
.ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.
தவக்காலம் தொடங்கும் நாள் ‘சாம்பல் புதன்' ஆகும். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். வருகிற 17- ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி வேளாங்கண்ணிக்கு மாதா பேராலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.