
இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. வருகிற 20--ந்தேதி திருவிழா தொடங்குகிறது.29--ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா நடைபெறாது என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை தீபத் திருவிழா பல்லாண்டுகளாக தடையின்றி நடந்து வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவது தெய்வ குற்றம் ஆகும். எனவே தீபத்திருவிழா தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா வுக்கு தடை விதிக்கக் கூடாது. தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் தேவையான கட்டுப்பாடுகளை விதித்து வழக்கம்போல் தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தீபத் திருவிழா தேரோட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.