
நாம் உண்மையான பக்தியுடன் இறைவனை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், நம்மை விருப்புகிற இறைவனும் நம்மை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார். இந்து மதத்தில் உக்கிர தெய்வங்கள் எனப்படும் சக்தி மிகுந்த தெய்வங்களை வழிபடுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் விரதம் அனுஷ்டித்து பின்பு வழிபடுவதால் நமது அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து, நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகிறது.
நைஷ்டிக பிரம்மச்சாரியாக சபரிமலையில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பனை 48 நாட்கள் விரதம் இருந்து, சபரிமலையில் வழிபட இருக்கும் காலத்தில் எப்படி நாம் திரிகரண சுத்தியுடன் இருந்து பூஜிக்கிறோமோ, அதே திரிகரண சுத்தியுடன் தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஐயப்பனை மனதார வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் எப்படிபட்ட கஷ்டங்களும் நீங்கும். உங்களின் மனக்குறைகள் தீரும். நீங்கள் நடக்க விரும்பும் காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்க தொடங்கும். துஷ்ட சக்திகள் மற்றும் தீய எண்ணங்கள் உங்களை அணுகாது காக்கும்.