
அன்று கல்லறை தோட்டங்களில் கூடி மறைந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதியன்று இந்த வழக்கத்தை தவிர்க்கும்படி சென்னை கல்லறைகள் அமைப்பு அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம் மற்றும் தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் ஆலோசனைப்படி, இந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதியன்று கீழ்ப்பாக்கம், காசிமேடு ஆகிய கல்லறை தோட்டங்களை பூட்டிவைப்பது என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாகவும், சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிவுரைகளின் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பொதுமக்கள் யாரும் அன்று கல்லறைத் தோட்டங்களுக்கு வரவேண்டாம். நவம்பர் மாதத்தின் மற்ற நாட்களில் மக்கள் வந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.