
நேற்று மாலை 5 மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை அம்மன் கொலு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு இரவு ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். தற்போது, ஊரடங்கு உத்தரவு காரணமாகவும், சமயபுரம் தடை செய்யப்பட்ட பகுதியாக இருப்பதாலும், இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா அம்மன் புறப்பாடு நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.