
இன்றைய ராசி பலன்கள்
நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து முடிக்கும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
வார பலன்கள்
டிசம்பர் 09-12-2019 முதல் 15-12-2019 வரை:
சிம்மத்திற்கு வளர்பிறை காலம் இது. நட்புக் கிரகங்கள் நல்லநிலையில் இருப்பதோடு, ராசிக்கு குருபார்வை இருப்பது நன்மைகளை தரும் என்பதால் சிம்மத்தினர் எதிலும் துடிப்புடன் இறங்கி செயலை முடித்து காட்டும் வாரம் இது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பெண்களால் லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம்.
மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் இருந்த பிரச்சினைகள் தீரும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். யாருக்காவது எதாவது செய்து தருவதாக கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை உங்கள் செயல்களால் மற்றவர்களுக்கு புரிய வைப்பீர்கள். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இப்போது முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் வாரம் இது.
ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888
தமிழ் மாத ஜோதிடம்
17-11-2019 முதல் 16-12-2019 வரை
விகாரி வருடம் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சூரியன் 4-ம் இடத்தில் சஞ்சரித்து 10-ம் இடத்தைப் பார்க்கின்றார். இப்பொழுது குரு, தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி விட்டார். அங்கிருந்தபடியே 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கிறார். குருவின் பார்வையால் அற்புதமான பலன்கள் உங்களுக்கு வந்து சேரப்போகிறது. குறிப்பாக ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும் என்பார்கள். அந்த அடிப்படையில் குரு பார்க்கும் பார்வை சிறப்பான பார்வை என்பதால், இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும்.
பொருளாதாரம் மிகச்சிறப்பாக இருக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். சுகங்களும், சந்தோஷங்களும், சுற்றத்தாரின் பாராட்டுக்களும் குவியும் நேரம் இது.
ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல்கள் அகலும். அனைத்து சுபகாரியங்களும் இல்லத்தில் படிப்படியாக நடைபெறும். தொழில், உத்தியோகத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். வந்த துயரங்கள் வாசலோடு நிற்பது மட்டுமல்லாமல் வரன்கள் அடுக்கடுக்காக வந்து அலைமோதும். கைகூடாத சில காரியங்கள் இப்பொழுது கைகூடுவதற்கான அறி குறிகள் தென்படும்.
யோகாதிபதி செவ்வாயும், தன லாபாதிபதி புதனும் இணைந்து இப்பொழுது சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார்கள். எனவே வெற்றி வாய்ப்புகள் வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். உறவினர்கள் உங்களுக்கு உறு துணையாக விளங்குவர். உடன்பிறப்புகள் உங்களுக்கு கடன்சுமை குறைய வழிவகுத்துக் கொடுப்பர். கனிவான வாழ்வு அமைய ஆலோசனைகளும் வழங்குவர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் வந்து சேரும். கவலை என்ற மூன்றெழுத்து உங்கள் அகராதியை விட்டு அகலப்போகிறது.
பதினோறாம் இடத்தில் ராகு இருப்பதால் பயணங்கள் பலன் தரும் விதத்தில் அமையும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் பரவும். மதிப்பும், மரியாதையும் உயரும். ஆரோக்கிய தொல்லையில் இருந்து விடுபட்டு உற்சாகமாக பணியாற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, கல்யாண முயற்சி, வேலை வாய்ப்பு சம்பந்தமாக ஏதேனும் புதிய முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் அது சிறப்பாக நடைபெறும்.
இம்மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த திருக்கார்த்திகைத் திருநாள் வருகிறது. அன்றைய தினம் அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அபிஷேக ஆராதனைகளை கண்டு களிப்பதோடு சஷ்டி கவசம் பாடி சண்முகநாதரையும் வழிபட்டால் வெற்றி தேவதை உங்கள் இல்லத்தில் அடியெடுத்து வைப்பார்.
தனுசு சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், நவம்பர் 22-ந் தேதி தனுசு ராசிக்குச் செல்கிறார். அங்குள்ள குருவோடு அவர் இணைந்திருக்கிறார். 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது, பிள்ளைகளின் தொழில் முயற்சிவெற்றியாகும். பட்டப்படிப்பு முடித்தும் வேலையில்லாமல் வீட்டிலிருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது நல்ல நிறுவனங்களில் பணிபுரிவதற்கான அழைப்புகள் வரலாம். தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. பூர்வீகச் சொத்துக்களை பெற்றுக்கொண்டவர்கள், அதில் இல்லம் கட்டுவது அல்லது அந்த வீட்டை பழுது பார்ப்பது போன்ற பயனுள்ள காரியங்களைச் செய்வதில் அக்கறை காட்டுவீர்கள்.
விருச்சிக புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் டிசம்பர் 3-ந் தேதி சுக ஸ்தானத்திற்கு வருகிறார். 4-ம் இடம் என்பது சுகஸ்தானம் மட்டுமல்ல வாகனம், தாய், கல்வி போன்றவற்றையும் குறிக்கும் இடமாகும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இடம், பூமியால் லாபம் கிடைக்கும். தடம் மாறிச் சென்றவர்கள் கூட தானாக மனம் மாறி உங்களோடு வந்திணைந்து செயல்படுவர். இக்காலத்தை ஒரு பொற்காலமாகவே கருதலாம். குறிப்பாக மாமன், மைத்துனர் வழியில் ஏற்படும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு.
இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபட்டு வருவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- நவம்பர்: 17, 22, 23, 26, 27, 28 டிசம்பர்: 8, 9, 14, 15
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். புதிய நபர்களின் ஒத்துழைப்பால் பழைய பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் மகிழ்ச்சி கூடும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தாய்வழியில் தனலாபம் திருப்தி தரும். சகோதரர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தென்படும். பிள்ளைகளால் பெருமை கூடும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இனிதே கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர் களின் ஒத்துழைப்போடு நல்ல காரியமொன்று இல்லத்தில் நடைபெறும். செவ்வாய் தோறும் முருகப்பெருமானை வழிபடுவதோடு யோகபலம் பெற்ற நாளில் திருச்செந்தூர் சென்று வழிபட்டு வருவது நல்லது.
ஆண்டு பலன் - 2019
விகாரி வருட பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற விகாரி தமிழ்ப் புத்தாண்டு நன்மைகளை அள்ளித் தரும் வருடமாக இருக்கும். புது வருட ஆரம்பத்தில், மறைமுகமான தன லாபங் களைக் கொடுக்கக் கூடிய ராகு பதினோன்றாமிடத்தில் இருப்பது உங்களுக்கு மேன்மைகளைத் தருகின்ற ஒரு அமைப்பாகும். உங்களின் யோகாதிபதியான குரு வருட பிற்பகுதியான நவம்பர் மாதம் ஐந்தாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கப் போவது அதைவிட நல்ல பலன்களை சிம்மத்திற்குத் தரும். எனவே எப்படிப் பார்த்தாலும் பிறக்க இருக்கும் தமிழ்ப் புதுவருடம் சிம்மத்திற்கு நன்மைகளை மட்டுமே தரும்.
ராகு நன்மைகளைத் தரும் இடமாக 3, 6, 11-ம் இடங்கள் நம்முடைய கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இம்முறை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் இருப்பதால் ராகுவின் சிறப்புக்களான வெளிமாநிலம், வெளிநாடு, இயங்கிக் கொண்டே இருக்கும் பொருட்கள், அந்நியமொழி, இன, மதம் போன்ற விஷயங்களில் லாபங்கள் இருக்கும்.
இந்த அமைப்பின் மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாத சிம்ம ராசிக்காரர்கள் மேம்பட்ட வருமானங்களைத் தரக்கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிரந்தரம் வருமானம் உண்டு என்ற அமைப்பு இந்த வருடம் ஆரம்பிக்கும். உங்களில் சிலருக்கு இதுவரை கை கொடுக்காத சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல் லாபகரமாக நடக்கத் துவங்கும். ஐந்தாமிடத்தில் இருக்கும் சனியால் கடந்த இரண்டு வருடங்களாக பிள்ளைகள் விஷயத்தில் தொல்லைகளையும், மன அழுத்தங்களையும், துயரங்களையும் அடைந்தவர்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டு இனிமேல் பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் தீரும்.
மகனுக்கு இதுவரை நல்ல வேலை கிடைக்கவில்லையே, வயது ஏறிக்கொண்டே போகிறது மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று நித்தம் நித்தம் கவலைப்பட்டு தூக்கம் இல்லாமல் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களின் மனக்குறை தீரும். மகன், மகள் போன்றவர்களின் வேலை, திருமணம் தற்போது தடைகள் இல்லாமல் நடைபெறுவதை பார்க்க முடியும்.
ஏற்கனவே நடந்த திருமணத்தின் மூலம் சிக்கல்களை சந்தித்து நீதிமன்ற வழக்கு போலீஸ் என்று அல்லாடிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்து வழக்கு ஒரு முடிவுக்கு வரும். இந்தக் காலகட்டத்தில் இரண்டாவது திருமணமும் அமைந்து அந்த வாழ்க்கை நல்லபடியாகவும், நீடித்தும் இருக்கும்.
நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு குரு நல்ல ஸ்தானமான ஐந்திற்கு இடம் பெயர்வதால் குருவாலும் புத்தாண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு நன்மைகள் இருக்கும்.
தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.
காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இந்த வருடம் பதவிஉயர்வு கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவைகளும் இருக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினை கள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். சரியான வருமானம் இன்றி பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.
தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம். மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத் தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள்.
எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது. கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் லாபம் கிடைக்கும்.
இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.
பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செல வழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும். உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள்.
தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள்.
ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும். மொத்தத்தில் சிம்மத்திற்கு அனைத்து விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய வருடமாக இந்த வருடம் அமையும்.
ஆதித்ய குருஜி
செல்: 88709 98888
சனிப்பெயர்ச்சி பலன்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
சிம்ம ராசிக்கு ஒரு மேன்மையான ஒரு கால கட்டத்தை தரக் கூடிய குருபெயர்ச்சி ஆரம்பித் திருக்கிறது. கடந்த காலங்களில் சிம்மராசிக்கு கோசார அமைப்புகளில் எந்த நல்ல பலன்களும் நடக்கவில்லை. குருவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதகமற்ற இடங்கள் என்று சொல்லப்படக்கூடிய மூன்று மற்றும் நான்காம் இடங்களில் அமர்ந்து நல்ல பலன்களை தர இயலாத நிலைமையில் இருந்தார்.
முக்கியமாக இன்னும் சில வாரங்களில் வரும் ஜனவரி மாதம் 24ம் தேதி கோட்சார ரீதியாக நல்லபலன்களை தரக்கூடிய ஆறாம் இடத்திற்கு சனி மாறுவது சிம்மத்திற்கு மிகுந்த நன்மையை கொடுக்கும் அமைப்பாகும். இதற்கு மேலும் கூடுதல் வலு சேர்க்கும் விதமாக இந்தப் பெயர்ச்சியின் மூலம் குரு 5-ஆம் இடத்துக்கு வருவது பெரிய நன்மைகளை தரக்கூடிய நிலையாகும்.
இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் இதுவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பாக்கியங்கள் கிடைக்கவில்லையோ அந்த பாக்கியங்கள் அனைத்தும் தாராளமாக தடையின்றி கிடைக்கும். மேலும் பிறந்த ஜாதகப்படி தசாபுக்தி அமைப்புகளும் நல்லவிதமாக கைகொடுக்கும் நிலையில் இருந்தால் இது சிம்மத்திற்கு தொட்டது துலங்கும் காலமாகவும், புதிய உச்சத்தை தொடும் காலமாகவும் அமையும்.
ஐந்தில் குரு, ஆறில் சனி என்கிற நிலைமை மிகவும் அரிதாகவே வரும் ஓர் அமைப்பு என்பதால் இதுவரை எந்த விஷயத்தில் தடங்கல்கள் தடைகள் உங்களுக்கு இருந்து வந்ததோ அவை அனைத்தும் தீர்ந்து நல்லதொரு முன்னேற்றமான ஒரு காலத்தை சிம்ம ராசியினர் அடையப்போகிறீர்கள்.
குரு தன்னுடைய பார்வையால் ராசியைப் பார்க்கும் காலம் அனைத்து மனிதர்களுக்கும் யோகம் தரக்கூடிய ஒரு அமைப்பாக வேத ஜோதிடத்தில் வலியுறுத்தப்படுகிறது.
அதிலும் அவரது 9-ஆம் பார்வை மிகவும் விசேஷமானது என்கின்ற ஒரு நிலைமையில், சிம்மத்தின் யோகாதிபதியான குரு தனது ஆட்சி வீடான ஐந்தாம் இடத்தில் அமர்ந்து தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியை இன்னும் 13 மாத காலத்திற்கு பார்க்கப் போவதால் சிம்மத்தினருக்கு முயற்சி இன்றியே அனைத்து விஷயங்களும் கிடைக்கும் ஒரு காலகட்டம் இது.
ராசியை குரு பார்ப்பதால் உங்களின் மனம் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகம் பொலிவு பெறும். அனைத்து விஷயங்களையும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நன்கு செயல்படுவீர்கள். சிந்தனை செயல்திறன் நன்றாக இருக்கும் என்பதால் இம்முறை சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் தங்களின் பக்கத்தில் இருப்பதைப் போல உணர்வீர்கள். எல்லா விதங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய ஒரு பெயர்ச்சி இது.
குருவின் இருப்பைவிட பார்வை பலமே மிகவும் நல்லதாக சொல்லப்படுகிறது. ஐந்தாம் இடத்தில் இருக்கும் குரு தனது 5ம் பார்வையால் தன்னுடைய சொந்த வீடான பாக்கியஸ்தானம் என்று சொல்லப்படக்கூடிய ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பார். பாக்கிய ஸ்தானம் என்பது அவரவருடைய வயதிற்கு ஏற்றார் போல திருமண பாக்கியம், புத்திர பாக்கியம், மற்றும் தொழில் அமைப்புகளை கொடுக்கக்கூடியது. எனவே இதுவரை அவரவர் தகுதிக்கேற்ப உங்களுக்கு என்னென்ன பாக்கியங்கள் கிடைக்கவில்லையோ அந்த பாக்கியங்கள் அனைத்தும் கிடைப்பதற்கு குரு துணையிருப்பார்.
இந்த அமைப்பின் மூலம் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் கிடைக்காதவர்களுக்கு குழந்தை பிறக்கும். நல்ல வேலை இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். 5ஆம் இடத்தில் இருந்து 11-ஆம் வீட்டைப் பார்க்கும் குருவால் லாப ஸ்தானம் வலுப்பெறுகிறது. இதுவரை வேலை தொழில் போன்ற அமைப்புகளில் அதிகமாக உழைத்தும் அதற்கேற்றார்போல கூலி கிடைக்காதவர்கள், சிரமத்திற்கு ஏற்ற பொருளாதார மேன்மை பெறாதவர்களுக்கு இம்முறை மிகச்சிறந்த நல்ல பலன்கள் இருக்கும்.
தொழில் இடங்களில் உங்களுடைய திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும் காலகட்டம் இது. இதுவரை கடுமையான முயற்சி செய்தும் சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவற்றை பெறாதவர்கள் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் இவையிரண்டும் உங்களை தேடி வர பெறுவீர்கள்.
லாப ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் தொழில் வியாபாரம் போன்றவைகளில் இலாபம் நிறைவாக வரும். குறைந்த முதலீட்டில் தொழில் செய்பவர்களுக்கு கூட இதுவரை கிடைக்காத மிகப் பெரிய லாபம் கிடைக்கும். எனவே இம்முறை சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும் என்பது உறுதி. குரு தனது 9ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் பலிக்கும் காலகட்டம் இது. உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.
இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப் புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
வியாபாரிகளுக்கு இது லாபங்கள் வரக்கூடிய காலகட்டமாக அமையும். எல்லா விதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு இது நல்ல நேரம். அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.
சில தொழில் முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள் அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.
புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை அமையும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் நல்லபடியாக அனைத்தையும் கிளியர் செய்வீர்கள்.
அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே அரசு, வங்கி போன்ற தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். முதல் வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றி கோர்ட், போலீஸ் என்று அலைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.
மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நல்லவிதமாக செய்ய முடியும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள்.
சொந்த வீடு கட்டுவதற்கு இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் நகை சேர்க்கை இருக்கும்.
கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.
பொதுவில் சிம்ம ராசிக்கு மிகவும் நன்மை தருகின்ற ஒரு குருப்பெயர்ச்சி இது. இனிமேலும் தயங்காமல் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய தருணம் இது.
பரிகாரங்கள்:
குருவின் திருவருளை முழுமையாகப் பெற உங்களின் ஜன்ம நட்சத்திர தினம் அல்லது ஒரு வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்குப் பிடித்த உணவினைத் தந்து அதன் ஆசிகளைப் பெறுங்கள்.
ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் மார்ச் மாதம் (7-3-2019) முதல் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம்
சிம்ம ராசிக்கு இதுவரை பனிரெண் டாமிடத்தில் அமர்ந்து அடிக்கடி பயணங் களையும் தேவையற்ற அலைச்சல்களையும் விரயங்களையும் கொடுத்துக் கொண்டிருந்த ராகு தற்போது மிகவும் யோகம் தரக்கூடிய நிலையான பதினொன்றாமிடத்திற்கு மாறுகிறார்.
ராகு பதினொன்றாமிடத்தில் இருப்பது பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே அமையக்கூடிய ஒரு நிகழ்வு என்பதோடு, ராகு உள்ளிட்ட பாபக் கிரகங்களுக்கு பதினொன்றாம் இடம் மிகவும் நன்மை களைத் தரக்கூடிய இடமாக நம்முடைய மூலநூல்களில் சொல்லப்பட்டிருப்ப தால் இந்த ராகு-கேது பெயர்ச்சியில் நல்ல நன்மைகளை அனுபவிக்க இருக்கும் ராசி சிம்ம ராசியாகும்.
சரியான கோட்சார கிரக நிலைகள் அமையாமல் இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பம்பர் பரிசாக இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி அமையும் என்பதால் மிகுந்த நன்மைகளைத் தரக்கூடிய ஒரு அமைப்பாக இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.
பதினொன்றாமிடத்திற்கு மாறும் ராகுவால் செய்தொழில் விருத்தி, எதிலும் லாபம், யாவற்றிலும் வெற்றி, அரசலாபம், அன்னிய இன, மத, மொழிக் காரர்களால் நன்மை. வெளிநாடு, வெளிமாநில மேன்மை, தூரஇடங்களில் இருந்து பணம் கிடைத்தல், சிறிது முயற்சி, பெரியநன்மை. அதிர்ஷ்டம் ஆகிய பலன்கள் உங்களுக்கு நடக்கும். இதுவரை சிம்ம ராசிக் காரர்களுக்கு நடக்காமல் தட்டிப் போயிருந்த அத்தனை பாக்கியங்களும், கொடுப்பினைகளும் இப்போது தடையின்றிக் கிடைக்கும்.
ராகு சேரும்போது அல்லது சுபரால் பார்க்கப்படும் போது தானும் சுபராக மாறி அதிகமான நன்மைகளைச் செய்வார் என்பதால் இம்முறை சிம்மராசிக்கு இரட் டிப்பு நன்மையாக வரும் நவம்பர் மாதம் நடக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ராகு குருவின் பார்வையில் இருப்பார் என்பதால் தாராள பணவரவு, குழந்தைகளால் பெருமை போன்ற பலன்களையும் சிம்ம ராசிக்குச் செய்வார். குறிப்பாக பிறந்த ஜாதகத்தில் ராகுதசை அல்லது ராகுபுக்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், யோகமான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கும் இம்முறை ராகுவால் மேம்பட்ட நல்ல லாபங்கள் கிடைக்கும்.
அடுத்து ராகு ஒரு ராசிக்கு நல்ல பலன்களைத் தரும் நிலையில் இருக்கும் போது அவருக்கு எதிரில் சாதகமற்ற நிலைமையில் கேது இருப்பார் என்பது ஜோதிட விதி.
ஆயினும் இம்முறை கேது இதுவரை இருந்த நல்ல இடமான ஆறாமிடத்தில் இருந்து மாறி ஐந்தாம் இடத்திற்கு வந்து உங்களுக்கு சாதகமற்ற பலன்களை கொடுக்க இருந்தாலும், குருவின் வீட்டிற்கு மாறி, குருவோடு இணைய இருப்பதால் கேது இம்முறை கெடு தல்களைச் செய்யமாட்டார்.
மேலும் கேதுவிற்கு சுபரின் வீடுகள் நன்மை தரும் வீடுகளாக நமது மூல நூல்களில் சொல்லப்பட்டிருப்பதால் இம்முறை குருவின் தனுசு வீட்டிற்கு மாறும் கேது, சிம்ம ராசிக்கு கெடுதல்கள் எதுவும் செய்வதற்கு வாய்ப்பில்லை. எனவே ராகு-கேது இரண்டு முனைகளிலும் இம்முறை நல்ல பலன்களே சிம்ம ராசிக்கு நடக்கும் என்பதால் இந்தப்பெயர்ச்சியில் அதிகம் நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள் என்பது உறுதி.
இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயி ருந்தவர்களுக்கு மனதுக்குப் பிடித்த வகை யில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும்.
பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.
அரசு தனியார்துறை ஊழியர் களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவிஉயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற் சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் தொழில்மேன்மையும், புதிய தொழில் தொடங்குதலும் அடைவீர்கள்.
கூட்டுத் தொழிலில்இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடு களும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய முயற்சிகளை இப்போது செய்யலாம். இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். ஏழரைச்சனியின் தாக்கத்தினால் திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும்.
குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். காதலித்துத் கொண்டிருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கி யம் தாமதித்தவர்களுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.
வழக்கு கோர்ட் காவல் துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண் டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.
பெண்களுக்கு இந்த ராகுகேதுப் பெயர்ச்சி சிறப்பான நன்மைகளைத் தரும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும்.
நவம்பர் மாதத்தில் நடைபெறும் குருப்பெயர்ச்சியின் மூலம் குருவும் யோகம் தரும் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் அனைத்து சுபகாரியங்களும் நிறைவேறி அதன் மூலம் சுப விரையங்களே இருக்கும். வீண் விரையங்கள் இருக்காது. செலவுகள் இருக்கும் என்பதால் செலவழிக்க பணவரவும் தாராளமாக இருக்கும்.
வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வாங்க முடியும். புதிதாக வாகன யோகம் வந்து விட்டது. நீண்ட காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த புதிய வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.
இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள். கடன் பெற்று நல்ல பிளாட் வாங்க முடியும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.
செலவுகள் அதிகம் இருக்கும் எனபதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம் என்பதால் வரப்போகும் வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. நல்ல நேரத்தில் வந்திருக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிம்ம ராசியினர் உங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வீர்கள் என்பது நிச்சயம்.
பரிகாரங்கள்
ராகு பகவானால் கிடைக்கும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள திருநாகேஸ்வரம் போன்ற திருத் தலங்களுக்கு ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வழிபடுங்கள். தமிழ் நாட்டில் நாகநாத சுவாமி என்ற பெயருள்ள அத்தனை கோவில்களும் ராகுகேது திருத்தலங்கள்தான். உங்கள் அருகில் உள்ள கோவில்களில் வழிபடலாம்.
கணித்தவர் ஜோதிடக்கலை அரசு
ஆதித்யகுருஜி
88709 98888