
மகா தீபம் ஏற்ற சுமார் 5 அடி உயரம் கொண்ட செம்பினால் தயார் செய்யப்பட்ட தீப கொப்பரையில் ஏற்றப்படும். 29-ந்தேதி ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பக்தர்களுக்கு காட்சி தரும். மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது.
இந்த 3,500 கிலோ நெய் திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிர்வாகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெய் நேற்று மாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக ராஜகோபுரம் அருகே தனி கவுண்ட்டர் அமைத்து ஒரு கிலோ நெய் ரூ.250-க்கும், ½ கிலோ நெய் ரூ.150-க்கும், ¼ கிலோ நெய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.