
9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, 7 மணிக்கு சகல புனிதர்கள் திருவிழா திருப்பலியும் நடக்கிறது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், இணை பங்கு தந்தைகள் ஜோஸ் ஜெ.பெஸ்க், சகாய ஜெரோம், பங்கு இறை மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள் செய்துள்ளனர்.