
நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே முகூர்த்த ஓலை எழுதுகிற பொழுது, மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறிப்பார்கள், குறித்து முடித்ததும் அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பர். ஆனால் முகூர்த்த ஓலை எழுதுகிற பொழுது கீழிருந்து மேல்நோக்கி மஞ்சள் தடவ வேண்டும்.
பெண்ணிற்கு பொருத்தமான, மாதவிலக்கு இல்லாத நாளாகத் தேர்ந்தெடுத்து அத்துடன் யோகம், திதி, வாரம், நட்சத்திரம், லக்னம் அனைத்தும் பார்த்து திருமண ஓலை எழுத வேண்டும்.
அதை வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து விநாயகர் படத்தின் முன்னால் நின்று சம்பந்தம் செய்து கொள்பவர்கள் ஒருவருக்கொருவர் தாம்பாளத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். திருமண முகூர்த்தம் குறிக்கும் போது நேர்மறைச் சொற்களையே பேச வேண்டும்.