
இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி கடந்த 28-ந்தேதி தொடங்கியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆர்.கே. ரமேஷ் தலைமையிலான குழுவினர் சாமிக்கு சாத்துவதற்காக வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவில் வடைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது. இன்று வடைகளை மாலையாக கோர்க்கும் பணி தொடங்கியது.
இந்த வடைகளை தயாரிக்க 2 ஆயிரத்து 50 கிலோ உளுந்தம் பருப்பு மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120கிலோ உப்பு, 900 லிட்டர் நல்லெண்ணை ஆகியவை பயன்படுத்தப்பட்டன. 32 மடப்பள்ளி அர்ச்சகர்கள் 12 அடுப்புகளில் 3 நாட்கள் வடை தயாரிப்பு பணியை மேற்கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த பூ அலங்கார குழுவினர் கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நிறங்களால் ஆன 2 டன் எடை கொண்ட சாமந்தி பூக்களால் அலங்கரித்தனர்.
நாளை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிக்கு வடைமாலை சாத்துப்படியும், அதன்பின் நல்லெண்ணை, சிகைக்காய்த்தூள், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்ட வைகளான அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெற உள்ளது. மதியம் 1 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.