
பின்பு புதிய கொடி மரத்தை அர்ச்சிப்பு செய்து திருவிழா கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அர்ச்சிப்பு திருப்பலி மேலாளர் சூசை மாணிக்கம் தலைமையில் நடந்தது. அருட்தந்தை பங்கு பணி தாமஸ் மறை உரை நிகழ்த்தினார். பங்கு பணியாளர் சிங்கராயர் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் ரிச்சர்ட் அற்புத குழந்தை ஏசு ஆலயம் வரலாற்றினை எடுத்துக்கூறினார்.
சிவகங்கை மறைமாவட்ட திருவெளிப்பாட்டு பணிக்குழு செயலாளர் அருட்தந்தை யோசுவா மற்றும் திருவரங்கம் திரு இருதய பள்ளியின் தாளாளர் சிங்கராயர் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். ஆனந்தா கல்லூரி பேராசிரியர் அருள்தந்தை டென்சிங் பாடல் குழுவினர் வழிநடத்தினர்.
இதில் ஏராளமான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், மரியா, மகிமை மெடிக் கல்ஸ் உரிமையாளர் சார்லஸ், பரமக்குடி கமிஷன் கடை உரிமையாளர்கள் இருதயம், செபஸ்தியான், மாணிக்கம், சந்தியாகு, சார்லஸ், சேசு அருள், அந்தோணிச்சாமி, சூசை ரெத்தினம், தோமையார், தாமஸ் ஆரோக்கியராஜ், ஜெரால்டு, ஸ்டீபன் பன்னீர்செல்வம், குழந்தை தனிஸ்லாஸ், ஜார்ஜ் தாமஸ், அந்தோணி, குழந்தை ராஜ், சேவியர், சூசை மாணிக்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.