
இதை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு ஜெபமாலை, நவநாள், நற்கருணை கொண்டாட்டம் ஆகியவை அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் அல்போன்ஸ் மறையுரை நிகழ்த்துகிறார்.
மாலை 5 மணிக்கு ஜெபமாலை நவநாள் கொடி பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், நற்கருணை கொண்டாட்டமும் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசு ரத்தினம் தலைமையில் நடக்கிறது.
நாளை (புதன்கிழமை) மாலையில் அருட்பணியாளர் டோமினிக் சாவியோ தலைமையில் நடக்கும் நற்கருணை கொண்டாட்டத்தில் அருட்பணியாளர் ஜார்ஜ் மறையுரை நிகழ்த்துகிறார். 24-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆனந்த் தலைமையிலும், 25-ந் தேதி காலை 10 மணிக்கு அருட்பணியாளர் மார்ட்டின் தலைமையிலும், மாலை 5 மணிக்கு அருட்பணியாளர் ஆல்பர்ட் தலைமையிலும், 26-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆல்வின் விஜய் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.
27-ந் தேதி காலை 8 மணிக்கு முதல்திருவிருந்து விழா கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையிலும், 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.
மார்ச் 1-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாளத்திலும், 9.30 மணி, 11 மணிக்கு தமிழிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் மற்றும் திருவிழா நிறைவு நற்கருணை கொண்டாட்டம் நடைெபறும். நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார்.
திருவிழா ஏற்பாடுகள் பங்கு அருட்பணியாளர் அந்தோணி எம்.முத்து, இணை பங்கு அருட்பணியாளர் மரிய மார்ட்டின், அருள் வாழ்வு வழிகாட்டி அருட்பணியாளர் டென்சிங், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜோசப் கிரேசியஸ், செயலாளர் லில்லி பாய், பொருளாளர் தங்கையன், துணைச் செயலாளர் பிரைட் சிங் ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.