
13, 14-ந்தேதிகளில் இரவு 7.30 மணிக்கு பஜனை பிரசங்கம் நடக்கிறது. 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சி நடக்கிறது. 16-ந்தேதி தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தலைமையில் பிரதிஷ்டை பண்டிகை நடக்கிறது. காலை 9 மணிக்கு எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கணம் ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு அசன வைபவ மங்களகால் நடுதல், மாலை 4 மணிக்கு பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும், இரவு 7 மணிக்கு ஆயத்த பண்டிகை ஆராதனையை கன்னியாகுமரி திருமண்டல பேராயர் செல்லையா நடத்துகிறார்.
வருகிற 17-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் நடத்துகிறார். காலை 8 மணிக்கு கணம் ஜான் தாமஸ் ஐயர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், 6.15 மணிக்கு உலை ஏற்றும் வைபவம், மதியம் 3 மணிக்கு அசன வைபவம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மெஞ்ஞானபுரம் பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், துணை தலைவர் ஜெரால்டு ஜான்சன், செயலாளர் நவமணி ராபர்ட், இணை செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், தலைமை குருவானவர் கோல்டுவின், உதவி குருவானவர் ஐசக்துரை ஜோயல், திருப்பணிவிடையாளர் எட்வின் ஜெபராஜ், சபை ஊழியர் பிளசிங் ஜிம்ரோஸ் மற்றும் சபைமக்கள் செய்து வருகின்றனர்.