
அப்போது சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் வைக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானை ஆண்டாள் தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த முகூர்த்தக்காலை சுற்றி 5 அடி அகலத்திற்கும், 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.