
பின்னர் விநாயகர், முருகன் மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாள் கோவிலிலிருந்து புறப்பட்டு 5 மண்டகப்படிக்கு சென்றதும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர் சேவுகன் மற்றும் கோவில் செயல் அலுவலர் இளஞ்செழியன் உள்பட சோழவந்தான் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலிலும், சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா நடைபெற்றது.
மேலூரில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் அஷ்டமி சப்பர வீதி உலா நடந்தது. சிவன்கோவிலில் இருந்து தனித்தனி வாகனம் மூலம் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன் , சண்டிகேஸ்வரர் மற்றும் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் காமாட்சி தாயாருடன் வீதி உலா வந்தனர்.
இந்த வீதி உலாவின் போது சுவாமியின் பின்னால் சென்ற பெண்கள் அனைவரும் பச்சரிசி மாவினை எறும்புகளுக்கு உணவு அளிக்கும் விதமாக தூவி சென்று வழிபட்டனர்.