
பின்னர் அனுக்ஞை மற்றும் வாஸ்து பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை விமானங்கள் சக்தி ஆகர்ஷணம், கும்ப ஸ்தாபனம் மற்றும் ஹோமங்கள் நடந்தது. பின்னர் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. இதையடுத்து மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சாமிகள் முன்னிலையில் தேரழுந்தூர் கோசகன் பட்டாச்சாரியார் தலைமையில் விமான பாலாலய பிரதிஷ்டை கும்ப புரோஷணமும், தீபாராதனை சாற்றுமுறையும் நடந்தது.
முன்னதாக பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.