
இந்தநிலையில் பழைய சண்டிகேஸ்வரர் சிலைக்குப் பதிலாக புதிய கல் சிலை மயிலாடியில் வடிவமைக்கப்பட்டது. இந்த சிலையானது நேற்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு 9 நாட்கள் தானிய வாசத்திலும், ஒரு நாள் ஜல வாசத்திலும், ஒரு நாள் சயனவாசத்திலும் இருக்கும்படி வைக்கப்பட்டு பின்னர் 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது.
இதையடுத்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு புதிய சிலையானது கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.