
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
மார்க்கெட் நல்லா இருக்கு, பார்ட்னர்ஸ் பார்த்துக்கு வாங்க நமக்கு எல்லாமே தெரியும் என்று நம்பி புதிய, பெரிய தொழில் முதலீடுகள், ஒப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்தது வேலையில் இருப்பவர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு இந்த மாதிரி காரணங்களுக்காக இருக்கும் வேலையை உதறிவிட்டு புதிய வேலைக்கு முயற்சிக்க கூடாது. இந்த நேரம் இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
அஷ்டமச் சனியும் ஆயுளும்
அஷ்டமச் சனியால் ஆயுள் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. உண்மையில் இழுத்துக்கோ பரிச்சுக்கோ என மரணப்படுக்கையில் இருப்பவர்கள் நன்கு தேறி அமர்வார்கள். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டு விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம். எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.