
முதல் திருநாள் மற்றும் ஏழாம் திருநாட்களில் நம்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரு உபய நாச்சியார்களுடன் ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். ஏழாம் திருநாளன்று சூர்ணாபிஷேகம் மற்றும் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். சாற்று மறையான ஒன்பதாம் திருநாளன்று காலை புறப்பாடு கண்டருளி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரியும், ஊஞ்சல் மண்டபத்தில் தங்க பாத்திரங்களினால் திருமஞ்சனமும் நடைபெறுகிறது. நம்பெருமாளை ஊஞ்சலில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளச்செய்து இருபுறமும் சாமரம் வீச நாதஸ்வர இசையுடன் ஊஞ்சல் ஆட்டப்பெறுவது கண்கொள்ளா காட்சியாகும்.
16-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு மூலஸ்தானத்தை அடைகிறார். இரவு 7.15 மணிக்கு அலங்காரம் கண்டருளி ஊஞ்சல் சேவை ஆரம்பமாகும். 8.15 மணிக்கு ஊஞ்சல் சேவை முடிந்ததும் புறப்பாடாகி 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையும், 23-ந்தேதியும் நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பாடாகி 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார். 7.15 மணி முதல் 8.15 மணி வரை ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. இரவு 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார். 17-ந்தேதி காலை 6 மணி முதல் 7.15 மணி வரை விஸ்வரூப சேவை உண்டு. காலை 9 மணி முதல் முதல் 12 மணி வரையும், பகல் 1.15 மணி முதல் 4 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையும் மூலஸ்தான சேவை நேரம் ஆகும்.
18-ந்தேதி காலை 6.45 மணி முதல் 8 மணி வரை விஸ்வரூப தரிசனம் உண்டு. காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பகல் 1.15 மணி முதல் 4 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையும் மூலவர் சேவை நேரம் ஆகும். இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
22-ந்தேதி ஊஞ்சல் சேவை கண்டருள நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மாலை 6.45 மணிக்கு நம்பெருமாள் நெல்லளவு கண்டருளி தாயார் சன்னதியில் திருவந்தி காப்பு கண்டருளுகிறார். இரவு 8.15 மணிமுதல் 9.15 மணி வரை ஊஞ்சல் சேவை கண்டருளுகிறார். இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
22-ந்தேதி காலை 6.45 மணி முதல் 8 மணி வரை விஸ்வரூப தரிசனம் உண்டு. காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பகல் 1.15 மணி முதல் 4 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் சேவை நேரம் ஆகும். இரவு 9 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
24-ந்தேதி காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 9.45 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் சேவை கண்டருளுகிறார். இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 24-ந்தேதி விஸ்வரூப தரிசனம் கிடையாது. காலை 9.15 மணிமுதல் 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சேவை நேரம் ஆகும். இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.