத்து கிரகங்களும் இருந்தால் அதற்காக எளிய பரிகாரங்கள்
ராகு கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் இதர அனைத்து கிரகங்களும் இருந்தால் :
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஷ்வரம் என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள் குறையும்.
கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய) நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும் தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும். சும்மா பெயருக்காக சென்று வழிபடுவதைவிட வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று வழிபடுவது மிகவும் முக்கியம்.
தோஷம் நீங்க பரிகாரம்
* சுவாதி நட்சத்திரத்தன்று, திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால், களத்திரதோஷம், புத்திர தோஷம் நீங்கும். மந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும்.
* திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும். இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம்.
* ஒருவருக்கு பேய், பிசாசு தொல்லைகள் இருக்குமானால், அவரை திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும்.

Next Story
×