
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 28 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி மக பெருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முன்னதாக கோவில் வளாகத்துக்குள் அமைந்துள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் எழுந்தருளினார். இதை தொடர்ந்து குளத்தில் தெப்பம் சுற்றி வலம் வந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் தென்னரசு தலைமையில் வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.