
இரவு 7 மணிக்கு முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப்பொருள்கள் உள்பட 21 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரோனா நோய்த்தொற்று முழுமையாக அழிந்து போகவும் சிறப்பு மந்திரம், பிரார்த்தனை, 1,008 லிட்டரில் சிறப்பு பால்அபிஷேகம் ஆகியவை நடந்தது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சமுக இடைவெளியுடன் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.