
பின்னர் கொடிப்படம் கோவிலை வலம் வந்து கொடிமரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மாரியம்மன் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்து வந்து கம்பத்தில் வைத்தலும், தீபாராதனையும் நடந்தது.
பின்னர் மாரியம்மன் பெரிய தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோவிலிலும், குமாரசமுத்திரம் அழகு நாச்சியம்மன் கோவிலிலும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் இரவில் சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது.