
ஆலயம் காலை ஆறு முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை மூன்று முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திறந்து உள்ளது. ஆலயம் ஏழாம் அல்லது பதினொன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள். ஆனால் நிச்சயமாக ஆலயம் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டு உள்ளதாம். சோழ மன்னர்கள் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டது. அதனால் இந்த ஊரும் திருவாளர் வான் மீகி எனும் பெயரைத் தரும் திரு வான்மீகி என ஆகி பின்னர் மருவி திருவான்மீயூராகியது.
இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாலயத்திற்கு வந்து தமது நோயை நீக்கி சுகம் பெற்றவர்கள் பலர். அதே போல இது ஒரு சாப விமோசனத் தலமும் ஆகும்.