
ஒரு சமயம் சிவனிடம் அரிய வரம் பெற்ற ராவணன் நவக்கிரகங்களை அடக்கி தன் வீட்டில் படிக்கட்டுகளாக குப்புறப் போட்டு வைத்திருந்தான். அதை பார்த்த நாரதர், ராவணா சனியை நேருக்கு நேர் பார்க்க பயமா? என்று கேட்டார்.
உடனே ராவணன் ஆவேசத்துடன், சனியே என்னை நன்றாக நிமிர்ந்து பார் என்று கூறினான். சனியும் நிமிர்ந்து பார்க்க, மறு வினாடியே ராவணனிடம் இருந்த சக்தி பலம், வீரம், வரம் எல்லாம் போய் விட்டது. அவனை ராமர் மிக எளிதாக வென்றார். சனியின் பார்வைக்கு இத்தகைய அபார சக்தி உண்டு. சனி பார்வை தனித்துவம் கொண்டது என்பதற்கு இது போன்று பல உதாரணங்களை சொல்லலாம்.