iFLICKS தொடர்புக்கு: 8754422764
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்

இன்றைய ராசி பலன்கள்

நினைத்தது நிறைவேறும் நாள். நிச்சயித்த சுபகாரியத்திற்கு பணம் வந்து சேரும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.

வார பலன்கள்

டிசம்பர் 16-12-2019 முதல் 22-12-2019 வரை:

ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதில் இருந்தாலும் சூரியன் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் எதிலும் உங்களுக்கு தயக்கம் வரும் வாரம் இது. குறிப்பாக இது ரி‌ஷப ராசி இளைய பருவத்தினர் சோம்பலை விட்டு ஒழிக்க வேண்டிய வாரம். இளைஞர்கள் அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். உங்களில் சிலருக்கு கடன் வாங்கி வீடு வாங்கும் யோகம் இருக்கிறது. தாயார் சம்பந்தமாக செலவுகள் ஏற்படும். வயதான அம்மாவை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். வீட்டில் சொத்து சேர்க்கை, நகை வாங்குதல் போன்றவைகள் இருக்கும். மங்கள நிகழ்ச்சிகளும் உண்டு. இப்போது அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார். டைவர்ஸ் கேஸ், அடிதடி, போலீஸ், கோர்ட் என்று அலைந்து கொண்டிருந்தவர்களின் வழக்கு சாதகமாய் முடிவுக்கு வரும். அரசு, தனியார்துறை ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், அரசியல்துறையில் இருப்பவர்கள் கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் நன்மை அடைவார்கள்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

தமிழ் மாத ஜோதிடம்

17-11-2019 முதல் 16-12-2019 வரை

விகாரி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சனி, குரு, கேது ஆகிய மூன்று கிரகங்கள் இணைந்திருக்கின்றன. அஷ்டமத்தில் மாபெரும் கிரகங்கள் மூன்று சஞ்சரிக்கின்ற பொழுது, திடீர் திடீரென மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம், இலாகா  மாற்றம் என்று ஏதேனும் ஒரு மாற்றம் உருவாகலாம். வரும் மாற்றங்கள் உங்களுக்கு உகந்தது தானா? என்பதை யோசனை செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். யாரிடமாவது நீங்கள் பொறுப்புகளை ஒப்படைத்தால் அது நடைபெறாமல் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். தனுசில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 4, 12 ஆகி இடங்களிலும் பதிகிறது. எனவே பணப் புழக்கம் சிறப்பாகவே இருக்கும். ஆனால் விரயங்கள் அதைவிட அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் மிக்க நீங்கள் அதைச் சமாளித்து விடுவீர்கள். வீண் விரயங்களில் இருந்து விடுபட வேண்டுமானால், இதுபோன்ற காலங்களில் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது.  தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, வீடு கட்டுவது அல்லது வாங்குவது அல்லது கட்டியவீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். ‘சரி.. இவற்றுக்கெல்லாம் பணம்வேண்டுமே.. வந்து சேருமா?’ என்று நீங்கள் நினைக்கலாம்.

உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், பணத்தை வைத்துக்கொண்டு காரியத்தைத் தொடங்க இயலாது. காரியத்தை தொடங்கிவிட்டால் பணம் ஏதாவது ஒரு வகையில் உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்.  அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருக்கும் பொழுது, உறவுகளோடு பகை பாராட்டக் கூடாது, அனுசரித்துதான் செல்ல வேண்டும்.  மாபெரும் கிரகங்களான சனி, கேது, குரு ஆகிய மூன்றும் பொதுவாக கூட்டுக்கிரகமாக அஷ்டமத்தில் உலா வரும்பொழுது மிகமிக கவனமுடன் செயல்பட வேண்டும்.

இம்மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த திருக்கார்த்திகை திருநாள் வருகிறது. அன்றைய தினம் அருகிலிருக்கும் முருகப்பெருமான் ஆலயம் சென்று அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு வாருங்கள். முருகன் அருளால் முன்னேற்றப் பாதையில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

தனுசு சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிநாதன் சுக்ரன்  வருகிற நவம்பர் 22-ந் தேதி அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறார். சுக்ரன், உங்கள் ராசிக்கு மட்டுமல்லாமல் 8-ம் இடத்திற்கும் அதிபதியானவர். 6-க்கு அதிபதி 8-ல் சஞ்சரிக்கும்பொழுது ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பதற்கு ஏற்ப எதிர்பாராத சில நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரலாம். குறிப்பாக உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் ஏதேனும் புதுமுயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். எதிரிகளின் பலம் குறையும் இந்த நேரத்தில் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கலாம்.

விருச்சிக புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் டிசம்பர் 3-ந் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். சப்தம ஸ்தானத்திற்கு தனாதிபதி வரும்பொழுது வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கக்கூடிய வாய்ப்பும் உருவாகும். நீண்ட தூரப் பயணங்கள் அதிகரித்தாலும், அது பலன் தருவதாக அமையும். இக்காலத்தில் புத- ஆதித்ய யோகம் செயல்படுவதால் பிள்ளைகளின் மேற்படிப்பு அல்லது உத்தியோகம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சி கைகூடும். இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-  நவம்பர்: 21, 22 டிசம்பர்: 2, 3, 6, 7, 13, 14, 15

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். துணிந்து எந்த முடிவும் எடுக்கமுடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பணப்பற்றாக்குறையால் ஒருசிலர் அருகில் இருப்பவர்களின் உதவியை நாட வேண்டியதிருக்கும். கணவன் - மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். தாய்வழி ஆதரவும், உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பும் எதிர்பார்த்த அளவு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.  பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். உடன்பணிபுரிபவர்களால் சில உபத்திரவங்கள் ஏற்பட்டு அகலும். சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது நல்லது.

ஆண்டு பலன் - 2019

விகாரி வருட பலன்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புது தமிழ் வருடமான விகாரி ஆண்டு ஏற்கனவே உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் சாதகமற்ற பலன்களை மாற்றியமைத்து நல்ல பலன்களை தருகின்ற ஒரு வருடமாக இருக்கும். ரிஷபத்திற்கு தற்போது கோட்சார நிலைமையில் எதையும் தடை செய்யும் அஷ்டமச் சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கைக்கெட்டியது வாய்க் கெட்டாத சில விஷயங்களை ரிஷபத்தினர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

குறிப்பாக இளைய பருவத்தினர் வாழ்க்கையில் செட்டில் ஆகாமல் செய்யக்கூடிய விஷயங்களை சனி செய்து கொண்டிருக்கிறார். பணம் என்றால் என்ன, உறவுகள், நட்புகள் எப்படிப்பட்டது, வேலை மற்றும் தொழிலில் இருக்கும் சிக்கல்கள் என்ன, வேலை கிடைப்பது எவ்வளவு கடினம், கிடைக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பது போன்ற விஷயங்களையும், ஆணுக்குப் பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் புரிய வைக்கும் சில விஷயங்களையும் எட்டில் இருக்கும் சனி தற்போது ரிஷப ராசிக்கு செய்து கொண்டிருக்கிறார்.

அதேநேரத்தில் ஏறத்தாழ இரண்டரை ஆண்டு காலம் கொண்ட அஷ்டமச்சனி அமைப்பில் கிட்டத்தட்ட 70 சதவிகித பகுதியை நீங்கள் கடந்து விட்டதால் இனிமேல் சாதகமற்ற பலன்கள் எதுவும் ரிஷபத்திற்கு இருக்கப் போவதில்லை. குறிப்பாக எட்டில் இருக்கும் சனிபகவான் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த ராகு-கேது பெயர்ச்சியால் கேதுவுடன் இணைந்து சூட்சும வலு அடைந்திருப்பதால் இனிமேல் உங்களுக்கு கெடுதல்களைச் செய்ய இயலாத நிலை மாறி நன்மைகள் தரும் நிலைக்கு மாறுவார்.

எனவே கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த கெடுதலான நிலைமைகளும், எந்த ஒரு விஷயமும் முன்னேற்றமாக இல்லாமல் கிணற்றுக்குள் போட்ட கல்லாக இருந்த அமைப்பும் மாறி, பிறக்க இருக்கும் புதிய தமிழ் வருடமான விகாரி வருடத்தில் முன்னேற்றத்திற்கான பாதையில் ரிஷப ராசிக்காரர்கள் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். நடக்கும் அஷ்டமச் சனியால் மணவாழ்வில் சிக்கலுக்குள்ளானவர்கள், மண வாழ்க்கை அமையாதவர்கள் மற்றும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள், சொத்துப்பிரச்சினை, பங்காளி தகராறு, வழக்கு, கோர்ட்டு பிரச்சினை போன்றவைகள் இருந்தவர்களுக்கு இனிமேல் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

புத்தாண்டின் ஆரம்பத்தில் ராகு-கேதுக்கள் சுபத்துவமாக இரண்டில் அமர்வதால் வேற்று மன, இன, மொழிக்காரர்களுடன் நெருக்கம் உண்டாகும். அவர்கள் மூலமாக நன்மைகள் இருக்கும். இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்கள் உதவுவார்கள். சிலருக்கு அன்னிய மத, வேறு மாநில வாழ்க்கைத்துணை அமையும்.
குருபகவான் தற்போது மிகவும் நல்ல பலன்களை கொடுக்க கூடிய ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் இதுவரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்கள் நீங்கி தனலாபம், நிரந்தரமான வருமானம், நீடித்த பணவரவு ஆகிய பலன்கள் நடந்து இதுவரை இருந்த கஷ்டங்கள் அனைத்தும் சீராகப் போகிறது. வர இருக்கும் விகாரி வருடத்தில் உங்கள் உடல், மனம், பொருளாதார நிலைமைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து கெடுபலன்கள் அனைத்தும் மாறி நல்ல நிலைமைக்கு செல்வீர்கள். புதுவருடம் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பிறந்த ஜாதகப்படி கூடுதலான நல்ல அமைப்புகளையும் கொண்டிருந்தீர் களேயானால் மிகப்பெரிய முன்னேற்றம் இப்போது உங்களுக்கு இருக்கும். இந்த புத்தாண்டில் இருந்து உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வந்து அதிர்ஷ்டம் தேடிவந்து உங்களிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறது.

இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து மிகவும் மேன்மையான காலம் ஆரம்பிக்கிறது.

ரிஷபத்தினர் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்த படியே நிறைவேறும். எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது.

பதவிஉயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித்தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு. பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இனி நன்மைகள் நடக்கும். பொருத்த மில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை இனிமேல் கிடைக்கும்.

உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்க ளுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். அந்தஸ்து, மதிப்பு உயரும் நேரம் இது. அடுத்த வர்களால் கௌரவமாக நடத்தப்படுவீர்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்ப வர்களுக்கு இந்த வருடம் முதல் தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

கூட்டுத்தொழில் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வருமானங்கள் சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக் கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.

காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் போலீஸ் கோர்ட் என்று திரிந்தவர்களுக்கு அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிந்து இரண்டாவது வாழ்க்கை அமைப்பு நல்லபடியாக உருவாகும். வெளிநாட்டில் படிக்கவோ வேலை செய்யவோ முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த புத்தாண்டில் இடமாற்றங்கள் ஊர்மாற்றங்கள் வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும். அந்த மாற்றங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லவைகளாகத்தான் இருக்கும் என்பதால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் புத்தாண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள். இந்த தமிழ்ப் புத்தாண்டு ரிஷபத்திற்கு திருப்பு முனையைத் தந்து முன்னேற்ற பாதையில் செல்ல வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆதித்ய குருஜி
செல்: 88709 98888

சனிப்பெயர்ச்சி பலன்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குரு ஏழாமிடத்தில் இருந்து எட்டாமிடத்திற்கு மாறுகிறார். அஷ்டம குரு என்று சொல்லப்படும் எட்டாமிடம் நல்ல பலன்களை தருவதில்லை என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டாலும் பாபக் கிரகங்கள் எட்டாமிடத்தில் தரும் கெடுபலன்களைப் போல சுப கிரகங்கள் ஒருபோதும் தருவதில்லை.

மேலும் குரு உங்கள் ராசிக்கு எட்டுக்குடை யவனாகி முழுக்க நன்மைகளை மட்டுமே கொடுக்கும் கிரகம் அல்ல. அதோடு இம்முறை அவர் தனது சொந்த வீட்டில் ஆட்சி நிலையில் அமரப் போகிறார். எனவே அவர் ரிஷப ராசிக்கு இம்முறை எட்டாமிடத்தின் சுபத்துவ நல்ல விஷயங்களை மட்டும் தருவார்.
எட்டாமிடம் என்றாலே கடுமையான கெடுதல்கள் நடந்துவிடுமோ எனத் தோன்றும். ஆயினும் ஒரு கிரகம் சுபமான அமைப்பில் எட்டில் அமரும்போது நல்ல பலன்களை மட்டுமே செய்யும். பாப கிரகம் எட்டில் இருந்தால் கண்டிப்பாக கெடுதல் செய்யும். அதன்படி கடந்த முறை எட்டில் சனி அமர்ந்து அஷ்டமச் சனி நடப்பதால் கடந்த இரண்டரை வருடங்களாக ரிஷபத்தினர் வயதுக்கேற்ற வகையில் கடுமையான சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தற்போது குரு எட்டில் மாறினாலும், ஆட்சி வீட்டில் அமரப்போவதால், எட்டாம் இடத்தின் நல்ல பலன்களான, தூரத்தில் இருப்பதால் லாபம், வெளிநாடு, வெளிமாநில மேன்மை, திடீர் அதிர்ஷ்டம், அதிக முயற்சி இல்லாமலேயே பணம் கிடைத்தல் போன்ற நல்ல பலன்களை ரிஷபத்தினர் அடைவீர்கள்.

இன்னும் சில வாரங்களில் வரும் ஜனவரி 24ம் தேதி ரிஷபராசிக்கு அஷ்டமச் சனி எனப்படும் மிகவும் சாதகமற்ற, கெடுதலான நேரம் முடியப் போகிறது. கடந்த 2017, 2018, மற்றும் 2019-ம் ஆண்டுகள் ரிஷப ராசிக்கு மிகுந்த துயரத்தை தந்த வருடங்கள் ஆகும். இது போன்றதொரு சாதகமற்ற விளைவினை அஷ்டம குரு ஒருபோதும் தராது.

எந்த ஒரு ராசிக்கும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு நன்மைகளும், தீமைகளும் கலந்துதான் வர வேண்டும் என்பதன் அடிப்படையில், அஷ்டமச்சனி முடிந்தபிறகும் அதே போன்ற துயரங்கள் இன்னொரு முறை ரிஷபத்திற்கு வரப்போவதில்லை. இன்னும் முக்கியமாக ஒருவருக்கு அஷ்டமச்சனி முடிந்த பிறகு வாழ்க்கை செட்டில் ஆகும் என்பதும் ஒரு விதி. அதன்படி 2020ம் வருடம் பிறந்த பிறகு ரிஷப ராசியினர் அவரவர் வயதுக்கேற்ற நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள்.

குறிப்பாக இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாத இளைஞர்கள் இனிமேல் நிலை கொள்வீர்கள். கடந்த கால சோதனைகள் மீண்டும் வரவே வராது. எனவே எட்டில் இருக்கும் குரு கண்டிப்பாக உங்களுக்கு தொல்லைகளை தரப் போவதில்லை. எட்டாம் இடம் என்பது மாறுதல்களை குறிக்கக்கூடிய ஒரு இடம் என்பதால் இதுவரை சாதகமற்ற நிலைகளில் இருந்தவர்களுக்கு ஒரு நல்ல விதமான மாற்றத்தை குரு கொடுத்தருள்வார். எனவே எந்த வகையில் பார்த்தாலும் ரிஷப ராசிக்கு மாற்றங்களை மட்டும் கொடுத்து அதன்மூலம் முன்னேற்றங்களை தருகின்ற ஒரு சிறப்பு குருப்பெயர்ச்சியாக இது இருக்குமே தவிர ஒருபோதும் உங்களுக்கு கெடுதல்களை கண்டிப்பாக தரப் போவதில்லை.

இன்னும் குறிப்பாக சொல்லப் போவோமேயானால் இதுவரை செயல்படாத அதிர்ஷ்டம் இனிமேல் குருவின் தயவால் செயல்படப் போகும் காலம் இது. இதுவரை முயற்சி செய்தும் தோல்வி அடைந்த விஷயங்கள் இனி அதிக முயற்சி இன்றி அதிர்ஷ்டத்தின் துணையுடன் முழுமையாக வெற்றி அடையும். நல்ல விளைவுகளை நீங்கள் உணருவீர்கள்.

ரிஷபத்தினருக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித், தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.

எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்ப கட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

குருவின் பார்வை பலம்தான் ஜோதிடத்தில் மிக முக்கியமாக சொல்லப்படுகிறது. இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வளப்படுத்துபவர் குரு என்பதால் இம்முறை அவர் பார்க்கக்கூடிய 12, 2, 4 ஆகிய மூன்று பாவகங்களின் மூலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும்.

12-ஆமிடம் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு தூர இடங்களில் வேலைக்கு செல்வதற்கு காத்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அதற்கான முயற்சிகளில் இருந்தவர்களுக்கு நன்மைகள் உண்டாகும். ஏற்கனவே வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவருக்கு நல்ல பலன்கள் உண்டு.

வெளிநாட்டில் இருந்தாலும் அங்கும் சரியான வேலை அமையாமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே இருந்து வந்த வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்க போகிறது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி இனி உங்களை புரிந்து கொண்டு சாதகமான வகையில் நடந்து கொள்வார் அல்லது அந்த அதிகாரி மாறுதல் ஆவார்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் இதுவரை பொருளாதார பிரச்சினையில் சிக்கி இருந்தவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவர்கள், நிரந்தர வேலை இல்லாதவர்கள், மனதிற்கு பிடிக்காத தொழில் அமைப்புகளில் இருந்தவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் மாற்றம் உண்டாகி நல்ல பலன்களும், பணவரவும் உண்டாகும்.

குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை குரு தன்னுடைய ஆட்சி வீட்டிலிருந்து பார்ப்பதால், இளைய பருவத்தினருக்கு இப்போது திருமணம் நடைபெறும். இதுவரை குடும்பம் அமையாமல் இருப்பவர்கள் குடும்பஸ்தனாக முடியும். எதிர்கால வாழ்க்கைத் துணையை இந்த குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களில் சிலர் அடையாளம் காண்பீர்கள்.

குருவின் இரண்டாம் வீட்டு பார்வையால் வாக்குப்பலிதம் உண்டாகும் என்பதால் ஒருவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை உங்களால் காப்பாற்ற முடியும். இந்த அமைப்பின் மூலம் பணவரவு நிலையாகி சம்பளம் மூலமாகவோ, இதர வருமானம் மூலமாகவோ வருமானம் வந்து வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றை சொன்ன தேதிக்கு கட்ட முடியும். எனவே இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு கடன் தொல்லைகள் இருக்காது

குருவின் அதி உன்னத சுப பார்வை நான்காம் வீட்டில் படுவதால் இதுவரை வசதியற்ற வீட்டில் இருப்பவர்கள், வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்கவோ அல்லது குத்தகைக்கு செல்லவோ முடியும். சிலர் இதுவரை காற்றோட்டமில்லாத மிகச் சிறிய வீட்டில் கூண்டுக்குள் அடைபட்டு இருந்தது போன்ற நிலை மாறி நல்ல விசாலமான காற்றோட்டமான வீட்டிற்கு மாறுவீர்கள்.

உங்களில் சிலருக்கு சொந்த வீடு பாக்கியம் அமைகிறது. வங்கிக் கடன் பெற்று வீடு அமையும். வீடு வாங்குவது கனவாகவே இருந்தவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக நல்ல வீடு அமையும். சிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். வாகன மாற்றம் உண்டு. செலவு வைத்துக் கொண்டிருந்த வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கி ரிப்பேர் செலவு இல்லாமல் இருப்பீர்கள். பெண்களுக்கு இது மிகவும் நல்ல காலகட்டமாகும். சமீபத்திய ஆண்டுகளில் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் இழப்புகளையும், துயரங்களையும் சந்தித்த உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு நல்ல மாற்றத்தை தந்து மனதை மிகவும் சந்தோஷமுடன் வைத்திருக்கும்..

வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலையை உணர்வீர்கள். தொந்தரவு செய்து கொண்டிருந்த சிலரின் கை தாழ்ந்து உங்களுடைய கை ஓங்கும். வீட்டிலும் பணியிடங்களிலும் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்கள் வந்து ஒரு நிம்மதியான சூழலை பெண்கள் உணர்வீர்கள்.

அரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித் துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்ல பலன்கள் நடக்கும். வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம்.

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். சினிமா, தொலைகாட்சி, பத்திரிகை போன்ற ஊடகத் துறையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மாறாக நன்மைகள் அதிகம் இருக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இந்த குருபெயர்ச்சி ரிஷப ராசிக்கு நன்மைகளை தவிர தீமைகளைத் தராது.

பரிகாரங்கள்:

ரிஷபத்தினர் ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பதும், வியாழன்தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று அவரை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும்.

அங்கே பாடக்கூடாது

நவகிரகங்களை சுற்றி வரும் போது பலரும் “வேயுறு தோளிபங்கன்...” எனத் தொடங்கும் கோளாறு திருப்பதிகத்தை பாடுவார்கள். அப்பாட்டை அங்கு பாடக்கூடாது. எல்லாம் வல்ல ஈசன் என் உள்ளத்தில் இருக்கும் போது “நாள் என்னை என்ன செய்துவிட முடியும். கோள்கள் என்ன செய்துவிட முடியும்?” என்று தான் சம்பந்தர் பாடுகிறார். எனவே கோளாறு பதிகத்தை சிவன் சன்னதியில்தான் பாடவேண்டும்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை சாதகமான மூன்றாம் இடத்தில் இருந்து வந்த ராகு அங்கிருந்து மாறி தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் இரண்டாமிடத்தில் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு இருக்கப் போகிறார். அவரின் துணைக் கிரகமான கேது, தற்போது இருக்கும் ஒன்பதாமிடத்தில் இருந்து அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டாமிடத்திற்கு வருவார்.

நமது மூலநூல்கள் இரண்டு, எட்டாம் இடங்களில் ராகு, கேதுக்கள் இருப்பதை சிறப்பான ஒரு அமைப்பாகச் சொல்லவில்லை. இரண்டில் இருக்கும் ராகுவால் தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் மூன்றும் பாதிக்கப்படும் என்றும், இந்த ஸ்தானத்தில் ராகு அமர்வதன் மூலம் ஒருவருக்கு பொருளாதார சிக்கல்களும், வாக்குறுதி பலிக்காத நிலையும், குடும்பத்தில் பிரச்சினைகளும் இருக்கும் எனவும் நமது ஞானிகளால் சொல்லப்பட்டிருக்கிறது.

இருப்பினும் கோட்சாரபலன்களில் எதையும் மேலோட்டமாகச் சொல்லாமல் நுட்பமாக கணித்துச் சொல்லியே பழக்கப்பட்ட நான் இம்முறை ராகுவின் இந்தப் பெயர்ச்சிப் பலனை ரிஷப ராசிக்காரர்களுக்கு இரண்டு நிலைகளாகப் பிரித்துச் சொல்லுவேன்.

முதலாவதாக சென்ற குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு தற்போது ஏழாமிடத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களால் எதையும் சமாளிக்க முடியும். அடுத்து வரும் நவம்பர் மாதம் முதல் குரு எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமச்சனியாக இப்போது உங்கள் வளர்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கும் சனியுடன் இணைந்து, அவரை சுபத்துவப்படுத்தி சனியின் கெடுதல்களில் இருந்து உங்களை காத்து அருள்வார்.

அதைவிட மேலாக சனியுடன் இணையும் குரு, தனது ஏழாம் பார்வையால் ராகுவையும் பார்த்து புனிதப்படுத்துவார் என்பதால், முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு ரிஷப ராசியினருக்கு ராகு, கேது பெயர்ச்சியாலும், அஷ்டமச் சனியினாலும் பாதிப்புகள் இருக்காது. எனவே ரிஷபத்தினர் எவ்விதமான பின்னடைவுகளும் இல்லாமல் நிச்சயமாக இந்த ராகு-கேதுப்பெயர்ச்சிக் காலத்தை கடந்து விட முடியும்.

குருவின் பார்வையை பிற்பகுதி ஒருவருடம் முழுவதும் ராகு பெறுவதால் கெடுபலன்கள் எதையும் ரிஷப ராசிக்கு ராகுவால் தர இயலாது. அதேபோல அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டாம் வீட்டில் பாபக்கிரகங்கள் அமர்வது கெடுபலன்களைத் தரும் என்று நமது மூல நூல்கள் சொல்லுவதால் கேது எட்டில் இருப்பதும் ஒரு சாதகமற்ற நிலைமைதான்.

ஆயினும் குருவின் இணைவைப் பெற்ற கேது கெடுதல்களை செய்யமாட்டார் என்ற விதிப்படியும், தனுசில் அமரும் கேது நல்லபலன்களை மட்டுமே தருவார் என்ற விதிப்படியும் அஷ்டம கேது அப்படி ஒன்றும் பெரிய கெடுபலன்களை ரிஷபத்திற்குத் தந்துவிடப் போவதில்லை.

அதேநேரத்தில் எட்டாமிடம் சூதாட்டம், பங்குச்சந்தை, எம்.எல்.எம். எனப்படும் மல்டிலெவல் மார்க்கெட்டிங் போன்ற பண இரட்டிப்பு விஷயங்களைக் குறிப்பிடும் இடம் என்பதால் இது போன்ற துறைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்து ஏகப்பட்ட லாபங்களை சம்பதிக்கலாம் என்று ஆசை காட்டி கேது மோசம் போகச் செய்வார்.

எனவே இந்த ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தின் முழுமையான ஒன்றரை வருட காலத்திற்கும் சூதாட்டம், பங்குச்சந்தை போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டாமல், அதிகவட்டிக்கு ஆசைப்படாமல், சுலபமாக பணம் சம்பாதிக்கலாம் என்று தூண்டில் போடப்படும் விஷயங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். இதன் மூலம் எட்டாமிடத்து கேது ஏமாற்றங்களைத் தருவார்.

ஏற்கனவே பங்குச்சந்தை துறையில் இருப்பவர்கள் அகலக்கால் வைக்காமல், அதிகமான முதலீடு செய்யாமல் கவனமுடன் இருப்பது நல்லது. மேலும் லாட்டரி போன்ற சூதாட்டங்களில் அதிகமாக ஈடுபட்டு பணத்தை இழக்கும் அமைப்பு இருப்பதால் லாட்டரி, கிரிக்கெட் போன்ற சூதாட்டங்களின் பக்கம் தலை வைத்துப் படுகாமல் இருப்பது உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு.

குறிப்பாக பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், சீனியர் சிட்டிசன் எனப்படும் முதியவர்கள், மற்றும் ஏதேனும் ஒருவழியில் ஒரு பெரியதொகை கிடைக்கப்பெற்று அதை முதலீடு செய்து வட்டி மூலம் வாழ்க்கை நடத்த விரும்புபவர்கள் அதிக வட்டிக்கு ஆசைப்படாமல் பொதுத்துறை வங்கிகள் போன்ற நம்பகமான அமைப்புகளில் மட்டும் டெபாசிட் செய்து வாழ்க்கை நடத்துவது நல்லது.

பேராசைப்பட வைத்து இருப்பதையும் இழக்க வைப்பவர் அஷ்டமகேது என்பதால் இந்த ராகு கேது பெயர்ச்சியில் பண விவகாரங்கள் அனைத்திலும் கூடுதல் விழிப்புடன் இருங்கள். அஷ்டமச் சனி நடப்பதால்; அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்தப்பெயர்ச்சி கெடுபலன்கள் எதுவும் தராது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

எட்டில் சனி, இரண்டில் ராகு எனும் கிரக நிலையால் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும்.. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

பெண்களுக்கு இந்தப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங் கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அஷ்டமச் சனி விலக இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை.

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மந்தநிலை இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் வழக்குரைஞர்கள் போன்றவர்களுக்கு தீவிர முயற்சிக்குப் பின்பே காரியங்கள் நடக்கும். யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம்.

யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதியும் கொடுக்க வேண் டாம். குறிப்பிட்ட சிலருக்கு சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. என்னதான் செய்தாலும் அண்ணன் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று தங்கைகள் குறை சொல்வதையும் கேட்டு சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

பொதுவில் ரிஷபத்திற்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியில் சுமாரான பலன்கள்தான் என்றாலும் ராகு, கேதுக்கள் குருவின் பார்வை, இணைவு என்ற நல்ல அமைப்பில் இருப்பதாலும் சனி, கேது இருவரும் சுபத்துவ, சூட்சும வலு அடைவதாலும் அனைத்தையும் சமாளிப்பீர்கள் எனபது உறுதி.

பரிகாரங்கள்

அஷ்டமச்சனி நடப்பில் உள்ளதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் மண் அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஒருகுறையும் வராமல் சனியின் குருநாதராகிய காலபைரவப் பெருமான் உங்களைப் பாதுகாப்பார்.

கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store