
இதையடுத்து சேலம் மாவட்டம் எடப்பாடி பெரியநாச்சிபாளையத்தை சேர்ந்த வையாபுரி என்ற பக்தர் ரூ.7 லட்சம் மதிப்பிலான ஒளிரும் மின்விளக்குடன் கூடிய வேலை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அந்த வேல் கோவிலின் வடக்குப்பகுதியில் பொருத்தப்பட்டு மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்றது. அந்த பணிகள் நிறைவுற்றதால் நேற்று அதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்படி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். முன்னதாக அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு பழனி மலைக்கோவிலில் மின்விளக்கு வடிவிலான வேல் ஒளிர்ந்தது. இதை பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.