
திருவிழாவையொட்டி காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
திருக்கார்த்திகை தினமான நேற்று கோவிலில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரை குளம், அம்மன், சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் ஆகிய இடங்கள் முழுவதும் லட்சதீபம் ஏற்பட்டது. அதனை காணும் போது தீப அலங்காரத்தில் கோவில் ஜொலித்தது போன்று இருந்தது.
பின்னர் இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதி சென்றனர்.
அங்கு அம்மன் தேரடி அருகிலும், சுவாமி தேரடி அருகிலும் ெசாக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.