
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல கட்டுப்பாடுகளுடன் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.
இந்த நிலையில், நேற்று தபசுக்காட்சி நடைபெற்றது. இதையொட்டி, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தங்கச்சப்பரத்தில் டவுன் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் பகல் 11 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி அளித்தார். பின்னர், நெல்லையப்பருக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றிக்கொள்ளும் வைபவம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து சுவாமி- அம்பாள், நெல்லை கோவிந்தர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டும் வைபவம் நடந்தது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் இணையத்தின் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.