
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
18.4.22 முதல் 24.4.22 வரை
ஆதாயமான வாரம். 7-ம் அதிபதி குரு 7-ல் ஆட்சி பலம் பெற்றதால்கூட்டுக் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் கட்டுப்படும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் துறையினரின் வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் துவங்கும் திட்டங்கள் நிறைவேறும். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும்.
உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை தொழில், வேலை பற்றி சிந்திக்காதவர்கள் கூட வருமானம் சம்பாத்தியம் பற்றி யோசிப்பார்கள்.வீடு, வாகன பிராப்தம் உண்டு. 2,9-ம் அதிபதி சுக்ரன் 3,8-ம் அதிபதி செவ் வாயுடன் 6ம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத் தில் இணைந்து நிற்பதால் சகோதர, சகோதரிகள் அல்லது தந்தையின் கடன் மற்றும் ஜாமீன் தொகைக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் உண்டாகும்.
திருமண முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பாசிப்பருப்பு பாயாசம் படைத்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் பலமும் வளமும் கூடும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2022 முதல் 14-05-2022 வரை
பின்விளைவைப் பற்றி சிந்தித்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் அஷ்டமத்தில் மறைந்திருக்கிறார். மறைந்த புதன் நிறைந்த தன லாபம் தருவார். அதுமட்டுமல்ல, குருவின் பரிபூரண பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மீன - சுக்ரன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு மாதப் பிறப்புக்கு முன்பாகவே பெயர்ச்சியாகும் குருவோடு இணைகிறார். அசுர குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உச்சம்பெறும்பொழுது மித மிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. குருவின் நேரடிப் பார்வை ராசியில் பதிவதால் மனக்கசப்பு மாறும்.
ரிஷப - புதன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சஞ்சரிப்பது யோகம்தான். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்போடு சில நல்ல காரியங்களை முடித்துக்கொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பணி நிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வந்துசேரும். புதிய வேலையில் சேரும் வாய்ப்பு கைகூடும்.
புதன் வக்ர இயக்கம்
சித்திரை 17-ந் தேதி ரிஷபத்தில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. துணிவும் தன்னம்பிக்கையும் குறையும். வாகனப் பழுதுகளும், அதனால் விரயங்களும் ஏற்படலாம். தெய்வ வழிபாடுகளும், பரிகாரங்களுமே இக்காலத்தில் உங்களுக்கு கைகொடுக்கும்.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 21-ந் தேதி, மேஷ ராசிக்கு வக்ர இயக்கத்தில் புதன் பின்னோக்கி வருகிறார். அங்கு, உச்சம் பெற்ற சூரியனோடு இணைந்து ‘புத ஆதித்ய யோக’த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இடமாற்றங்கள் இனிமை தரும். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன் உச்சம் பெற்றிருக்கிறார். குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்களும், சொந்த வீட்டில் சஞ்சரிக்கின்றன. எனவே சிந்தனையும் செயலும் ஒருங்கே அமையும்.
இம்மாதம் வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள் வழங்கும் கற்பக விநாயகரை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 17, 18, 21, 22, மே: 2, 3, 7, 8, 9, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். நீடித்த நோய் அகலும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செல்லும். பிள்ளைகளின் உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும். பணிபுரியும் பெண்களுக்கு மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவோடு சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆண்டு பலன் - 2022
வசீகரமான தோற்றம் கொண்ட கன்னி ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டில் மன நிறைவான சுகபோக வாழ்விற்கு மனம் ஏங்கும். அதற்காக கடுமையாக போராட நேரும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஏப்ரல் 2022 வரை வருட கிரகமான குருவினால் ஏற்படும் சுப பலன்கள் குறையும். ஏப்ரல் மாதத்திற்கு மேல் ராசிக்கு 7ல் செல்லும் குருவினால் சுப பலன்கள் மிகைப்படும்.
ஆண்டு முழுவதும் சனியின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. ஏப்ரல் 12, 2022 வரை ராகு/கேதுக்களால் பெரிய பாதிப்பு இருக்காது. ஏப்ரலுக்கு மேல் ராகு/கேதுக்களால் சற்று இன்னல்களை சந்திக்க நேரும். அனைத்து விதமான இன்னல்களில் இருந்தும் குரு பகவானின் பார்வை உங்களை காக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
குரு சஞ்சார பலன்: 13.4.2022 வரை 4, 7--ம் அதிபதி குரு 6ல் மறைவதால் கடன் பெற்று உங்களின் வீடு, வாகன கனவை நிறைவேற்றுவீர்கள்.
வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். தாய் வழிச் சொத்தால் தாய் வழி உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்படும்.
இதனால் தாயின் உடல் நிலையில் சற்று பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பல தலைமுறையாக பாதுகாத்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை குறைபடும். சிலருக்கு விவாகரத்தும் நடக்கலாம். வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். களத்திரத்தின் மூலம் சில வீண்மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரும். தொழில் கூட்டாளிகளால் கடன் உருவாகலாம் அல்லது புரிதல் இன்மையால் பிரியலாம். நண்பர்களின் சொந்த விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது.
குருபகவான் பெயர்ச்சியாகி ஏழாடமிடமாகிய மீனத்திற்கு ஏப்ரல் 13ல் செல்லும் போது 6ம் இடத்து குருபகவானால் ஏற்பட்ட இன்னல் முற்றிலும் அகலும். சம்பந்திகள் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சொத்து வாங்கும் முயற்சியில் வாழ்க்கை துணையின் பங்களிப்பும் இருக்கும். வீடு அல்லது தொழில் நிறுவனங்களை மாற்ற நேரும். மன சஞ்சலத்தால் மதம் மாறியவர் மீண்டும் சொந்த மதத்திற்கு மாறுவார்கள். சில உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொத்து தொடர்பான கோர்ட் பிரச்சனைகள் சாதகமாகும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் மாறும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதியவாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன்காரர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலை மாறும்.
சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் 5-ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். சனி பகவான் கன்னி ராசிக்கு 5, 6-ம் அதிபதி. உங்களின் ஐந்தாம் அதிபதி சனி ஐந்தில்ஆட்சி பலம் பெறுவதால் நடக்குமா ? நடக்காதா? என உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும். உங்களின் துன்பங்கள், துயரங்களுக்கு விடிவு காலம் வந்துவிட்டது. இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கி கிடைப்பதற்கரிய பல நற்பலன்கள் உங்களை தேடி வரும். தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஓய்வு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவீர்கள்.
இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும்.கூப்பிட்ட குரலுக்கு உங்களின் குல தெய்வம் ஒடி வரும் 26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை 3, 8-ம் அதிபதியான செவ்வாய் 5-ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்ற சனியுடன் இணையப் போகிறார். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோகத்தில் பதவி இறக்கம் உண்டாகும் அல்லது பதவி விலக நேரும். சிலர் அதிர்ஷ்டத்தை துரத்தி கால விரயம் செய்வார்கள். தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள். அல்லது கடனுக்காக சொத்தை இழக்க நேரலாம்.
கன்னி ராசியினர் சொத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளுக்காக அதிக பொருள் விரயம் செய்ய நேரும். சிலர் நண்பர்கள், உறவினர்களின் விஷயத்தில் மாட்டி தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவார்கள். அண்டை, அயலாருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். யாருக்கும் ஜாமீன், கியாரண்டி போடக் கூடாது.
3, 8-ம் அதிபதிகளின் சம்பந்தம் ஏற்படுவதால் வாகன விபத்து ஏற்படும். வாகனங்களை இயக்கும் போது அதிக கவனம் தேவை. வாகனத்தை உரிய பாதுகாப்பு கவசத்துடன் இயக்க வேண்டும்.
ராகு/கேது சஞ்சார பலன்: 12.4.2022 வரை 3ல் கேதுவும் 9ல் ராகுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம் என்பதால் ஞானமார்கத்தில் மனம் லயிக்கும். தீர்த்தயாத்திரை செல்ல ஆர்வம் ஏற்படும். பித்ரு கடனை முறைப்படுத்தி பாக்கியப் பலனை அதிகரிப்பீர்கள். குரு உபதேசம் கிடைக்கும். ஆன்மீகப் பெரியோர்களின் நட்பும் நல்லாசியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் தொடர்பான சர்ச்சைகள் நீங்கும்.
தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர்களின் நல்லாசிகள் கிட்டும். ஆத்மஞானத்தை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆலயத் திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்வர்களுக்கு சமுக அந்தஸ்தை நிலைப்படுத்தும் கௌரவப் பதவிகள் கிடைக்கும்.
வீடு, வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும்.
ஏப்ரல் 12-ல் 2-ல் கேதுவும், 8ல் ராகுவும் பெயர்ச்சியாகும் போது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் உண்டாகும். கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும். சம்பாதித்த அனைத்தையும் பாதுகாப்பது அவசியம். சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம்.
சில குழந்தைகள் மாற்றாந்தாயிடம் வளரும் நிலை ஏற்படலாம். குழந்தைகளுக்கு மந்தத் தன்மை ஏற்படும். நரம்பு தொடர்பான சிறு பாதிப்பு இருக்கும். பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும். அவ்வப்போது உடல் களைப்பு, அசௌகரியங்களால் அவதி ஏற்படும்.
திருமணம்: வெகு சிலருக்கு ராசிக்கு 5ம் இடத்தில் உள்ள சனியின் 3ம் பார்வை ஏழாம் இடத்தில் பதிவதால் திருமணம் தடைபடலாம் ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குப் பெயர்ச்சியானவுடன் நிறைய வரன்களின் ஜாதகம் வந்து குவியும். ஆனால் தகுதியான வரனை தேர்ந்தெடுக்கிறேன் என்று காலம் தள்ளுவார்கள்.
பலர் அழகான மாப்பிள்ளை, மணப்பெண்ணை எதிர்பார்த்து தாங்களே திருமணத் தடையை உருவாக்குவார்கள்.சில பல விசயங்களில் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால் பலருக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணத் தடை இருக்கும் வாய்ப்பு மிகமிக குறைவு.
பெண்கள்: ஏப்ரல்13,2022 வரை பெண்கள் வாழ்க்கைத் துணையிடம் வீண் வம்பைத் தவிர்ப்பதுடன் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் உங்களின் பேச்சு எடுபடும். கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர் நீங்கள் மனதில் நினைப்பதையும் நினைக்காததையும் செய்வார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப் பட்டு இருப்பார்கள்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். விவசாயமும் செழிக்கும். பணமும் செழிக்கும். விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும். இரண்டு வருட லாபத்தை ஒரே வருடத்தில் பார்ப்பீர்கள். புதிய விவசாயக் கருவிகள் வாங்குவீர்கள். கால்நடை பண்ணைகள் அமைப்பீர்கள். பலருக்கு வேலை கொடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். புதிய பொறுப்புகள் வழங்கப்படும். மதிப்பு, மரியாதை சமூக அந்தஸ்து உயரும். வேலைப் பளு குறையும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்பிற்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: சொந்த தொழில் ஆரம்பிக்க விருப்புபவர்களுக்கு விரும்பிய தொழில் வாய்ப்பு தேடி வரும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஏற்கனவே கையிருப்பில் இருந்த பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனையாகும். தொழில் கூட்டாளிகளிடம் நல்லுறவு நீடிக்கும்.பல புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.பழைய பாக்கிகள் வசூலாகும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகளுக்கு மிகச் சாதகமான காலம். மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆக்க பூர்வ பணிகளை செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள்இழந்த பதவி உங்களை தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். அரசு சார்ந்த பணிகளில் மக்களுக்கு பயன்படும் பல்வேறு நலன்களை செய்து பொது மக்களின் நல் ஆதரவை பெறுவார்கள்.
மாணவர்கள்: புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும்.கல்லூரி, உயர்கல்வியில் இருந்த தடைகள் அகலும். ஆனால் எந்த கல்லுரியில் சேர்வது,என்ன படிப்பு தேர்வு செய்வது போன்ற மனக்குழப்பம் ஏற்படும்.சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.அரியர்ஸ் பாடத்தில் தேர்ச்சி பெறுவார்கள். சிலருக்கு ஞாபகக் குறைவு இருக்கும்.
உத்திரம் 2,3,4: புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டு பல தொழில் கிளைகளை திறந்து, தொழில் விரிவு செய்வீர்கள். எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைவீர்கள். நல்லவைகள் தொடர தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
ஹஸ்தம்: உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றி தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்.பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடித்தால் நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும். வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்து வர முத்தாய்ப்பான மாற்றங்கள் தேடிவரும்.
சித்திரை 1,2: இதுவரை எந்த வேலையும் செய்யாதவர்ககள், தெரியாதவர்களுக்கு கூட வாழ்வாதாரத்திற்கு தேவையான வேலை, தொழில் வாய்ப்பு கிடைத்தே தீரும். தீராத கடன், நஷ்டம், ஆபத்து, சிக்கல்கள் விலகி நிம்மதி பிறக்கும். செவ்வாய்கிழமை அரளிப் பூ சாற்றி முருகனை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சுபகிருது வருட பலன்
புத பகவானின் ஆசி பெற்றகன்னி ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்டம் உங்களுடன் உறவாட நல் வாழ்த்துக்கள்.
உங்கள் ராசிக்கு 8ம் இடத்திற்கு ராகு பகவானும், 2ம் இடத்தில் கேது பகவானும் சஞ்சரிக்கிறார். குரு பகவான் 7ம் இடத்தில் நிற்கிறார். சனி பகவான் 5,6 ம் இடத்தில்பயணிக்கிறார்.7ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் ஒருவருட காலத்திற்கு குருவின் பார்வை கவசமாககாக்கும் என்பதால் தைரியமாக, தெம்பாக இருக்கலாம். 8ம்மிட ராகு விபரீத ராஜ யோகத்தை தர விருக்கிறார்.
2ம்மிட கேதுவால் சில மன சஞ்சலம் ஏற்படலாம். 17.1.2023 வரை சனியின் சஞ்சாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் விதத்தில் உள்ளது. சனி பூர்வ புண்ணியத்துக்கு காரகன்என்பதால் குல தெய்வ அனுகிரகம் மற்றும் முன்னோர்களில் நல் ஆசிகள் உள்ளது. எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும். ஆன்ம பலம் பெருகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.
குடும்பம்: ஒரு குடும்ப உறவுகளின் ஒற்றுமையை நிர்ணயிப்பதில் பணமும், சொத்தும் முக்கிய காரணியாக உள்ளது. பணம் குவியும் காலத்தில் உறவுகள் ரத்தின கம்பளம் விரிக்கும். பிற நேரத்தில் ஏளனப்படுத்தும்.இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்தில் கோட்சார கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போன்ற உணர்வு உண்டாகும்.யாரையும் பார்க்கவோ, பேசவோ பிடிக்காது. சிலர் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு வெளியூர் என வாழ நேரலாம். சிலர் உறவுகளிடம் மனஸ்தாபத்தால் தனிமையாக வாழ விரும்பலாம். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது.அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சம்பந்தமில்லாத குற்றத்தில் உங்களை மாட்டி வம்பு வழக்கை உருவாக்குவார்.
ஆரோக்கியம்:ராகு/கேது மற்றும் சனியால் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு இருக்கவே செய்யும். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆயுளை அதிகரிப்பார், ஆனால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடக் கூடிய நோய்களின் வீரியத்தை அதிகப்படுத்தி உடல் தளர்ச்சியையும் மனபயத்தையும்மிகைப்படுத்துவார். அவ்வப்போது உடல் களைப்பால் அவதி அசௌகரியங்களால்ஏற்படும். சிலருக்கு கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும்.
திருமணம்:8ல் ராகு, 2ல் கேது என்பதால்கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட்டுள்ளது. ராகு/கேது தசை, புத்தி நடப்பவர்கள் சுய ஜாதகத்தை பரிசீலிக்கவும். குரு தசை, புத்தி நடப்பவர்களுக்கு குரு பலத்தால் பெரியோர்களின் நல்லாசியால் திருமணம் விமரிசையாக நடக்கும்.
பெண்கள்: 8ம்மிட ராகு பெண்களுக்கு மாங்கல்ய தோஷத்தை தருவார் என்பதால் ஒரு நல்ல நாளில் மாங்கல்யத்தை தங்க செயினில் போடாமல் மஞ்சள் கயிற்றில் அணிந்து கொள்ளவும். சிலருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு வம்பு, வழக்கு வரலாம். இந்த ஒன்றரை ஆண்டுகள் தேவையற்ற பேச்சை குறைத்தாலே எந்த பாதிப்பும் வராது. அறிமுகம் இல்லாத பழக்கம் இல்லாத நபர்களிடம் குடும்ப விபரங்களை பகிரக் கூடாது. விலையுயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்க கூடாது. வாங்க கூடாது.காஞ்சி காமாட்சியை வழிபட தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
மாணவர்கள்:கல்வி முன்னேற்றத்திற்கு விடுதியில் தங்கி படிக்கலாம். ராசிக்கும் 3ம் இடத்திற்கும் குருப் பார்வை இருப்பதால் படிக்கும் பாடம் நன்றாக புரியும். இது வரை சுமாராக படித்தவர்கள் கூட நன்றாக படிக்க துவங்குவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள்.
உத்தியோகஸ் தர்கள்:அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடக்கும். ஆனால் வேலைப் பளு அதிகமாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கான ஊதியம் நற்பெயரும், அங்கீகாரமும் கிடைக்காது.
முதலீட்டாளர்கள்:சுய தொழில் புரிவர்களுக்கு தொழில் நடக்கும். தொழில் நடத்த தேவையான பொருளாதாரத்தை எப்படியாது திரட்டுவீர்கள். கூட்டம் கலை கட்டும். ஆனால் கல்லாவில் காசு இருக்காது. சிலர் பணத்தை இரட்டிப்பாக்குவது போன்ற செயல்களில் முதலீடு செய்து அதிர்ஷ்ட நம்பி பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. தொழில் கூட்டாளிகளால் வம்பு வழக்கு வரலாம். அனுசரித்துச் செல்ல வேண்டிய காலம் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள்:அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தையைக் கொண்டே உங்களுக்குகலகத்தை ஏற்படுத்துவார்கள். அதனால் களங்கம் தரும் வீண் விமர்சனம், கவுரவக்குறைவு உருவாகலாம்.
கலைஞர்கள்:கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாரப் பரிவர்த்தனையில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரமாண்ட வாய்ப்புகள் தேடி வரும்.திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தை மறு முதலீடாக மாற்றக்கடாது.
விவசாயிகள்:ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் விளைச்சல் மற்றும் அறுவடை நன்றாக இருக்கும்.பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் மிகுதியாக இருக்கும். கோட்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் குறுகிய கால பயிர்களை பயிரிட பாதிப்பு இருக்காது.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்
ராகு/கேது: 21.2.2023 முதல்கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராகு 8ம் இடத்திலும் கேது இரண்டாம் இடத்திலும் சஞ்சரிப்பதால் சுய சிந்தனை மட்டுப்படும். வந்த வாக்கிலும் போன வாக்கிலும் வாழ்க்கையை வாழ்வார்கள்.2,8ம்,இடத்துடன் ராகு- கேதுக்கள் சம்பந்தம் பெறும்போதுவட்டிக்கு வட்டிகட்ட நேரும். வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பு வராது. ரேஸ், சூதாட்டம், லாட்டரி போன்றவை மீளமுடியாத இழப்பில் கொண்டு நிறுத் தும்.குடும்பத்தில்உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும்.ஒவ்வாமை ஏற்படும் என்பதால் வெளி உணவினை சாப்பிடாமல் வீட்டில் சமைத்த சூடான உணவுகளை சாப்பிட வேண்டும்.
குரு:29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும் கோட்சாரசனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் பிள்ளைகளால் மன அமைதி குறையும். புத்திர பாக்கிய யோகத்தில் தடை ஏற்படும். உடல்நலம் பாதிக்கும்.அரசின் உதவித் தொகை கிடைப்பது தடைப்படலாம்.பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். சிலர் மதம் மாறலாம் அல்லது கலப்புத் திருமணம் செய்லாம். உயர்கல்வி முயற்சிதடை, தாமதத்திற்குப் பிறகு பலிதமாகும்.
பரிகாரம்:பிரதோச காலத்தில் பச்சரிசி மாவில் நந்திக்கு தீபம் ஏற்றி வழிபட கர்ம வினை தீரும். மன சஞ்சலம் நீங்கும்.
சுப செலவுகள் அதிகரிக்கும்
8ம்மிடராகுவாலும் 5ம்மிட சனியாலும் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை அடைய முயற்சிப்பார்கள். விட்டதை பிடிக்கிறேன் என அதிர்ஷ்டத்தை துரத்துவார்கள். 8ம்மிட ராகு கெட்டவன் என்பதால்கிட்டிடும் ராஜ யோகம் என்பதால் சிலருக்கு சுப பலன்களும் நடக்கும். அதிர்ஷ்ட வசமாக வீடு, வாகனம், பொன், பொருள் சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம், கல்வி என சுப செலவுகள் ஏற்படலாம். 2ம்மிட கேதுவினால் பெரிய சேமிப்போ லாபமோ எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு பய உணர்வினால் நேரம், காலம், பொருள் விரயம் உண்டாகும். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால்பெரிய நஷ்டமோ, மிகுதியான அசுபமோ இருக்காது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஐந்தில் வந்தது சனிபகவான், அற்புதப் பலன்கள் இனிசேரும்!
கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாகச் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 5-ம் இடத்திற்குச் செல்கின்றார். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் தனது சொந்த வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் இனிய பலன்கள் ஏராளமாக வரப்போகின்றது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வருமானம் உயரும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே குடும்பத்தில் சந்தோஷ வாய்ப்புகளை அதிகம் சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தை அடையும் சனி பகவானால், நல்ல மாற்றங்கள் வரப்போகின்றது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் பிரியமுடன் வந்திணைவர். செய்தொழில் எதுவாக இருந்தாலும் முன்னேற்றம் கூடும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 2, 7, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். வாக்கு, தனம், குடும்பம், களத்திரம், வெளிநாட்டு முயற்சி, இளைய சகோதரம், பொருளாதாரம், மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு, சேமிப்பு, கவுரவப்பதவி போன்றவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் இடங்களில் சனியின் பார்வை பதிவதால், அந்த ஆதிபத்யங்களில் எல்லாம் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். 2-ம் இடத்தை சனி பார்ப்பதால், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் தம்பதியர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால், தொழிலில் இதுவரை இருந்த இழப்புகளை ஈடுகட்டும் விதத்தில் வியாபாரம் சூடுபிடிக்கும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் இயல்பாக வந்து சேரும்.
28.12.2021 முதல் 26.1.2023வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை உயரும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு லாபாதிபதியாக இருப்பதால் இக்காலத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மீது சுமத்திய குற்றங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் பணியில் சேருவர்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. செவ்வாய் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே முன்னேற்றத்தில் சிறுசிறு சறுக்கல்கள் வரலாம்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘சகட யோக’ அடிப்படையில் பலன் கிடைக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. வருமானம் மிதமிஞ்சியதாக இருக்கும். மேஷ குருவின் சஞ்சார காலத்தில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைவிடங்களில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். சுயபலமற்ற கிரகம் என்பதால் இருக்கும் இடத்தைப் பொறுத்தே பலன் கிடைக்கும். பண விரயம் அதிகரித்தாலும், அதற்காகப் பயப்பட வேண்டியதில்லை. தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் எந்த வகையிலாவது உங்களுக்கு வருமானம் வந்து சேரும். தேங்கிய காரியங்கள் நடைபெறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் மாற்றம் செய்தால் நல்லது என்று நினைப்பீர்கள். குடும்பச்சுமை கூடும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத மாற்றங்கள் இல்லம் தேடி வரும். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக தொல்லைகள் ஏற்படலாம். நினைத்த காரியத்தை செய்துமுடிக்க இயலாமல் உடல்நலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.
வெற்றி பெறவைக்கும் வழிபாடு
வியாழன் தோறும் விரதம் இருந்து குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்துப் பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து, குரு கவசம் படித்து வழிபடுவது நல்லது. குடும்ப முன்னேற்றம் கூடும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
சனி பகவான் 5, 6ம் இடத்திலும், ராகு பகவான் 8ம் இடத்திலும் கேது பகவான் 2ம் இடத்திலும் பயணிக்கிறார்கள். கன்னி ராசிக்கு குருபகவான் 4, 7ம் அதிபதி. நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம் . 7ம் இடம் என்பது களத்திர ஸ்தானம், நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் பற்றிக் கூறுமிடம். 7ல் ஆட்சி பலம் பெற்ற குரு ராசியைப் பார்ப்பதால் தொட்டது துலங்கும். காரிய சித்தி உண்டாகும். வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை குருவைச் சாரும். சமுதாய அந்தஸ்து புகழ், கவுரம் என வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. இந்த ஒரு வருட காலம் அஷ்டம ராகுவால் ஏற்படப் போகும் இன்னல்கள், அவமானங்கள் மட்டுப்படும்.
குருவின் பார்வையால் தற்காலிக நிவாரணம் கிடைக்கும். 6ல் குரு நின்ற காலத்தில் ஏற்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடன், நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். உத்தியோகம் இழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல உத்தியோகம் கிடைக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட மனச்சங்கடம் நீங்கும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். பகையானவர்கள் உறவாகுவார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் ஆர்வம் பிறக்கும்.
தொழில், உத்தியோகம், கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். இது நாள் வரை தம்பதிகளிடம் மனக்கசப்புடன் வாழ்ந்த தம்பதிகளிடம் அன்பும், ஆசையும் அதிகரிக்கும்.திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் அகலும்.பலருக்கு வாழ்க்கைத் துணை மூலம் திரண்ட சொத்துக்கள் கிடைக்கும். அல்லது நிறைய வரதட்சனை, சீர் மற்றும் சொத்துக்களுடன் கூடிய மணமகள் கிடைக்கும். மனைவி அல்லது உறவினரின் உயில், பங்குச்சந்தை, லாட்டரி, இன்சூரன்ஸ் ஆகியவற்றின் மூலம் எதிர்பாராத திடீர் தன வரவு ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள்.
சிலருக்கு அடமான சொத்துக்கள் மீண்டு வரும். சிலருக்கு சுய உழைப்பில் சொத்து சுகம், வீடு, வாகனம், ஆடம்பர பொருட்கள் கிடைக்கும். தாய் வழி வீடு மனை தொடர்பான சாதகமான பலன் ஏற்படும். இதுவரைவிற்காமல் இருந்தபூர்வீகஅசையா சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும் . தாயின் ஆரோக்கியம் சீராகும்.பணத் தேவைகள் நிறைவாகும். ஆக மொத்தம்உங்களை சூழ்ந்திருந்த பல விதமான பிரச்சனைகளிலிருந்து மீள வழி பிறக்கும்.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. லாப ஸ்தானத்திற்கு சனிப் பார்வையும் உள்ளது. குரு மற்றும் சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் அனைத்துவிதமான கவலைகளும் அகன்று வளமான வாழ்க்கை கிடைக்கும் காலம். சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைப்பது உறுதி. வெகு நாட்களாக இருந்து வந்தகடன் தொல்லை குறைவதற்கு தேவையான தன லாபம் ஏற்படும்.சேமிப்பு உயரும் . 11மிடம் கடகம் என்பதால் வெளிநாட்டு தொழில், உத்தியோக வாய்ப்பும் கிடைக்கும் மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும்.
சிலர் மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் ஆரம்பிக்கலாம். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையில் ஆர்வம் மிகும்.சிலருக்கு விலை உயர்ந்த சொகுசு வாகன யோகமும் உண்டாகும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடக்கும். ஆனால் வேலைப் பளு அதிகமாக இருக்கும்.
வேலை பளுவால் ராஜினாமா செய்ய நினைத்தால் கூட முடியாத வகையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சுய தொழில் புரிவர்களுக்கு தொழில் நடக்கும். கூட்டம் கலை கட்டும். காசு கொட்டி வைக்க கல்லாவில் இடம் பத்தாது. 8ல் ராகு இருப்பதால் சிலர் பணத்தை இரட்டிப்பாக்குவது போன்ற செயல்களில் முதலீடு செய்து அதிர்ஷ்டத்தை நம்பி பணத்தை இழக்க வாய்ப்புள்ளது என்பதால் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வம்பு வழக்கு வராது.
7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வை ராசிக்கு இருப்பதால் உங்களை பீடித்த பதம் பார்த்த அனைத்து இன்னல்களும் அகலும். உங்களின் மனோநிலை வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். தடை பட்டசெயல்கள் வெகு விரைவில் செயலாக்கம் பெறும்.உங்களுடைய தகுதி, திறமைஉயரும். சமூதாய அங்கீகாரம்ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியத்தையும் குரு பகவான் தருவார். சகலசௌபாக்கியமும் உருவாகும்.யோகா, மூச்சுப் பயிற்சி, மெடிடேசன் மூலம் உடல் ஆரோக்கியம்மேம்படும். மனைவியால் கௌரவ பதவிகள் தேடி வரும்.
9ம் பார்வை பலன்கள்:குருவின் 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடமான சகாய ஸ்தானத்திற்கு இருப்பதால் மனதில் தெம்பு, தைரியம் உற்சாகம் குடிபுகும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். புதுப்புது முயற்சியில் ஈடுபடுவர்கள். சிலருக்கு அரசியல் ஆர்வம் துளிர்விடும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
அடிக்கடிசிறு தூர பயணம் ஏற்படவாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு வீடு மாற்றம், ஊர்மாற்றம்ஏற்படவாய்ப்பு உண்டு. உங்களுடைய தனித் திறமை மிளிரும். உங்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். இளைய சகோதரத்தின் மூலம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள்மறைந்து நல்லிணக்கம்ஏற்படும். உடன் பிறந்தவர்களின் இல்லத் திருமணம் உங்கள் தலைமையில் விமரிசையாக நடக்கும். உயில், சொத்து வழக்குகள் சாதமாகும். ஜாமீன் பிரச்சனைகள் தீரும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட பிணக்குகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு படிக்கும் பாடம் நன்றாக புரியும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடம் நன்றாக புரிந்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள்.கல்வி முன்னேற்றத்திற்கு விடுதியில் தங்கி படிக்கலாம். தீர்த்த யாத்திரை, ஆலய வழிபாடு,மந்திர உபதேசங்கள் கிடைக்கும்.
முன்னோனோர்களின் நீத்தார் கடன்தொடர்பான வழிபாட்டு குறைவை சரி செய்ய ஏற்ற காலம். ராசி அதிபதிபுதன் என்பதால்கணிதம் சார்ந்த தொழில், வங்கி தொழில், அறிவு சார்ந்த தொழில் ,ஜோதிடம் , கல்வி நிறுவனங்கள் புத்தக விற்பனை சிறப்பாக இருக்கும்.தகவல் தொடர்பு துறை , ஊடகங்களில் செய்தித் துறை போன்றவற்றால் அனுகூலம் ஏற்படும். அரசாங்க ஒப்பந்த, கண்டிராக்ட் தாரர்களுக்கு நன்மைகள் ஏற்படும்.
வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தையைக் கொண்டே உங்களுக்குகலங்கத்தை ஏற்படுத்துவார்கள்.
ராகுவும், கேதுவும் சாரப் பரிவர்த்தனையில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரமாண்ட வாய்ப்புகள் தேடி வரும்.திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தை மறு முதலீடாக மாற்றக்கடாது. கடன் வாங்கக் கூடாது. சில நேரங்களில் அவை நன்மையாகவும்பல நேரங்களில்தீமையாகவும்முடிந்து விடும். 5ல் சனி இருப்பதால் புத்திர பேறு ஏற்படுவதில் கால தாமதம் உண்டாகும்.
பெண்கள்:குழந்தைகளின் கல்வி, ஆரோக்யம், திருமணம் என்று ஏதாவது சுப செலவு இருந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். சகோதர சகோதரிகளிடம் அனுகூலும் ஏற்படும். தந்தை, தந்தை வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் பெருமாள் கோவில் கருடாழ்வாரை வழிபட மன வேதனை நீங்கும். 5ம் இடத்தில் கோட்சார சனி நிற்பதால் உங்களின் வேண்டுதல்கள் பிரார்தனைகளை குல தெய்வம் நிறைவேற்றித் தரும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
எட்டில் ராகு/ இரண்டில் கேது
இளமையான கன்னி ராசியினரே உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் ராகு பகவானும், 2ம் இடத்தில் கேது பகவானும் குரு பகவான் 7, 8ம் சனி பகவான் 5,6 ம் இடத்திலும் பயணிக்கிறார்.
எட்டாமிட ராகுவின் பொதுபலன்கள்:எட்டாமிடம் என்பது திடீர் அதிர்ஷ்டம், ஆயுள் ,வம்பு, வழக்கு, தீராத நோய், கடன் பற்றிக் கூறுமிடம். பொதுவாக கோட்சாரத்தில் அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பய உணர்வு அனைவருக்கும் இருக்கும். இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. ஆனால் பய உணர்வினால் நேரம், காலம், பொருள் விரயம் உண்டாகும். வளர்ச்சி தடைபடும் என்பது மறுக்க முடியாத உண்மை. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதால் சிலருக்கு சுப பலன்களும் நடக்கும். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப்படுத்துவார் என்பதால்
மனதில் பெரிய திட்டங்கள் தோன்றும். குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை அடைய முயற்சிப்பார்கள். விட்டதை பிடிக்கிறேன் என அதிர்ஷ்டத்தை துரத்துவார்கள். ஆயுளை அதிகரிப்பார், ஆனால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிடக் கூடிய நோய்களின் வீரியத்தை அதிகப்படுத்தி உடல் தளர்ச்சியையும் மனபயத்தையும் மிகைப்படுத்துவார். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சையை தந்து நித்திய கண்டம் பூரண ஆயுள் என நிம்மதியை குலைப்பார். சிலர் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு வெளியூர் என வாழ நேரலாம். சிலர் உறவுகளிடம் மனஸ்தாபத்தால் தனிமையாக வாழ விரும்பலாம்.
கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கான ஊதியம் நற்பெயரும், அங்கீகாரமும் கிடைக்காது. தொழில் நடத்த தேவையான பொருளாதாரத்தை எப்படியாது திரட்டுவீர்கள். பெரிய சேமிப்போ லாபமோ எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் பெரிய நஷ்டமும் இருக்காது. ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:விரயாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் எட்டாமிடத்தில் ராகு சஞ்சரிக்கிறார். வெகு சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக வீடு, வாகனம், பொன், பொருள் சேர்க்கை, பிள்ளைகளின் திருமணம், கல்வி என சுப செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும். புத்திர பாக்கிய யோகத்தில் தடை ஏற்படும். உடல்நலம் பாதிக்கும். அரசின் உதவித் தொகை கிடைப்பது தடைப்படலாம்.பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்கிரன் கன்னிக்கு 2,9ம் அதிபதி என்பதால் சிலர் மதம் மாறலாம் அல்லது கலப்புத் திருமணம் செய்லாம். குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார். முன்னோர்கள் சொத்தைப் பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சொத்துகள் உங்களுக்கு சாதகமாகப் பிரிக்கப்படும். சட்டத்திற்கு புரம்பான மறுமணம் நடைபெறும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு.தந்தைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். தடைப்பட்ட ஊதியம் மொத்தமாக வந்துவிடும். வேலையில் ‘மெமோ’ வாங்கியவர்களுக்கு மீண்டும் சேர உத்தரவு வரும். சிலருக்கு மன ஆறுதல் தரும் எதிர் பாலின நட்பு கிடைக்கும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலம். சுய சிந்தனை மட்டுப்படும். வந்த வாக்கிலும் போன வாக்கிலும் வாழ்க்கையை வாழ்வார்கள்.2,8ம், இடத்துடன் ராகு- கேதுக்கள் சம்பந்தம் பெறும்போது அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சம்பந்தமில்லாத குற்றத்தில் உங்களை மாட்டி வம்பு வழக்கை உருவாக்குவார். அதனால் களங்கம் தரும் வீண் விமர்சனம், கவுரவக்குறைவு உருவாகும். வட்டிக்கு வட்டி கட்ட நேரும். வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பு வராது. ரேஸ், சூதாட்டம், லாட்டரி போன்றவை மீளமுடியாத இழப்பில் கொண்டு நிறுத்தும்.
2ம்மிட கேதுவின் பொதுபலன்கள்:2ம் இடம் என்பது தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் என்பதால் தன வரவு தடைபடும். பொருள் வரவு குறைந்தாலே குடும்பத்தில் நிம்மதி குறைவது இயல்பு. குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போன்ற அச்சம் உண்டாகும். வயது முதிர்ந்த தோற்றம் ஏற்படும். யாரையும் பார்க்க பேசப் பிடிக்காது. நேரத்திற்கு சாப்பிட முடியாது. சிலர் குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை செய்வார்கள். பரம்பரையாக கௌரவத் தொழில் செய்பவர்கள் தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று தவறான முடிவை எடுக்கவைக்கும் காலம்.
பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். அவ்வப்போது உடல் களைப்பு, அசௌகரியங்களால் அவதி ஏற்படும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு கன்னி ராசிக்கு 4,7ம் அதிபதி. 4,7ம் அதிபதியின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது சுகவீனத்தை அதிகப்படுத்துவார். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தாயின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவு செய்ய நேரும். தாய் வழிப் பூர்வீகச் சொத்துப் பிரிப்பதில் கருத்து வேறுபாடு உருவாகும் அல்லது நீதி மன்றத்தில் வழக்கு பதியலாம். பங்குதாரர்களிடம் மனக் கசப்பால் கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும்.
சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பிரிவினை பூர்வீக சொத்து தொடர்பான விஷயத்திற்காக இருக்கலாம் அல்லது பரம்பரை கூட்டுக் குடும்ப பிரிவினை அல்லது பரம்பரை கூட்டுத் தொழில் நிர்வாகக் கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்ததற்காகவும் இருக்கலாம். வீடு, வாகனக் கனவு நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும் அல்லது வாங்கும் சொத்தில் வில்லங்கம் இருக்கலாம்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்: கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் பயணிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலத்தில் குடும்பத்தில் உறவினர்கள் வெளிப் பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற் குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும்.தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும்.சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த குடும்ப சொத்து விவகாரம் சட்டத்தின் உதவியை நாடவைக்கும்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் கன்னி ராசிக்கு 3,8ம் அதிபதி என்பதால் ஞாபக சக்தி குறையும். மறதி ஏற்படலாம். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அது வசிப்பிடமாகவோ, தொழில் செய்யும் இடமாகவோ இருக்கும். திட்டமிட்டு செயல்படுத்துவதில் தடை தாமதம் நிலவும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாக இருக்கும்.
விலை உயர்ந்த ஆபரணத்தை கவனமாக கையாள வேண்டும். நகைகளை பேங்க் லாக்கரில் பத்திரமாக வைக்கவும். பணத்தை நம்பிக்கையான அரசுடைமை வங்கிகளில் சேமிக்கவும்.சிலருக்கு அதிர்ஷ்ட வசமாக பிள்ளை இல்லாதவர்களின் உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும்.
ராகு/கேதுக்கள் சற்று பாதகமாக இருந்தால் கூட 7ம் இடத்தில் ஆட்சி பலம் பெறும் குருவின் பார்வை ராசிக்கு இருப்பதால் ஒருவருட காலத்திற்கு குருவின் பார்வை கவசமாக காக்கும் என்பதால் தைரியமாக, தெம்பாக இருக்கலாம்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406


