
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
பூர்வ ஜென்ம கர்ம வினைப்பயன்களின் கடுமைத்தன்மையை குறைக்க விரும்புபவர்கள் மாமிச உணவுகள், போதை வாஸ்து போன்றவற்றை உண்பதை அறவே நீக்கிவிடுவது உத்தமமான பரிகாரம் ஆகும். தினந்தோறும் உங்கள் இல்லங்கள் அல்லது வேறு எங்காவது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளவேண்டும். சிவபெருமானின் கோவில்களுக்கு மகாசிவராத்திரி, சனிப்பிரதோஷம் போன்ற தினங்களில் சென்று வழிபடுவதும் நன்மையை ஏற்படுத்தும்.
வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை போன்றவற்றை கொடுத்து வரவேண்டும். எப்போதும் முதியவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து, அவர்களிடம் ஆசிகளை பெறுவது சிறந்தது. குரு, துறவிகள், ஞானிகள் போன்றோருக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்வது உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள், கர்மவினைகள் போன்றவற்றை போக்கும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.