
இதனை முன்னிட்டு அன்று காலை கணபதி ஹோமம், 11 மணிக்கு தட்சிணாமூர்த்தி ஹோமம், இரவு 8 மணிக்கு குருஹோமம், 9 மணிக்கு குருபகவானுக்கு 13 வகையான அபிஷேகம், அலங்காரம், 9.50 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
தீபாராதனையில் மகரம், கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பரிகாரம் நடத்தப்படுகிறது. இதேபோல், மீனம், ரிஷபம், கடகம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளுக்கு அர்ச்சனையும் நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.