
இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு கோவிலில் கொடியேற்றப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு யாக சாலை ஹோமம் மற்றும் திருமஞ்சனமும், 26-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 27-ந் தேதி புரட்டாசி திருவோண கருடசேவையும், 29-ந் தேதி 1008 சகஸ்ரநாம அர்ச்சனையும், ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.