
கார், வேன், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்கள் வாகனங்களை கிழக்கு கிரிவீதி, மேற்கு கிரிவீதி அருகே உள்ள பஸ்நிலையங்களில் நிறுத்தினர். இதனால் பூங்காரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் அவ்வப்போது நெரிசல் ஏற்பட்டது. பழனி மலைக்கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.