
அங்கு ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 3 நாட்கள் நடைபெறும் பாஸ்கு விழா சிறப்பு வாய்ந்தது. இதில் ஏசு பிறப்பு, இறப்பு, உயிர்தெழுதல் உள்ளிட்டவை நாடகமாக நடத்தப்படும்.இந்த தேவாலயத்தில் கடந்த ஒரு வருடமாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன.பணிகள் முடிந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) தேவாலய அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது.
விழா குறித்துஅருட்தல பணியாளர் ரெமிஜியஸ் கூறுகையில்,புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமையன்று அர்ப்பணிப்பு விழா நடைபெறுகிறது. சிவகங்கை மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜோசப் லூர்து ராஜா தலைமையில் நன்றி வழிபாடும், சிவகங்கை மறை மாவட்டஆயர் சூசைமாணிக்கம் கூட்டுத்திருப்பலி தொடங்கி வைக்கிறார்.கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைைமயில் மாலைத்திருப்பலி நடைபெறவுள்ளது என்றார்.
இரவில் திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை மரியின் ஊழியர் அருள்சகோதரிகள், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர். ஆண்டின் முதல் வெள்ளி மற்றும் தேவாலய அர்ப்பணிப்பு விழா நடைபெறுவதால் பல்வேறு இடங்களிலிருந்து தேவாலயத்திற்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.