
இன்றைய ராசி பலன்கள்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் ஏற்பட்ட தொய்வு அகலும். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கலாம்.
வார பலன்கள்
16.4.2021 முதல் 22.4.2021 வரை
நண்பர்களின் ஒத்துழைப்போடு உங்கள் காரியங்களில் வெற்றியடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள், தங்கள் வேலைகளில் கவனமாக செயல்படுங்கள். தொழிலில் ஓய்வில்லாமல் பணியாற்றுவதால், உடல்நலத்தில் சிறு தொல்லை ஏற்படலாம். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் சிறுகுறைபாடுகள் ஏற்பட்டு அகலும். செலவுகள் கூடும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டுங்கள்.
தமிழ் மாத ஜோதிடம்
ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் மே மாதம் 14-ம் தேதி வரை
தனுசு ராசி நேயர்களே!
பிலவ வருடம் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் மாதத் தொடக்கத்தில் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். இதுவரை நீச்சம் பெற்றிருந்தவர், இப்பொழுது பலம் பெறுகின்றார். எனவே இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
கூட்டுக்கிரக யோகம்
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், 9-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன், 7, 10-க்கு அதிபதியான புதன், 6, 11-க்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதி சந்திரன் இணைந்திருக்கின்றனர். ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே குடும்பத்தில் சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும். கொடுக்கல் - வாங்கல்களை ஒழுங்கு செய்வீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.
செவ்வாய் - சனி பார்வை
மாதத் தொடக்கத்தில் செவ்வாயின் பார்வை, சனி மீது பதிகின்றது. பொதுவாக செவ்வாய் - சனி பார்வை நல்லதல்ல. அதிலும் குறிப்பாக உங்கள் ராசிக்கு, தன- சகாய ஸ்தானாதிபதியான சனியை, பஞ்சம - விரயாதிபதி செவ்வாய் பார்ப்பதால் விரயங்கள் கூடும். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நேரமிது. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் உருவாகும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம். தொழிலில் குறுக்கீடு அதிகரிக்கும். கடன் சுமை கூடும்.
ரிஷப - புதன் சஞ்சாரம்
ஏப்ரல் 28-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் மறைவிடங்களில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து அனுகூல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
ரிஷப - சுக்ரன் சஞ்சாரம்
மே 8-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். அங்குள்ள புதனோடு இணைந்து புத சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. வெகு நாட்களாக முயற்சித்தும் நடைபெறாத காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு அது கைகூடும். மனதில் உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சனியின் வக்ர காலம்
மே 12-ந் தேதி முதல், மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ரம் பெறுகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு தன ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் வக்ரம் பெறும்பொழுது, பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் உடனடியாகச் செய்ய இயலாது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். ‘கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 22, 23, 24, 27, 28, மே: 4, 5, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், எதிலும் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. சுபவிரயங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் அமையலாம். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். தாய்வழி ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் கிடைக்கலாம்.
ஆண்டு பலன் - 2021
தனுசு ராசிக்காரர்களுக்கு 2021-ம் வருடம் நல்லபலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும். கடந்த மூன்று வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத தனுசுவினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.
கடந்த சில வருடங்களாக ஏழரைச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான தனுசுவினர் சாதகமற்ற பலன்களை அனுபவித்து வந்தீர்கள். சென்ற வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதம் 24ம் தேதிதான் உங்கள் ராசிக்கு ஜென்மச்சனி விலகியது.
ஜென்மச் சனி முடிந்த பிறகு வாழ்க்கை படிப்படியாக செட்டில் ஆகும் என்பது ஜோதிடப்படி உறுதியான ஒன்று. எனவே 2021-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே மிகவும் நல்ல பலன்கள் நடந்து, இப்போது இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து இந்த ஆண்டு முதல் தனுசுவினர் அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள் என்பது உறுதி.
ராசிநாதன் குருவின் நிலையை மேம்போக்காகப் பார்க்கையில் புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் நீச்ச நிலையில் இருப்பது போல தோன்றினாலும், அவர் சனியுடன் இணைந்து நீச்ச பங்க அமைப்பில் இருப்பதால் உங்களுக்கு கெடுதல்களைச் செய்ய மாட்டார்.
கூடுதலாக ராகுவும் ஆறாமிடத்தில் சுப ராகுவாக இருக்கிறார். எனவே முக்கிய கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் 2021-ம் வருடம் உங்களுக்கு நல்ல திருப்புமுனைகளையும், எதிர்கால நல்வாழ்க்கைக்கு தேவையான அஸ்திவாரங்களையும் அடிப்படைகளையும் அமைத்து தரும்.
சொந்தத் தொழில் தொடங்க அருமையான நேரம் இது. இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்து விட்டது. வியாபாரிகளுக்கு இது வசந்த காலம். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.
பணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் நினைத்து போலவே வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் அனைத்தும் விலகி ஓடும். சில தொழில் முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.
விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி மேன்மையான நிலையை அடைவீர்கள்.
அருமையான வீடு கட்டலாம். பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். மாற்றங்கள் நிச்சயம் உண்டு. வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள்.
வருட ஆரம்பத்தில் வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால் பேச்சினாலேயே மற்றவர்களை கவர்ந்து அதனால் லாபமும் அடைவீர்கள். பேசுவதன் மூலம் பணம் வரும் துறைகளான ஆசிரியர் பணி, மார்கெட்டிங் போன்ற விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், கவுன்சிலிங் போன்ற ஆலோசனை சொல்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நன்மைகளைத் தரும்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடங்கலின்றி மனநிறைவுடன் நடக்கும். புத்திர பாக்கியம் தாமதமானவர்களுக்கு வாரிசு உருவாகி தவழ்ந்து விளையாடப் போகிறது. பெண்கள் மிகுந்த மேன்மை அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி அவஸ்தைப்பட்ட நிலைமை இனிமேல் மாறி நிம்மதி கிடைக்கும் வருடம் இது.
இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட எல்லோருக்குமே இது மிகவும் நல்ல பலன்களை அளிக்கும் வருடமாக இருக்கும்.
மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பு இருக்கும். மகன் மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்த முடியும். பேரன் பேத்திகள் மூலம் நல்ல சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். வயதானவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
முதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்குச் செல்லலாம். இதுவரை இருந்துவந்த போட்டிகள் எதிர்ப்புகள் விலகும்.
கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்லபலன்கள் அவர் மூலமாக கிடைக்கும். யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும். எதிர்காலத்திற்கான சேமிப்புகள் செய்ய முடியும். பிறப்பு ஜாதகத்தில் தசாபுக்திகள் சாதகமாக அமைந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பிரபலமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எல்லா வகையிலும் நல்ல மாறுதல்கள் இருக்கும் வருடம் இது. பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளில் சிலருக்கு வருமானம் வரும். மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத் துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
மாணவர்களுக்கு இது மனதில் பதிந்து படிக்கும் வருடம். எல்லா வகையிலும் ஜாலியான இருப்பீர்கள். இளைஞர்களும், யுவதிகளும் தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல் வரும் வருடம் இது.
சிலருக்கு பாகப்பிரிவினையாக உங்கள் பெயரில் ஏதேனும் சொத்து கிடைக்கும். சகோதர உறவு அனுசரணையாக இருக்கும். சிலர் அறப்பணிகளில் ஈடுபடவோ, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கோ வாய்ப்பு இருக்கிறது. வருட பிற்பகுதியில் வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக வரும் வருமானத்தில் செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள்.
சிலருக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் நடக்கும். பணவரவில் தடைகளோ, பொருளாதார கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும் உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.
வாக்கு ஸ்தானம் வலுப்பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். வருடத்தின் ஆரம்பத்திலேயே சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.
இளைய பருவத்தினருக்கு இதுவரை தாமதமாகி வந்த திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக நடந்து நீடித்தும் இருக்கும்.
கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.,
ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள், வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த யோகத்தை தரும்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவான போக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.
கிரகநிலைமைகள் சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.
எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த மேன்மைமிகு புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
“ஜோதிடக்கலை அரசு”
ஆதித்ய குருஜி
பிலவ ஆண்டு பலன்
நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும்
(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை) (பெயாரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)
வளர்ச்சி தரும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபடுவதோடு, யோகமான நாளும், நட்சத்திரமும், திதியும் கூடும் தினத்தில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள வராஹி அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வளர்ச்சியில் உள்ள தளர்ச்சி அகலும்.
தனுசு ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் குருபகவான், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் பாதச்சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறலாம். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். தன ஸ்தானத்தில் சனி பலம் பெற்றிருப்பதால் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான், வெற்றிகள் ஸ்தானத்தில் இருக்கின்றார். தனாதிபதி சனி, சொந்த வீட்டில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை யோகத்தோடும், புத -ஆதித்ய யோகத்தோடும், புத -சுக்ர யோகத்தோடும் இந்த ஆண்டு பிறக்கின்றது. எனவே நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் காண்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் வந்த பிரச்சினை அகலும்.
ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடப்பதால், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றை குறிக்குமிடமான 2-ம் இடத்தில், சனிபகவான் ஆட்சி பெற்றிருப்பதால் வாக்கு வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். சிக்கல்களில் இருந்து படிப்படியாக விடுபடுவீர்கள். செல்வ நிலை உயரும் விதத்தில், தொழில் வளம் சிறப்பாக அமையும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ ஏதேனும் முயற்சி செய்திருந்தால், அதில் வெற்றி கிடைக்கும்.
மூன்றாடமிடத்தில் குருபகவான் இருப்பதால் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தற்கால பணியாக நியமிக்கப்பட்டிருந்தால், அது நிரந்தரப் பணியாக மாறும். விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். சுக ஸ்தானத்திற்கு குரு அதிபதி என்பதால், உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பிள்ளைகள் பட்டப்படிப்பு சம்பந்தமாகவும், படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும், முயற்சி எடுத்திருந்தால் அதிலும் அனுகூலங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகளும் கிடைக்கலாம்.
பஞ்சம ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. அவை யோகம் தரும் விதத்திலேயே அமைகின்றது. புத -சுக்ர யோகம் இருப்பதால், இடம், வீடு வாங்கும் அமைப்பு உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தேங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். ராகு-கேது ஆதிக்கத்தின் விளைவாக புதிய வாகன யோகம் உண்டு. பயணங்களால் பலன் உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.
குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், நான்காமிடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குருபகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். பண நெருக்கடி ஏற்படலாம். உடன்பிறப்புகளால் மன அமைதி குறையும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஒரு தொகையை கொடுத்து உதவும் சூழ்நிலை உருவாகும்.
குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு13.4.2022 அன்று மீன ராசிக்குப் பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது.
குரு பார்வை 7-ம் இடத்தில் பதிவதால், கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். ‘பிள்ளைகளுக்கு வரன்கள் வந்து விலகிப்போகிறதே, எப்பொழுது தான் முடியும்’ என்று அங்கலாய்த்த பெற்றோர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பணிபுரிய எதிர்பார்த்த வாய்ப்புகள் கைகூடிவரும்.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பொன், பொருட்களின் சேர்க்கை உண்டு. பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது. ‘வைத்திருக்கும் வாகனம் தொல்லை தருகிறதே, எப்பொழுது அதை மாற்றலாம்’ என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு, இப்பொழுது அதற்கான வாய்ப்பு உருவாகும். நீண்ட கால நோய்கள் குணமாகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகல, சட்டத்துறை வல்லுநர்கள் உங்களுக்கு சரியான பாதையை அமைத்துக் கொடுப்பர்.
மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களை குருபகவான் பார்ப்பதால், விலகிய சொந்தங்கள் விரும்பி வந்து இணையும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனையும் கைகொடுக்கும். பொதுவாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் நேரம் இது.
ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 5-ம் இடத்திற்கு ராகுவும், 11-ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். இக்காலத்தில் நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். முன்னோர் செய்த ஆலயத் திருப்பணிகளைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினையில் இதுவரை தடை செய்த உறவினர்கள் இப்பொழுது விலகுவர். நினைத்தது நிறைவேறும். பிள்ளைகள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினை படிப்படியாக அகலும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 2,3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. யோகம் தரும் சனிபகவான் வக்ரம் பெறுவதால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். குடியிருக்கும் வீட்டால் பிரச்சினைகள் வரும். கடுமையாக முயற்சித்தும் காரியங்கள் முடிவடையாமல் போகலாம். சோம்பலும், சோர்வும் மனக்குழப்பமும் அதிகரிக்கும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய்- சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் எதையும் துணிந்து செய்ய இயலாது. தன்னம்பிக்கை குறையும். பிள்ளைகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை கூடும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பத் தகாத விதத்தில் அமையும். வெளிநாடு சென்றவர்கள், அங்கு சென்றதற்கான பலன் கிடைக்காமல் பாதியிலேயே சொந்த ஊர் திரும்பும் சூழ்நிலை உண்டு. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கிய தொல்லை வரலாம். மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது அரிது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் பொருளாதார விருத்தியை அதிகரிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது. ஜென்மச் சனி விலகி விட்டதால், இனிமேல் ஆரோக்கியம் சீராகும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான சூழல் அமையும். பணிபுரியும் பெண்களுக்கு நினைத்த இலக்கை அடைய சந்தர்ப்பங்கள் சாதகமாக வந்து சேரும். குரு வழிபாடு குதூகலம் தரும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
குடும்பச் சனியின் ஆதிக்கம், வாழ்வில் கடுமை இனிக்குறையும்!
தனுசு ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசியிலேயே ஜென்மச் சனியாக உலா வந்த சனிபகவான், இப்பொழுது 26.12.2020 அன்று இரண்டாமிடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். ஏழரைச்சனியில், ஜென்மச்சனி விலகி விட்டது. இப்பொழுது ‘பாதச்சனி’ என்று அழைக்கப்படும் குடும்பச்சனியின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. எனவே குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மங்கல ஓசை மனையில் கேட்கும். செல்வ வளம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு சனி சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோகம்’ ஏற்படுகிறது. மேலும் உங்கள் ராசிநாதன் 2-ம் இடத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பண வரவு திருப்தி தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும்.
சுபகாரியங்கள் நிறைவேறும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் அகலும். தள்ளிப்போன கல்யாண காரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். எதிரிகளின் தொல்லை குறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறலாம். இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றது. கல்வி முன்னேற்றம், சுகம், வாகனம், தாய்வழி உறவு, இழப்புகளை ஈடுசெய்யும் அமைப்பு, எதிர்பாராத இடமாற்றம், ஆரோக்கிய நிலை, வெளிநாட்டு முயற்சி, தொழிலில் லாபம், உத்தியோக உயர்வு போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ளும் இடங்களில் உங்களுக்கு யோகம் தரும் சனியின் பார்வை பதிகிறது. எனவே, அவைகளில் எல்லாம் உங்களுக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. 4-ம் இட பார்வையால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தாய்வழி ஆதரவு உண்டு.
சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால், ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
சனியின் பார்வை பதினோராமிடத்தில் பதிவதால், தொழிலில் திருப்திகரமான லாபம் வந்து சேரும். இந்த நேரத்தில் ஒருசிலருக்கு கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகமும் உண்டு. இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். வெளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கலாம். அரசு சார்ந்த பணிகளில் சேர விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல் பிரமுகர்களுக்கு மேலிடத்தின் ஆதரவும், நல்ல பொறுப்புகளும் கிடைக்கலாம். வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து மகிழ்வீர்கள். வாகன யோகம் உண்டு.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அரசியல் அனுகூலம் பெற்றவர்களின் ஆதரவோடும், உங்கள் வாக்கு வன்மையாலும் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பெற்றோர் வழியில் இருந்த மனவருத்தங்கள் மறையும். தந்தை வழியில் ஆதாயம் தரும் தகவல் உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த பஞ்சாயத்துகள், நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவுகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். ‘வீடு வாங்க வேண்டும்’, ‘வாகனம் வாங்க வேண்டும்’ என்ற உங்களின் கனவு நனவாகப் போகின்றது. உஷ்ணாதிக்க நோய்கள் வந்து போகும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகவே அமைகின்றது. அஷ்டமாதிபதியாக சந்திரன் விளங்குவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்போது, பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த கல்யாண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவும், வெளிமாநிலம் செல்லவும் நீங்கள் செய்த முயற்சி கைகூடும். இக்காலத்தில் கும்ப ராசிக்குச் சனி செல்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாங்கிய சொத்தை விற்றுவிட்டு புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராகும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குரு வருகின்றார். எனவே சகோதரர்களால் நன்மை கிடைக்கும். வாழ்க்கைப் பாதையில் புதிய திருப்பம் உண்டாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். தைரியத்தோடு எதையும் செய்வீர்கள். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கப்போகின்றார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டாகும். மித மிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதியப் போவதால் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ் சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத் தக்கதாக இருக்கும். கேது பலத்தால் வருமானம் திருப்தி தரும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சகோதர ஒத்துழைப்பு குறையலாம். வாகன மாற்றம் வருவற்கான அறிகுறி தென்படும். தேக நலனுக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு. கேது பலத்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதோடு இல்லத்துப் பூஜை அறையில் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அனுமன் படத்தை வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபட்டால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
இரண்டில் வந்தது குரு பகவான், இனிமேல் வெற்றிகள் வந்திணையும்!
தனுசு ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்திற்கு வருகின்றார். ஜென்மச் சனி மற்றும் ஜென்ம குருவின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த உங்களுக்கு, அற்புதமான பெயர்ச்சியாக இந்தக் குருப்பெயர்ச்சி அமையப் போகின்றது. வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்தில் இப்பொழுது குரு பகவான் சஞ்சரிப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
குரு நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெற்றதால், மனக்குழப்பங்கள் அகலும். இடையில் மூன்றாம் இடத்திற்கும் குரு செல்கின்றார். வக்ர இயக்கத்திலும் சில மாதங்கள் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும் ஏழரைச் சனியால் இடர்பாடுகள் வரும்பொழுது, சனிக்கிமையில் அனுமன் வழிபாடும், வியாழக்கிழமையில் குரு வழிபாடும் செய்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக்கொள்ள இயலும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் அந்த இடம் புனிதமடைகின்றது. எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிப்பது 6-ம் இடமாகும். எனவே அவை மூன்றின் தொல்லையும் உங்களுக்கு ஏற்படாது. எதிரிகள் உதிரிகளாவர். உங்கள் மீது தொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்கிக்கொள்வர். பஞ்சாயத்துக்கள் சாதமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இனிய மாற்றங்கள் வந்து சேரும். உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளைக் கொடுப்பர். உடல்நலம் பற்றிய பயம் அகலும்.
குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால், இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். இழந்த பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கலாம். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வரலாம். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள், மீண்டும் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் கைகூடலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் முத்தான தொழில் வாய்க்கும். முன்னேற்றம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் பங்குதாரர்களை தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்வீர்கள். அரசு வழி தொல்லைகள் மறைந்து போகலாம். ஆயினும் ஏழரைச்சனியில் இன்னும் பாதச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது. உங்கள் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் என்பதால் நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். பிதுரார்ஜித ஸ்தானம் மற்றும் பாக்ய ஸ்தானம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு அதிபதியான சூரியன் சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து நன்மைகளும் படிப்படியாக வந்துசேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு திடீரென அதிகாரப் பதவியும், பொறுப்புகளும் வரலாம். பிள்ளைகள் வழியில் விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியானவர், சந்திரன். எனவே இக்காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. ‘நினைத்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கின்றதே’ என்று கவலைப்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் கூட உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. உங்கள் முன்னேற்றத்தை அல்லது முக்கியத் தகவல்களை உடனிருப்பவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளக்கூடாது. வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். இந்தச் சோதனை காலத்தை சாதனைக் காலமாக மாற்ற, குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சில நல்ல பலன்கள் நடைபெறும். ‘குருமங்கள யோகம்’ செயல்படும் நேரமிது. இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும். உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ, பேரன் பேத்திகளுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ, காலாகாலத்தில் நடைபெற வேண்டிய கல்யாணங்கள் நல்லவிதமாக முடியும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு, வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. வீடு கட்டுதல், கட்டிய வீட்டைப் பழுது பார்த்தல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள்். பகையாக இருந்த நண்பர்கள் உறவாக மாறுவர். தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில்செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு அனைத்து வழிகளிலும் நன்மைகளை வழங்குவார். தொட்டது துலங்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடிவரும். சுற்றமும், நட்பும் பாராட்டும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. எனவே வரன்கள் வாசல் தேடி வரும். வாங்கல் - கொடுக்கல்கள் திருப்தி தரும். வருமானம் உயரும். வாகன யோகம் முதல் அனைத்து யோகங்களும் வந்துசேரும். தேக நலனில் மட்டும் அப்போதைக்கப்போது கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. தந்தைவழி உறவில் இருந்த விரிசல் அகலும்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். மகரம், கும்பம் இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப்போகின்றது. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது யோகத்தை வழங்கும். எனவே வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். வருமானம் உயரும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நேரமிது.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
கடந்த சில ஆண்டுகளாக ஏழரைச் சனியினால் பாதிக்கப் பட்டிருக்கும் தனுசு ராசிக்கு இப்போது நல்ல கோட்சார அமைப்புகள் உருவாகின்றன. குறிப்பாக தற்போதைய ராகு,கேது பெயர்ச்சி மிகவும் நன்மையைத் தரும் ஆறு பனிரெண்டாமிடங்களில் உங்களுக்கு நடக்க இருக்கிறது.
ராகு,கேதுக்கள் இதுபோல ஒரு நல்ல இடத்திற்கு வருவது பதினெட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். ஆகவே இம்முறை தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு கேதுப் பெயர்ச்சியால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
அதைப் போலவே ராகுகேது பெயர்ச்சியை அடுத்து நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியும் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தைத் தரும். தற்போது ராசியில் இருக்கும் குரு இரண்டாமிடத்திற்கு செல்வது ஒரு நல்ல மாறுதலாக இருக்கும். இதன் மூலம் தனுசு ராசிக்காரர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் நிலையைப் பெறுவீர்கள்.
ராகு, கேது பெயர்ச்சியும், குருப் பெயர்ச்சியும் உங்களை சந்தோஷப்படுத்தப் படுத்தும் விதத்தில் அமைவது எப்போதோ ஒருமுறை மட்டுமே நடக்க இருப்பது என்பதால் எந்த வகையில் பார்த்தாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு கோட்சார ரீதியில் தனுசுவிற்கு மிகுந்த சாதகமான பலன்கள் நடக்க இருக்கின்றன.
அதேநேரத்தில் கோட்சார பலன்கள் என்பவை பொதுவானவைதான். ஒரு மனிதனுக்கு நடக்க இருக்கும் நல்ல கெட்ட சம்பவங்களையும், நன்மை தீமைகளையும் உறுதியாகச் சொல்பவை அவனது பிறந்த ஜாதக அமைப்புப்படி நடக்க இருக்கும் தசாபுக்தி அமைப்புகள்தான்.
தசாபுக்தி பலன்களும், இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் கோட்சார பலன்களும் சரியான விதத்தில் நன்மையாக ஒன்று சேரும் போது ஒரு மனிதன் சந்தோஷ வாழ்வின் உச்சத்திற்கு செல்ல முடியும்.
எனவே பிறந்த ஜாதகப்படி நல்ல தசா,புக்தி அமைப்பு நடப்பவர்கள் நான் சொல்லும் இந்த நன்மைகளை முழுமையாக அனுபவிப்பீர்கள். பிறந்த ஜாதகப்படி நல்ல அமைப்புகள் நடக்காதவர்களுக்கு பலன்கள் சற்றுக் குறைவாக இருக்கும். தனுசு ராசியினர் கடந்த காலங்களில் ஜென்மச் சனியினால் பட்ட கஷ்டங்களுக்கு பம்பர் பரிசாக வரும் இரண்டு பெயர்ச்சிகளும் அமையும் என்பதால் இந்த வருடத்தின் இறுதியில் இருந்தே மிகவும் நன்மைகளை அடைவீர்கள்.
ஆறாமிடத்திற்கு மாறும் ராகுவால் செய்தொழில் விருத்தி, எதிலும் லாபம், யாவற்றிலும் வெற்றி, அரசலாபம், அன்னிய இன, மத, மொழிக்காரர்களால் நன்மை. வெளிநாடு, வெளிமாநில மேன்மை, தூரஇடங்களில் இருந்து பணம் கிடைத்தல், சிறிது முயற்சி, பெரியநன்மை. அதிர்ஷ்டம் ஆகிய பலன்கள் உங்களுக்கு நடக்கும். இதுவரை நடக்காமல் தட்டிப்போயிருந்த அத்தனை பாக்கியங்களும், கொடுப்பினைகளும் இப்போது தடையின்றிக் கிடைக்கும்.
ராகு ரிஷப வீட்டில் அமரும் போது அதிகமான நன்மைகளைச் செய்வார் என்பதால் இம்முறை இரட்டிப்பு நன்மையாக பெயர்ச்சிக்குப் பிறகு தாராள பணவரவு, குழந்தைகளால் பெருமை போன்ற பலன்களைச் செய்வார். குறிப்பாக பிறந்த ஜாதகத்தில் ராகுதசை அல்லது ராகுபுக்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், யோகமான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கும் இம்முறை ராகுவால் மேம்பட்ட நல்ல லாபங்கள் கிடைக்கும்.
இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்குப் பிடித்த வகையில் நல்லசம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.
பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவிஉயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் தொழில்மேன்மையும், புதிய தொழில் தொடங்குதலும் அடைவீர்கள்.
பரிகாரங்கள்
ராகுபகவானால் பெறும் நன்மைகளை கூட்டிக்கொள்ள ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு சலவையாளருக்கு 18 கிலோ அடுப்புக்கரி தானம் செய்யவும். கேதுபகவானுக்கென உள்ள திருத்தலமான காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயத்தில் அர்ச்சனை அபிஷேக ஆராதனைகளையும் செய்யலாம்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)