
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ
ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகளால் பாடப்பட்ட கந்த குரு கவசத்தில் இந்த மந்திரம் இடம்பெற்றுள்ளது. ஒரு மனதோடு இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிப்போருக்கு முக்தி என்பது நிச்சயம் அதோடு எம பயம் என்பது அறவே நீங்கும். அது மட்டும் அல்லாது முருக பெருமான் ஒளிச்சுடராய் நம் மனதில் நிலைகொள்ள இந்த மந்திரம் உதவுகிறது. நாம் எண்ணிய அனைத்தும் இந்த மந்திரம் நமக்கு நிறைவேற்றி தரும்.
எண்ணிலடங்கா பல அறிய பலன்களை இந்த மந்திரம் மூலம் நாம் பெறலாம். ஆகையால் இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 , 1008 , 10008 , 100008 அல்லது அதற்கு மேல் என்று உங்களால் எத்தனை முறை ஜபிக்க முடியுமோ அத்தனை முறை முருகனை நினைத்து ஜபித்து முருகனின் அருள் பெறலாம்.