
இந்தநிலையில் நேற்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வந்தனர். நேற்றைக்கு முன்தினம் நள்ளிரவில் பெய்த மழையால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓடையில் நீர்வரத்து குறைந்து உள்ளது எனவும், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு, வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். அத்துடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கலாமா? என வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த பக்தர்கள் காலை 10 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய சென்றனர்.