
5-ம் நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை, இரவு 7 மணிக்கு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து முக்கிய நிகழ்ச்சியான காணிக்கை அன்னை திருச்சப்பர மெழுகுவர்த்தி பவனி, 9-ம் நாள் காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு மாலை ஆராதனை ஆகியவை நடந்தது.
10-ம் நாள் விழாவான நேற்று காலை 6 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் தலைமையில் இளங்குரு மட அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் மறையுரை ஆற்றினார். 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி பெருவிழா திருப்பலி நிைறவேற்றி மறையுரையாற்றினார்.
இதில், குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், தூய காணிக்கை அன்னை திருத்தல பங்குத்தந்தை மரிய செல்வன், இணை பங்குத்தந்தையர், அருள் பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருள் சகோதரிகள் மற்றும் பங்கு நிர்வாக குழுவினர், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து திருக்கொடி இறக்கம், புத்தக கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைந்தது.