
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் நாள் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து பூஜை செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ., கர்நாடக மாநில கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், ஆர்.காந்தி, சோளிங்கர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோமநாதபுரம் சின்னதுரை, மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, வன்னிய குல ஷத்திரிய மரபினரின் 6-ம் நாள் யானை வாகன பெருவிழா கமிட்டி செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கவுதமன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் குப்பத்தா மோட்டூர் ஆனந்தன், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், அறநிலையத்துறை உதவி ஆணையர் சுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் நிர்மலா, அ.தி.மு.க. மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பொன்னுரங்கம், ஸ்ரீசைலம், வினோத்ராஜன் ,சோளிங்கர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. அணிகளின் நிர்வாகிகள் வி.எஸ்.மணி, ராமச்சந்திரன், ராமசாமி ரெட்டி, காட்டூர் ராஜா, ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் சிவகுமார், ஆதிகேசவன், கிளை செயலாளர் தயாளன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், அறநிலையத்துறையினர், மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள், தொல்லியல்துறையினர், தேர் உற்சவதாரர்கள், உபயதாரர்கள், விழாக்குழுவினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி தேர் இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை இழுத்து வந்து மலைசுற்று பாதையில் உள்ள துண்டுகரை என்ற இடத்தில் நிறுத்தினர்.
பின்னர் இரவு தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) துண்டுகரையில் இருந்து தேர் புறப்பட்டு மலையை சுற்றி வருகிறது. வருகிற 8-ந்தேதி தேர் நிலைக்கு வந்து சேருகிறது. 9-ந் தேதி காலை வேடற்பரி உற்சவ நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து வள்ளியம்மை, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, பல்வேறு சமுதாய மரபினர், திருவிழா உற்சவ குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.