iFLICKS தொடர்புக்கு: 8754422764
இன்றைய ராசி மேஷம்
மேஷம்

இன்றைய ராசி பலன்கள்

வார பலன்கள்

16-10-2020 முதல் 22-10-2020 வரை

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியாக சில நன்மைகளைப் பெற்றாலும், ஏதோ ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். தொழிலில், கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வளர்ச்சி உண்டு. குடும்ப ஒற்றுமையால் பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள். கணவன்-மனைவி இடையே காரணமின்றி சிறு கலகங்கள் ஏற்பட்டு சரியாகும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு தீபமேற்றி வழிபடுங்கள்.

 

தமிழ் மாத ஜோதிடம்

அக்டோபர் 17-ம் தேதியில் இருந்து நவம்பர் 16-ம் தேதி வரை

சார்வரி வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதனான செவ்வாய் வக்ரம் பெற்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். 6-ம் இடத்தில் புதன் உச்சம் பெற்று வக்ரம் பெற்றிருக்கின்றார். குரு தனுசு ராசியில் இருந்தபடி உங்கள் ராசியைப் பார்க்கின்றார். குரு பார்வை இருப்பதால் வக்ர கிரகங்களின் ஆதிக்கமாக இருந்தாலும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. மேலும் ‘குரு மங்கள யோக’மும் இருப்பதால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

நீச்சம் பெறும் சுக்ரன்

இதுவரை சிம்ம ராசியில் சஞ்சரித்து வந்த சுக்ரன், அக்டோபர் 23-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்கின்றார். கன்னி ராசி, சுக்ரனுக்கு வலிமையிழந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். உச்சம் பெற்ற புதனோடு சுக்ரன் சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோக’ அடிப்படையில் உங்களுக்கு நன்மைகளையே செய்யும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். வெளிநாடு சம்பந்தமாக அனுகூலமான தகவல் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மீன செவ்வாய்

உங்கள் ராசிநாதன் செவ்வாய், அக்டோபர் 26-ந் தேதி வக்ர இயக்கத்தில் மீன ராசிக்குச் செல்கின்றார். வக்ரமாக இருந்தாலும் குரு வீட்டிற்கு செல்வதால் பெரும் பாதிப்பு ஏற்படாது. பொதுவாக தைரியகாரகன் செவ்வாய் என்பதால் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்க வேண்டாம். இடம், பூமிக்கு அதிபதியானவர் செவ்வாய் என்பதால் வக்ர இயக்க காலத்தில், நிலுவை பணம் வரலாம். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் எதிர்பாராத விதமாக வந்துசேரலாம்.

புதனின் வக்ர நிவர்த்திக் காலம்

அக்டோபர் 27-ந் தேதி கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புதன், வக்ர நிவர்த்தியாகின்றார். ஜீவன ஸ்தானம் பலம்பெறுவதால் நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு வரப்போகின்றது. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் கூட்டாளிகள் வந்திணைவர். மூலதனம் போட்ட வங்கிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக முயற்சியில் ஈடுபட்டவர்களாக இருந்தால் உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பும், சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவலும் வரலாம். நவம்பர் 4-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கின்றார். அங்குள்ள சூரியனோடு சேரும்பொழுது ‘புத-ஆதித்ய யோகம்’ உருவாகும். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

மகர குருவின் சஞ்சாரம்

நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். கடந்த ஓராண்டாக தனுசு ராசியில் சஞ்சரித்த குரு இப்போது மகர ராசிக்கு செல்கின்றார். மகர ராசி குருவிற்கு நீச்ச வீடாகும். அங்கிருந்தபடி 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்வையிடுகின்றார். இதன்மூலம் குடும்ப முன்னேற்றம், தாய்வழி அனுகூலம், பணிபுரியும் இடத்தில் பாராட்டு போன்றவை கிடைக்க வழிவகுப்பார். நீச்ச குருவாக இருந்தாலும், குருவின் பார்வைக்கு பலன் உண்டு என்பதால் குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது. இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்திசெய்யும் நாட்கள்:-

அக்டோபர்: 22, 23, 27, 28, நவம்பர்: 1, 2, 6, 7, 8

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் வரவும், செலவும் சமமாகும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் திடீரென முடிவிற்கு வரலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவும் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் பொருளாதார முன்னேற்றத்தோடு வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். நவராத்திரி நாயகியை வழிபடுவது நல்லது.

ஆண்டு பலன் - 2020

1-1-2020 முதல் 31-12-2020 வரை

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு வந்துவிட்டது. எண்ணங்கள் ஈடேற வேண்டுமானால் குருவின் அருட்பார்வை வேண்டும். அந்த அமைப்பு ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு இருக்கிறது.

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். வெற்றிகள் ஸ்தானாதிபதி புதன், சூரியனோடு இணைந்து புத - ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். வருடத் தொடக்கத்திலேயே 9-ம் இடத்தில் 5 கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன. சூரியன், புதன், வியாழன், சனி, கேது ஆகியவற்றின் சேர்க்கையால் நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வரப்போகிறது. பாக்கியாதிபதி சூரியன், ஜீவன ஸ்தானாதிபதி புதன், தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி ஆகியவற்றுடன், ஞானகாரகன் கேதுவும் இணைந்து குருவிற்கு சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிப்பதால், பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நற்பலன்களும் இப்பொழுது கிடைக்கப் போகிறது.

ஆண்டின் தொடக்கத்தில் குரு பலம்

வருடம் தொடங்கும் பொழுதே குரு உங்கள் ராசியையும், 3 மற்றும் 5 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும்’ என்பது விதி. அந்த அடிப்படையில் இனித் தொழிலில் அதிக அளவில் லாபம் கிடைக்கும். ஒரு சிலர் கிளைத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும். பலவித உபாதைகளால் அவதிப்பட்டவர்கள், அதில் இருந்து நிவாரணம் பெறுவா். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வியாபார முன்னேற்றம் கருதிப் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன் வருவீர்கள். குரு பார்வையால், மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வாய்ப்பு உருவாகும். மழலைப் பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு, அதற்கான சூழல் உருவாகும்.

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். தன, சப்தமாதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுகாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் உலாவுகிறார். இவற்றைப் பார்க்கும் பொழுது செவ்வாய் நீங்கலாக மற்ற அனைத்து கிரகங்களும் ராகு-கேது ஆதிக்கத்தில் இருக்கின்றன. எனவே கேதுவால் கெடுபலன்கள் நடைபெறாமல் இருக்கவும், ராகுவால் யோக வாய்ப்பு கள் வந்து சேரவும், அனுகூலம் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று சர்ப்ப சாந்தி பரிகாரங்களைச் செய்யுங்கள்.

மகர குருவின் சஞ்சாரம்

8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு இணைந்து சஞ்சரிக்கும் சனியும் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவும், 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனியும் வக்ரம் பெறும் இந்த காலகட்டத்தில், தொழிலில் கூடுதல் கவனம் தேவை. சேமிப்புகள் கொஞ்சம் கரையும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு கள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காது. எதிரிகளின் பலம் கூடும். ஏமாற்றம் அதிகரிக்கும்.

15.11.2020-ல் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். அது குருவிற்கு நீச்ச வீடாகும். இருப்பினும் சுய ஜாதகத்தில் குரு நீச்சம் பெற்றிருப்பவர்களுக்கும், குரு மறைவு ஸ்தானத்தில் இருப்பவர்களும் இது ஒரு பொற்காலமாகும். மகர குருவின் சஞ்சார காலத்தில், குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகிறது. இதன் விளைவாக தாய்வழி ஆதரவும், வாகன யோகமும் உண்டு. பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் சில சிக்கல்கள் தீரும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கலாம்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். பின்னோக்கிச் செல்லும் இந்தக் கிரகங்கள் தான், உங்கள் வாழ்க்கைப் பாதையில் முன்னோக்கிச் செல்ல வழிவகுத்துக் கொடுப்பவை. இந்த கிரகங்கள் 1.9.2020-ல் இடம்பெயர்கின்றன. அச்சமயம் 2-ம் இடத்தில் ராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு வரும் ராகுவால், திரண்ட செல்வம் கிடைக்கும். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய வழிபிறக்கும். குடும்ப பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. மனக்குழப்பங்கள் அகல அருளாளர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். அதைத் தொழிலுக்கு மூலதனமாக மாற்றுவீர்கள். போட்டிகள் இருந்தாலும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரத்தில் உடல்நலனில் கவனம் தேவை. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது, அலைச்சலைக் குறைத்துக்கொள்வது, உடல்நலனைக் காக்க உதவும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சுய ஜாதகத்தில் ராகு- கேதுக்களின் பாதசார பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால், வளர்ச்சிப் பாதையில் ஏற்படும் தளர்ச்சியை அகற்றலாம்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான், 29.4.2020 முதல் 14.9.2020 வரை வக்ரம் அடைகிறார். இந்த வக்ர காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். உங்களின் தொழில் வளர்ச்சியும், லாபமும் அவர் கையில்தான் இருக்கிறது. சனி பகவான் வக்ர காலத்தில் இருக்கும் பொழுது, தொழில் போட்டி அதிகரிக்கும். நீங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்கவர் என்றாலும், உங்களால் துணிந்து எந்த முடிவையும் எடுக்க இயலாது.

13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசிக்குள் செவ்வாய் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் உள்ள சனி பகவான் கும்பத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கிறார். உங்கள் ராசிநாதனாக செவ்வாய் விளங்குவதால், அவரோடு சம்பந்தப்பட்ட சனியின் ஆதிக்க காலமான இந்த காலகட்டத்தில், பிறருக்கு பொறுப்பு ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கடன்சுமை அதிகரிக்கலாம். ஒருகடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பதவி உயர்வும், வெளிநாட்டுப் பயணமும் தாமதப்பட்டுக் கொண்டே வரும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். இக்காலத்தில் அங்காரகனையும், சனி பகவானையும் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்.

26.12.2020 உத்திராடம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகி செல்கிறார். 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவான், முத்தான பலன்களை உங்களுக்கு வாரி வழங்குவார். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியப் புள்ளிகளின் வரிசையில் நீங்களும் இடம்பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். தொழில்புரிவோருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சுயதொழில் செய்ய முன்வருவர். வீடுகட்டும் வாய்ப்பு அல்லது வாங்கும் வாய்ப்பும் கைகூடும். வரும் காலத்தை வசந்த காலமாக மாற்றிக்கொள்ள கிரகநிலைகள் சாதகமாக உலாவரும் நேரம் இது.

செல்வ வளம் தரும் வழிபாடு

சதுர்த்தி விரதமிருந்து விநாயகப்பெருமானை வழிபட்டு வருவதோடு யோகபலம் பெற்ற நாளில் படைவீட்டில் ஒன்றான பழனியில் ராஜ அலங்கார முருகனையும், போக மா முனிவரையும் வழிபட்டு வந்தால் பலன்கள் பலமடங்கு கிடைக்கும். வளர்ச்சியும், வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
குருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்

27.3.2020-ல் குரு வக்ர இயக்கத்தில் மகர ராசிக்குச் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். வலிமையிழந்த குரு நன்மை செய்ய, வியாழன்தோறும் தென்முகக் கடவுளை வழிபடுங்கள்.

அதே நேரத்தில் மகரத்தில் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் குருவும், தனுசு ராசியில் வக்ரமாக இருக்கும் சனியும் தங்களின் வீடுகளை மாற்றிக்கொண்டுள்ளன. இதை ‘பரிவர்த்தனை யோகம்’ என்பர். யோகங்களில் முதல்தரமான யோகம் இது. இந்த காலகட்டத்தில் தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். பங்காளிப் பகை மாறும். வெளிநாட்டு யோகம் கைகூடும். துன்பங்கள் விலகும்.ஆலயத் திருப்பணிகளை முறையாகச் செய்ய முன்வருவீர்கள். வாகனப் பழுதுகளால் கவலைப் பட்ட நீங்கள், இப்பொழுது புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பெண்களுக்கான பலன்கள்

இந்தப் புத்தாண்டில் மங்கல நிகழ்ச்சிகள் பல மனையில் நடைபெறப்போகிறது. தடைகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தாய் வழி ஆதரவு உண்டு. ராகு - கேது பெயர்ச்சிக்குப் பிறகு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒருசிலருக்கு வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். குரு 10-ல் வரும்போது பதவி உயர்வும், உத்தியோகத்தில் முன்னேற்றமும் வந்துசேரும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். ராகு - கேதுக்களின் ஆதிக்கத்தால் நன்மை கிடைக்க, சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வதோடு, செவ்வாய்க்கிழமை விரதமிருந்து, முருகப்பெருமானை வழிபடுங்கள்.

சார்வரி வருட பலன்

சார்வரி வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் இடத்தில் குருவோடு இணைந்து குரு-மங்கள யோகத்தை உருவாக்குகிறார். உங்கள் ராசியில் பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன், உச்சம் பெற்றிருக்கிறார். தன ஸ்தானத்தில் சுக்ரன் சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். பிதுர்ரார்ஜித ஸ்தானமான 9-ம் இடத்தில் சனி, சந்திரன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்திருக்கின்றன. இதனால் கூட்டுக் கிரக யோகமும், சனி - சந்திர யோகமும் உருவாகிறது. சகாய ஸ்தானத்தில் ராகுவும், விரய ஸ்தானத்தில் புதனும் வீற்றிருக்க, புத்தாண்டு தொடங்குகிறது. நான்கு கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக் கின்றன. 6-க்கு அதிபதி புதனும், 12-க்கு அதிபதியான குருவும் நீச்சம் பெற்றிருப்பது யோகம்தான். வருடத் தொடக்கமே வசந்தமாக அமையும்.

ராகு -கேது பெயர்ச்சி

1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு ராகுவும், 8-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.எனவே சேமிப்பு உயரும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். மனக்குழப்பம் அகலும்.கேதுவால் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். சுபவிரயங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படும். மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

குருப்பெயர்ச்சி

15.11.2020 அன்று மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 12-ம் இடத்திற்கு அதிபதியான குரு, அங்கு நீச்சம் பெறுவதால் யோகம் சேரும். விரயாதிபதி நீச்சம் பெறுவதால், சில நன்மைகளை செய்வார். குரு 9-ம் இடத்திற்கும் அதிபதி என்பதால், தந்தை வழியில் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்காது. அதேநேரம் குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சுப காரியங்கள் பல, இல்லத்தில் நடைபெறும். தாயின் உடல்நலம் சீராகும். பகையை வெல்வீர்கள். தொழில் புரிபவர்களுக்கு, பணியாளர் தொல்லை அகலும்.

சனிப்பெயர்ச்சி

26.12.2020 அன்று சனிப்பெயர்ச்சி நிகழ இருக்கிறது. அன்றைய தினம் உத்ராடம் 2-ம் பாதத்தில், உங்கள் ராசிக்குப் பத்தாம் இடமான மகர ராசிக்கு வாக்கிய கணித பஞ்சாங்கம் ரீதியாக சனிபகவான் பெயர்ச்சியாகிறார். தொழிலில் தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அளவோடு நடந்த தொழில் இனி ஆதாயம் தரும் விதத்தில் நடக்கலாம். அரசு வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை தென்படும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை.

குரு வக்ரமும், அதிசாரமும்

13.5.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் அதிசாரமாகி வக்ரம் பெற்று சஞ் சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியிலேயே அவரோடு இணைந்து சஞ்சாரம் செய்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல்கிறார். இவற்றின் விளைவாக வரும் மாற்றங்கள், நன்மை வழங்கும். சிலநேரம் மனதை குழப்பமடையவும் செய்யும். வழிபாடுகள்அவசியமான தருணம் இது.

வழிபாடு

சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபட்டு வருவதோடு, யோகபலம் பெற்ற நாளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2022 ஆண்டு வரை

(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

வர இருக்கும் சனிப்பெயர்ச்சி மூலம் மேஷ ராசிக்கு சனிபகவான் தற்போதுள்ள நல்ல பலன்களைத் தராத இடமான ஒன்பதாமிடத்தில் இருந்து மாறி தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாமிடத்திற்குச் செல்கிறார்.  ஒரு பாபக்கிரகம் திரிகோணத்தில் இருப்பது நன்மைகளைத் தராது என்ற அமைப்பினால், கடந்த காலங்களில் சனியால் மேஷ ராசிக்கு பெரிய நன்மைகள் எதுவும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் கேந்திர வீடான பத்தாம் வீட்டில் சனி இருப்பது முன்பு இருந்த நிலையை விட நல்ல அமைப்பு என்பதால் இந்த சனிப் பெயர்ச்சி மேஷத்திற்கு நல்ல பலன்களை மட்டுமே தரும். ஆகவே இப்போது நடக்கும் பெயர்ச்சி உங்களுக்கு சந்தோஷமான ஒன்றுதான்.

கடந்த முறை பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்த சனி உங்களுக்கு தேவையான எவ்வித பாக்கியங்களையும் கிடைக்காமல் தடுத்தார். இன்னும் சொல்லப்போனால் மேஷத்தினர் அனைவரும் முயற்சிகளுக்கேற்ற பலன் கிடைக்காமல் தவித்தீர்கள். தொழில், வேலை போன்ற விஷயங்களிலும் நல்லவைகள் நடக்கவில்லை.
அனால் இம்முறை உங்களின் தொழில் ஸ்தானாதிபதியான சனி பகவான் ஆட்சிநிலை பெற்று தனது சொந்த வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் சனியால் எல்லோருக்குமே நன்மைகள் இருக்கும். அதன் அடிப்படையில் மேஷராசிக்கு பத்தாமிடச் சனி கெடுபலன்களை நிச்சயமாகத் தராது.

இன்னொரு நல்ல விஷயமாக இந்த சனிப்பெயர்ச்சியின் முதல் ஒரு வருடகாலம் மற்ற வருடக் கிரகங்களான குரு, ராகு இவற்றின் நிலைகள் மேஷத்திற்கு மிகவும் அதிர்ஷ்டம் தரும் நிலையில் இருக்கின்றன. அதிலும் ஒன்பதுக்குடைய குருவும், பத்துக்குடைய சனியும் ஆட்சி நிலையில் இருப்பது யோகம்.
குறிப்பாக யோகாதிபதி குரு ஒன்பதில் வலுவாக அமர்ந்து ராசியைப் பார்ப்பதும், முயற்சியின் மூல நல்ல அதிர்ஷ்டத்தை தருகின்ற மூன்றாமிடத்தில் ராகு அமர்ந்து நல்ல பலன்களைத் தந்து கொண்டிருப்பதும் வெகுயோக அமைப்பு என்பதால் அடுத்து வரும் சில மாதங்கள் மேஷத்திற்கு மிகவும் யோகமாக அமையும்.
இன்னும் சொல்லப்போனால் பிறந்த ஜாதக அமைப்பின்படி நல்ல பலன்களைத் தரக்கூடிய தசா,புக்திகள் நடப்பவர்களுக்கு மிகவும் நன்மைகள் உண்டு.

கோட்சாரமும்,. பிறந்த நேர பலன்களும் சாதகமாக அமையும் நேரத்தில் ஒரு மனிதன் புகழின் உச்சத்திற்குச் செல்வான். அவன் தொட்டது துலங்கும். முயற்சிகள் பலிக்கும். அந்த நேரம் இப்போது மேஷத்திற்கு வந்திருக்கிறது. எனவே உழைப்பும் முயற்சியும் இருந்தால் மேஷத்தினர் சிகரம் தொடுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி மூலம் மேஷராசிக்கு நல்ல வருமானங்களும், மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், வீடு வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் இனிமேல் நடக்கும்.

சிலருக்கு இதுவரை இருந்து வந்த வாழ்க்கைத்துணையிடம் கருத்து வேறுபாடு, கணவன் மனைவி பிரிவினை, பங்குதாரர்களுடன் தகராறு, சொத்துப்பிரச்னை, ஆரோக்கியக்குறைவு போன்ற எதிர்மறையான பலன்கள் அனைத்தும் இனிமேல் மாறி சாதகமான விஷயங்கள் இனி நடக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.

சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். அதுபோல ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிக் கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். அரசுத்துறையினருக்கு பதவி உயர்வு உண்டு. சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.

சனிபகவான் பத்தில் இருக்கும்போது கடன் வாங்க வைத்து செலவு செய்ய வைப்பார். வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. தொழில்ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக் காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

ஒரு சிறப்பு பலனாக, இந்த சனிப்பெயர்ச்சியின் முதல் ஒருவருடம் மட்டும் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ளலாம். பங்குச் சந்தையில் லாபம் உண்டு. உங்களில் சிலருக்கு எதிர்பாராத யோகம் உண்டு. சிலருக்கு புதையல் கூட கிடைக்கும். லாட்டரி கை கொடுக்கும். ஆனால் பிற்பகுதி ஒன்றரை வருடம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. அந்த நேரத்தில் ஏமாற்றம் அடைவீர்கள்.

சிலருக்கு நண்பர்களுடன் உரசல் இருக்கும் தேவையில்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக் கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.

வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இந்தப் பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும். வாழ்க்கைத் துணைநலம் சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள்.

சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். குரு ஒன்பதில் அமர்ந்திருப்பதால் காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை ஆரம்பமாவதற்கான ஆரம்பங்கள் இருக்கும்.

உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள். வேறு இன, மொழி, மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

புனித யாத்திரைகள் செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறுவீர்கள். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். றிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
குறிப்பாக சொல்வதானால் இந்தச் சனிப்பெயர்ச்சி மேஷத்தினரின் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

ஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் ஒரு கால் இழந்த மாற்றுத் திறனாளிக்கு ஊன்றுகோல் தானம் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் மூன்று சக்கர சைக்கிள் தானம் தரலாம். சனி சம்பந்தமான தானங்களை வீட்டில் தரக் கூடாது. பொதுஇடத்தில் கொடுங்கள்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)

குருப்பெயர்ச்சி பலன்கள்

மேஷ ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் நன்மைகளைத் தராத அமைப்பில் இருந்த குரு, தற்போது பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடத்திற்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை. இந்த பெயர்ச்சியினால் மேஷத்திற்கு மிகுந்த நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும்.
குருவின் பார்வை ராசிக்கு கிடைக்கும் காலம் ஒரு மனிதனின் அதிர்ஷ்டம் செயல்படும் காலம் என்பதால் இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நல்ல விதமாக நிறைவேறும் காலம் இது என்றுகூடச் சொல்லலாம்.

இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி மூலம் பாபக் கிரகமான சனியும், தற்போது உங்கள் ராசிக்கு இருக்கும் ஒன்பதாமிடத்திலிருந்து ஓரளவு நன்மை தரும் பத்தாமிடத்திற்கு மாறுவதும் மேஷத்திற்கு முன்னேற்றம் தரும் கிரக அமைப்பு என்பதால் பிறக்க இருக்கும் 2020ம் ஆண்டு உங்களுக்கு நன்மையைத் தரும் வருடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் மேஷ ராசியைச் சேர்ந்த நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும். முக்கியமான ஒரு பலனாக இதுவரை இருந்த மந்த நிலைமைகள் மாறி சுறுசுறுப்பான வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். வாழ்க்கை இனி அதிர்ஷ்டகரமாக அமையும். பெரும்பாலான கிரகங்கள் இப்போது நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது. உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

குருபார்வை ராசிக்கு கிடைப்பதால் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து, மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் நான் சொல்வதை விட கூடுதல் பலன்கள் உண்டு.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது. நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

இளைய பருவத்தினருக்கு ஏமாற்றமும், மன அழுத்தமும் இருக்காது. இந்தக் குருப் பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தை தரப் போவதோடு இதுவரை இருந்து வந்த குழப்பங்களையும், காரியத் தடைகளையும், துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது. இனிமேல் மேஷத்தினருக்கு ஐ.ஏ.எஸ், மற்றும் குரூப் ஒன் மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட போன்ற தேர்வுகளில் வெற்றி உண்டு. ஏற்கனவே தேர்வுகள் எழுதி முடிவுகளுக்கு காத்து இருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் தடையின்றி நடக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவி தேடி வரும்.

அலுவலகத்தில் புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு கிடைக்கும். உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார். பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப் போகும் காலம் இது. உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

சுயதொழில் செய்பவர்களுக்கு தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் வெற்றி காண்பார்கள். எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்ல நேரம்.
வேலையில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் மாறும். பழைய வேலையை விட நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும்.

முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனி முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். திருமணம் தள்ளிப்போய் இருந்தவர்களுக்கு வரன்கள் நிச்சயிக்கப் பட்டு சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும்.

குழந்தை பாக்கியம் தாமதமானவர்களின் வீட்டில் சிறு குழந்தைகளின் அழுகைக் குரலும், மழலைச் சத்தமும் கேட்டு தாத்தா, பாட்டிகளின் மனம் குளிரப் போகிறது. கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு நல்லபடியாக ஒரு முடிவு வரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் குரு தன் யோகமான பார்வையால் உங்களின் ராசி மற்றும் மூன்று, ஐந்தாமிடங்களைப் பார்த்து புனிதப்படுத்துவதால் அந்த பாவகங்களின் தன்மைகள் வலுப் பெறுகின்றன. குருவின் மூன்றாமிடத்துப் பார்வையால் உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மேலோங்கி அனைத்துப் பிரச்னைகளையும் நீங்கள் ஒருவராகவே சமாளித்து தீர்க்கும் அளவிற்கு ஆற்றல் பெறுவீர்கள். மூன்றாமிடம் சகாயஸ்தானம் என்பதால் எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும்.

குருவின் ஐந்தாமிடப் பார்வையால் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குல தெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனிதயாத்திரை போக முடியும். ஞானிகள் அருள் புரியும் இடங்களுக்குச் சென்று அருள் பெற முடியும். ஆலயப் பணிகளில் ஈடுபாடு வரும். திருக் கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.

இழுபறியில் இருந்து வந்த பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகள் சாதகமாகும். வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.
கோர்ட், கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்பு முனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். வெளிநாட்டுப் பயணத்திற்கு தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தையின் ஆதரவு பூரணமாய்க் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.

மேஷ ராசிப் பெண்களுக்கு என்று தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. கணவர் மற்றும் பிள்ளைகளின் நலன் மட்டும்தான் முக்கியம் என்று நினைக்கும் ஆளாக இருப்பீர்கள் நீங்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது சுயநலம் போலத் தெரியும். பொறுப்புள்ள குடும்பத்தலைவி இருக்கும் குடும்பத்தில் சிக்கல்களுக்கு இடமில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக் குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி விடியலைத் தந்து வழியையும் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

பரிகாரங்கள்:

குருபகவானால் கிடைக்க இருக்கும் நன்மைகளை அதிகப் படுத்திக் கொள்ளவும், அவரது திருவருளை முழுமையாகப் பெறவும் உங்களின் ஜன்ம நட்சத்திர தினம் அல்லது ஒரு வியாழக்கிழமையன்று குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் முன் கூட்டியே கேட்டு அதன்படி உணவிட்டு அதன் ஆசிகளைப் பெறுங்கள்.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

1.9.2020 முதல் 20.3.2022 வரை

மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மூலம் சாயாகிரகங்களான ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.

ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த 3, 9-ம் இடங்கள் அதிர்ஷ்டத்தைச் செய்கின்ற நல்ல இடங்கள் என்ற நிலையில் தற்போது மாற இருக்கும் 2, 8-ம் இடங்கள் சாதகமற்ற பலனை தரும் இடங்களாக ஜோதிட மூலநூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.

அதே நேரத்தில் தற்போது ராகு மாற இருக்கும் ரிஷப வீடு அவருக்கு மிகவும் பிடித்த ஒரு சுபரின் வீடு என்பதால் ரிஷபத்தில் அமரும் ராகு நன்மைகளை மட்டுமே செய்வார் எனும் விதிப்படி உங்களுக்கு அந்த பாவகத்தின் தன்மைகளான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் நல்லவைகளை செய்வார்.

இன்னொரு கிரகமான கேது 8-மிடத்திற்கு மாறினாலும் அது உங்கள் ராசிநாதனின் இன்னொரு வீடு என்பதால், இருக்கும் வீட்டின் அதிபதியின் பலன்களை சர்ப்பக் கிரகங்கள் செய்யும் என்ற விதிப்படி உங்கள் ராசிநாதனான செவ்வாயின் பலன்களை மட்டுமே கேது எடுத்து செய்வார்.

எனவே 8-ம் இடத்தில் அமரும் கேதுவால் கெடுதல்கள் எதுவும் நடக்குமோ என்றும் பயப்படத் தேவையில்லை. அதிலும் எட்டாமிடம் தூர இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்தப் பெயர்ச்சியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாடுகள், தூர இடங்கள் மூலமான வரவுகள் இருக்கும்.

அதே நேரத்தில் 3, 6, 10, 11 ஆகிய உபசய ஸ்தானங்களை தவிர்த்து வேறு இடங்களில் அமரும் ராகு-கேதுக்கள் அந்த பாவகத்தை கெடுத்துத்தான் நன்மைகளை செய்வார்கள் என்ற விதிப்படி 2-ம் வீட்டில் அமரும் ராகுவால் இந்தப் பெயர்ச்சியின் முதல் ஆறு மாதங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கும்.

எனவே எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பாக பண முதலீடு விஷயங்களில் அவசரப்பட்டு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இது போன்ற காலகட்டங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பியோ, அறிமுகம் இல்லாத நபர்களிடமோ, அனுபவம் இல்லாத கம்பெனிகளிடமோ பணத்தை போட வேண்டாம்.

அதிக வட்டி தருவதாக சொல்லும் கம்பெனிகளில் பணம் போடுவது, அதிக வட்டி தருவதாக சொல்லும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவது போன்ற செயல்களை செய்ய சொல்லி ராகு தூண்டுவார் என்பதால் பேராசை பெரும் நஷ்டம் என்பதை புரிந்து கொண்டு பண விஷயத்தில் மன அடக்கத்துடன் இருந்து கொண்டால் இந்தப் பெயர்ச்சி எந்தவித பாதிப்புகளையும் உங்களுக்கு தராது.

அதேநேரத்தில் 8-ம் இடத்தில் அமரப் போகும் விருச்சிக கேது எதிர்பாராத அதிர்ஷ்டம், தனலாபம், பெரியதொகை ஒன்று கிடைப்பது போன்ற விஷயங்களை செய்வார் என்பதால் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஏதேனும் ஒரு விஷயம் மூலமாக உங்களுக்கு நல்ல தனலாபம் கிடைக்கும்.

ரியல் எஸ்டேட் போன்றவைகளில் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மீடியேட்டர் போன்றவர்களுக்கும் கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.

எட்டாமிடம் விருச்சிகமாகி அங்கே கேது அமர்வதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், ஒரு பெரிய தொகை திடீரென கிடைத்தல், உறவினர் சொத்து கிடைத்தல், வெளிநாட்டு நன்மை போன்ற பலன்கள் நடந்து ராகுவினால் ஏற்படும் சாதகமற்ற பலன்கள் சரிக்கட்டப்படும் என்பது உறுதி.

இந்தப் பெயர்ச்சியினால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் மூலம் உங்களுக்கு வேலைப்பளு அதிகம் வரும். வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பும், லாபமும் திருடு போவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அதிகமான வட்டிக்கு கடன் வாங்காதீர்கள்.

அஷ்டம கேதுவால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற வேலை அமையவும் வாய்ப்பு உள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வெளிநாடு செல்வீர்கள்.

பரிகாரங்கள்

ஒரு கருப்புநிற விதவைப் பெண்மணி அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு கருப்புநிற ஆடை, நான்கு கிலோ கருப்பு உளுந்து, ஒரு தோல் பை அல்லது முற்றிலும் தோலினால் ஆன செருப்பு ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தானம் கொடுங்கள்.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store