
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
18.4.22 முதல் 24.4.22 வரை
செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும் வாரம். தன லாப அதிபதி குரு தன ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் தன வரவு சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் மன நிறைவு உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு தொழில் அல்லது வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்ப நிலை உயரும். சிலருக்கு குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறவுகள் உங்கள் மேல் அன்பை பொழிவார்கள். குடும்ப ஒற்றுமையை சிதைத்த எதிரிகள்இருந்த இடம் தெரியாதுபோவார்கள்.
பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.பெற்றவர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் திருமணம் நடக்கும். பெண் களுக்கு கணவன் மற்றும் புகுந்த வீட்டினரின் ஆதரவு மகழ்ச்சி தரும். உங்கள் முயற்சி, எண் ணங்கள்நிறைவேறும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். சனிக்கிழமை சிவனுக்கு கோதுமை பாயாசம் படைத்து வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2022 முதல் 14-05-2022 வரை
வழிபாட்டின் மூலமே வளர்ச்சியை காண முடியும் என்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் இருக்கிறார். ஏழரைச் சனி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே மனக்குழப்பம் அதிகரிக்கும். திடீர், திடீரென எண்ணங்கள் மாறும்.
மீன - சுக்ரன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு, மாதப் பிறப்புக்கு முன்பாகவே பெயர்ச்சியாகும் குருவோடு இணைகிறார். அசுர குரு உச்சம் பெற்று தேவ குருவின் சொந்த வீட்டில் அவரோடு இணைந்து சஞ்சரிக்கும் பொழுது, சில நல்ல மாற்றங்கள் நடைபெறலாம். அதே நேரம் பகைக் கிரகங்களின் சேர்க்கையால், பணவரவு தடைபடும். குடும்ப பிரச்சினை நீடிக்கும். தொழிலில் கவனம் செலுத்த இயலாது. வரன்கள் கைநழுவிச் செல்லலாம். பணிபுரியும் இடத்தில் பதற்றம் அதிகரிக்கும்.
ரிஷப - புதன் சஞ்சாரம்
சித்திரை 15-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள். வாகன பயணத்தில் கவனம் தேவை. நன்மை என்று நீங்கள் செய்த காரியம், மற்றவர்களுக்குத் தீமையாகத் தெரியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். திடீர் இடமாற்றம், மன உளைச்சலைக் கொடுக்கும். வந்த பணம் அடுத்த நிமிடமே செலவாகிவிடும்.
புதன் வக்ர இயக்கம்
சித்திரை 17-ந் தேதி, ரிஷபத்தில் புதன் வக்ரம் பெறுகிறார். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் புதன் அதிபதி என்பதால், இந்த வக்ர காலத்தில் பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகும். வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும். உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். ‘ஊர் மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை செய்யலாமா?’ என்று நினைப்பீர்கள்.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 21-ந் தேதி, மேஷ ராசிக்கு வக்ர இயக்கத்தில் புதன் பின்னோக்கி வருகிறார். அங்கு உச்சம் பெற்ற சூரிய னோடு இணைந்து ‘புத ஆதித்ய யோக’த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிப்படி பஞ்சமாதிபதியும், சப்தமாதிபதியும் சேருவது யோகம்தான். அவரோடு ராகு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. சகோதர வழியில் மனக்கசப்பு உருவாகும். அதேநேரம் சுக்ரன் உச்சம் பெறுவதால் பணப்புழக்கம் அதிகமா கும். தனாதிபதி குரு தன ஸ்தானத்திலும், விரயாதிபதி சனி விரய ஸ்தானத்திலும் இருப்பதால் பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடலாம்.
இம்மாதம் வராகி வழிபாடு வளர்ச்சியைத் தரும்.
பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 17, 18, 21, 22, 27, 28, 29, மே: 2, 3, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ஏழரைச் சனியில் விரயச்சனியின் ஆதிக்கம் இருப்பதால், வரவைக் காட்டிலும் செலவு கூடும். வருமானப் பற்றாக்குறை வரலாம். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இடமாற்றம், வீடுமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். உடன்பிறப்புகளின் உறவில் திருப்தி ஏற்படாது. வேலைப்பளு அதிகரிக்கும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யுங்கள்.
ஆண்டு பலன் - 2022
சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தும் கும்ப ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டில் வருட கிரகங்களின் சஞ்சாரம் ஒரளவு சாதகமாகவே உள்ளது. உழைத்து, களைத்த உங்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் கைகூடும் நேரம். மிகப் பெரிய மாற்றங்கள் திடீர் திருப்பங் கள் என நீங்கள் செய்யும் செயல் கள் எல்லாம் வெற்றியைத் தரப்போகிறது. இழந்ததை மீண்டும் பெறும் முயற்சிகள் பலிதமாகும். விரயச் சனியின் காலம் என்பதால் பண வரவு தாராளமாக இருந்தாலும் விரயமும் இருக்கத்தான் செய்யும். யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காமல் முனைப்போடு செயல்பட்டால் இந்த புத்தாண்டில் சாதனைகள் படைக்க முடியும்.
குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் தனலாபாதி குரு ராசியில் சஞ்சாரம் செய்வதால். தொழிலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் நிம்மதி பெருமூச்சு விடலாம். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உறவினர்களோடு நிலவிய கருத்து வேறுபாடு மாறும்.
வாழ்க்கையின் துணையின் மூலம் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகளின் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். பிள்ளைகள் மூலம் உண்டாகும் வருமானம் நிம்மதியை அதிகரிக்கும். மாப்பிள்ளை மைத்துனர் பகைமை மறையும். பாகப்பிரிவினைக்கு தடையாக இருந்த உடன் பிறப்பு தற்போது இணங்குவார். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும் அல்லது கார்ப்ரேட் கம்பெனியில் வேலை கிடைக்கும்.
மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டாகும். உங்கள் இல்ல சுப செலவை மூத்த சகோதரர் ஏற்று இன்ப அதிர்ச்சி தரலாம். அடகு நகைகளை மீட்கும் சந்தர்ப்பம் உருவாகும். மொத்தத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் பற்றாக்குறை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
ஏப்ரல் 13,2022ல் குரு தன ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறும் போது கொடுக்கல் வாங்கல் சீராகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் கூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வராக் கடன்கள் வசூவாகும். பிள்ளைகளின் மேற்படிப்பு முயற்சி வெற்றி தரும். நீங்கள் வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். பங்குச் சந்தை வர்த்தகத்தில் நல்ல லாபம் உண்டாகும். தொழில் தொடர்பான வழக்குகள் சாதகமாகும். தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட இடர்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்சியான தகவல் கிடைக்கும். தந்தை வழி உறவில் நெருக்கம் ஏற்படும். மொத்தத்தில் ஏழரைச் சனியையும் மீறிய சுபபலன்கள் உண்டாகும்.
சனியின் சஞ்சார பலன்கள்: இந்த சனிப்பெயர்ச்சியில் பெரும்பான்மையாக அனுபவிக்கப் போகும் பிரச்சனை விரயம். கடுமையான விரயமாக இருக்கும். வருமானத்திற்கு மீறிய செலவு ஏற்படும். அத்தியாவசிய தேவைக்கு கடன் பெற்றே ஆக வேண்டிய சூழல் உருவாகலாம். நாளைய வருமானத்திற்குரிய செலவு இன்றே முடிவு செய்யப்படும். எனவே விரையத்தை சுபமாக மாற்ற ஒருவரின் அவசிய தேவையான வீடு, வாகன யோகத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
ஏற்கனவே சொந்த வீட்டில் இருப்பவர்கள் வீட்டிற்கு பராமரிப்பு வேலை செய்து புதிதாக மாற்றலாம். சற்று வசதி அதிகமாக இருப்பவர்கள் குடியிருப்பு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம். சிலர் பிழைப்பிற்காக வெளியூர் வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்ல நேரும். பலருக்கு இந்த வாய்ப்பு திருப்பு முனையாகவும் இருக்கும். மனதில் தேவையற்ற எண்ணங்களை அசை போட்டு தூக்கமே இல்லாமல் இருக்க செய்யும்.சிலர் துக்கம் தாழாமல் திருவண்ணாமலைக்கு சென்று முக்திக்கு முயல்வார்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வீர்கள். பக்தி பெருகும். ஆன்மீக நாட்டம் மிகும். அறப்பணியில் ஈடுபாடு அதிகரிக்கும்.
26. 2. 2022 முதல் 6. 4. 2022 வரை ராசிக்கு 12ல் ராசி அதிபதி சனியுடன் 3,10ம் அதிபதி செவ்வாய் இணைகிறது. 3ம் இடம் இளைய சகோதரம், வீரம், வேலையாள் செய்தி தொடர்பு, ஆவணங்கள் போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் இளைய சகோதரரை குறிக்கும் என்பதால் இளைய சகோதரரால் தொழில் விரயம் அல்லது தொழிலில் முடக்கம், தொழிலில் வில்லங்கம் ஏற்படலாம்.
ஏழரை சனியின் தாகத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சனி உங்களின் ராசி அதிபதி என்பதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டு. இது விரையச் சனியின் காலம் என்பதால் முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் கட்டாய சூழ்நிலையால் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து மனம் வாடும்.
ராகு/கேது பெயர்ச்சி: நான்கில் ராகு பத்தில் கேது இருப்பதால் தாயின் ஆரோக்கியம் சீராகும். அழகு, ஆடம்பர வீட்டு உபயோக பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். சில தாய், தந்தையர் கருத்து வேறுபாட்டால் பிரியலாம்.பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும்.புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
நண்பர்களால் ஆதாயம் உண்டு.நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக தொடர்பில்லாத பள்ளி, கல்லுரி மற்றும் அக்கம் பக்க பால்ய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியைத் தரும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலிருந்த குறைபாடுகள் அகலும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சம்பந்திகள் சண்டை முடிவுக்கு வரும்.
ஏப்ரல் 12, 2022ல் ராகு 3ம் இடத்திற்கும் கேது 9ம் இடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்.தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். யூ டியுப் விளம்பர மீடியாக்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது. கண், காது, மூக்கு தொடர்பான பாதிப்புகள் சிகிச்சையில் குணமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.
சகோதரருக்கும் உங்க ளுக்கும் பாகப்பிரிவினை ஏற்படும். பலருக்கு இளைய சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். சகோதரரின் இழிவான நட வடிக்கைகளால் இது வரை நீங்கள் கட்டிக் காத்து வந்த கவுரவம் மட்டுப்படும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிட்டும். கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். மகான் களின் நல் ஆசிகள் கிடைக்கும்.
சிலர் கோவில், தர்ம ஸ்தாபனங்களில் சேவை புரியும் வாய்ப்பு கிட்டும். திருமணம்: கும்ப ராசியினருக்கு கோட்சார குரு, சனி ராகு/கேது வால் திருமணத் தடையில்லை. 2023ல் சனி கும்பத்திற்கு பெயர்ச்சியாகும் போது ஜென்மச் சனி மற்றும் ராகு கேதுவால் திருமணத் தடை உருவாகலாம். திருமண வயதில் உள்ள அனைத்து கும்பராசியினருக்கும் 2022ல் திருமணம் எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடியும். வரன் பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு இன்றி திருமண முயற்சி செய்வது நல்லது. நேரம், காலம் சாதகமாக இருக்கும் பொழுது சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும்.
பெண்கள்: நீங்கள் பணி புரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் விதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். வங்கியில் பணி புரிபவர்கள் எச்சரிக்கையுடன் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் இல்லையேல் வீண் பழி ஏற்படும். இந்த ராசிப் பெண்களுக்கு கால்வலி, வயிறு உபாதை மற்றம் முதுகு வலியால் அவஸ்தை ஏற்படும்.
விவசாயிகள்: பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபம் கிடைக்கும். நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிப்பீர்கள். வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காமல் பணிகள் தேங்கும் வாய்ப்பு உள்ளது. பயிர்களுக்கு புழு, பூச்சி தொல்லை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். அரசு வழி ஆதாயம் உள்ளதால் எதையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வுடன் கேட்ட சலுகையும் கிடைக்கும். அரசு உழியர்களுக்கு ஊதிய உயர்வு, புதிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்திற்காக குடும்பத்தை பிரித்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவார்கள்.அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டி இடைக்கால பதவி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது. பதவியை தக்க வைத்துக் கொள்ள சிவ வழிபாடு மிக அவசியம்.
முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: 12 ம் இடம் விரய ஸ்தானம் என்பதால் மறைமுக தொழில் எதிர்ப்புகள் உண்டாகும்.வெகு சிலருக்கு வெளிநாட்டு தொழில் ஒப்பந்தங்கள் வரலாம். வாய்ப்புகள் கிடைத்தாலும் நிறைய போட்டிகளை சந்திக்க நேரும். சிலருக்கு முதலீடே காணாமல் போகலாம். அதிக மூதலீட்டில் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தம் செய்பவர்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பயன் படுத்தினால் முதலீட்டை காப் பாற்றலாம்.
அரசியல்வாதிகள்: அரசியல் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பகை உணர்வு மேம் படும். வாக்கு ஸ்தானத்திற்கு சனி பார்வை இருப்பதால் மிகவும் கவனத்துடன் பேச வேண்டும். எதிர்ப்புகளை சமாளித்து ஆர்ப் பாட்டம் நடத்தி மனம் நொந்த சிலர் ஆரோக்கியத்தை காரணம் காட்டி அரசியலை விட்டு ஒதுங்குவார்கள்.
மாணவர்கள்: ஒரு சில மாண வர்களுக்கு பள்ளியை மாற்றம் செய்ய நேரலாம். பள்ளி, மற்றும் கல்லுரியில் படிக்கும் மாணவ மாணவி கள் படிக்கும் வேலையை மட்டும் பார்தால் எதிர்காலம் சிறக்கும். சிலர் ஹாஸ்டலில் தங்கி படிப்பார்கள். உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பவர்கள் மேற்படிப்பை தொடரும் வாய்ப்பு உண்டாகும். சிலர் வெளியூர், வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்பை தொடரலாம்.
அவிட்டம் 3,4: தொழில் விரிவாக்கம், வீடு கட்டும் பணி, குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற் படும். மீட்டர் வட்டி, கந்து வட்டி வாங்காமல் அரசுடைமை வங்கிகளின் உதவியை நாட வேண்டும். சிவன் கோவில் மூல ஸ்தானத்தில் எரியும் விளக்கிற்கு நல்லெண்ணெய் வாங்கித் தரவும்.
சதயம்: பொருளாதர வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இருக்கும். வாக்கு ஸ்தானத்திற்கு சனி பார்வை இருப்பதால் வாக்கில் நிதானம் தேவை. நீங்கள் எதர்த்தமாக பேசும் வார்த்தைகள் கூட சொல் அம்பாக மாறும். பொறுமையாக நிதானமாக இருக்க வேண்டிய காலம் . ஞாயிற்று கிழமைகளில் நடராஜரை வழிபடவும்.
பூரட்டாதி 1,2,3: குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடு வீர்கள். தடைபட்ட முன்னோர்கள் செய்து வந்த பூஜை, புண்ணிய காரியங்களை தொடர்வீர்கள். தியானத்தில் ஈடுபட்டு மனதை கட்டுப்படுத்த முயல்வீர்கள். ஏழை குழந்தைகளின் கல்விச் செலவிற்கு உதவவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சுபகிருது வருட பலன்
உறவுகளுக்காகவே வாழும் கும்ப ராசியினர் இந்த தமிழ் புத்தாண்டில் அடுக்கடுக்கான முன்னேற்றங்களைப் பெற நல் வாழ்த்துக்கள்.
உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் உள்ளார்கள். குருபகவான் தன ஸ்தானத்திலும், சனி பகவான் 12 மற்றும் ராசியில் சஞ்சரிக்கிறார். தன குருவால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. குடும்ப தேவைகளுக்கு மேல் உபரி வருமானம் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறமையால் உறவுகளை பாசப் பிணைப்பில் கட்டுவீர்கள்.சொல் வலிமை, வாக்குபலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனைக்குஉற்றார் உறவினர்கள் செவி சாய்ப்பார்கள்.
வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சாரும். அதை வாங்கித் தந்த பெருமை குருவைச் சாரும். எந்த செயலிலும்விரைந்து செயல்பட்டு தெளிவாக முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம். தைரியம், தெம்பு , ஞாபக சக்திஅதிகரிக்கும். இது வரை அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். அடிக்கடி அலைச்சல் மிகுந்த பிரயாணங்கள் செய்ய நேரும். முறையற்றஆவணங்களால் வம்பு , வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் சொத்தை சகோதர, சகோதரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆடை ,ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.சிலர் நடக்காததை நடப்பது போல் கற்பனை செய்வார்கள். சிலருக்கு செவித்திறன் குறைபாடு வரலாம். கும்பராசியினருக்கு குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளதால் ஏழரைச் சனி மற்றும் ராகு/கேதுவின் தாக்கம் உங்களை பாதிக்காது.
குடும்பம்:குடும்ப ஸ்தானாதிபதி குரு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால்சிலர் தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்து விடுபடலாம்.குடும்ப தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். சம்பந்திகள் சண்டை முடிவுக்கு வரும். விருந்து உபசாரம் மற்றும் சுப நிகழ்வுகளால் வீடு கலகலப்பாக மாறும். தவறான புரிதலால் விலகிச் சென்ற உறவுகள் உண்மை நிலை புரிந்து மீண்டும் உறவாடுவார்கள்.மகன், மகளின் திருமணம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
ஆரோக்கியம்: ஏழரைச் சனியின் காலம் என்பதால் கை, கால், மூட்டு வலி இருக்கும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு வைத்தியம் நல்ல பலன் தரும். குருவின் பார்வை 6, 8ம் இடத்தில் பதிவதால் மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும்குடிபுகும். ஆரோக்கியம் சிறப்படையும். ஆயுள் பலம் உண்டு. மருத்துவச் செலவு குறையும்.
திருமணம்:2022ல் திருமணம் எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடியும். வரன் பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு இன்றி திருமண முயற்சி செய்வது நல்லது. நேரம், காலம் சாதகமாக இருக்கும் பொழுது சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும். ஆனால் 2023ல் சனி கும்பத்திற்கு பெயர்ச்சியாகும் போது ஜென்மச் சனியால் திருமணத் தடை உருவாகலாம். அதிக கவனத்துடன் வரனைதேர்வு செய்ய வேண்டும். தவறானசுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம்.
பெண்கள்:திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பீர்கள்.மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . வீடு ,வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.தாய் வழி உறவினர்களின்அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்தசகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வந்து சேரும்.
மாணவர்கள்:பள்ளி, கல்லுரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ,மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். 9ம் இடத்தில் நிற்கும் கேது உங்களுக்குபுத்தி கூர்மை , தெய்வ அனுகிரகம், ஞானம்போன்றவற்றை வாரி வழங்க போகிறார். ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அரசுத் துறை சார்ந்த கல்வி வாய்ப்பும் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும்.அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையேநல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகள்இடமாற்றம் செய்யப்படுவீர்கள்.
முதலீட்டாளர்கள்:ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு இது பொற்காலம்.நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள்.
அரசியல்வாதிகள்:பல அரசியல் பிரமுகர்களுக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவங்கள் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். முக்கிய கட்சியில்இணையும் வாய்ப்பு கிட்டலாம்.பெரிய பதவிகள்கிடைக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.
கலைஞர்கள்:தடைகள் விலகும். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். உங்கள் கனவுகளை நிறைவேற்றும் புதுப்பட வாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் வந்து குவியும்.
விவசாயிகள்:விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும்.விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும்.விவசாயிகள் புதிய தொழில் முறையில் போதிய அனுபவம் இல்லாத தொழில் முறையைபற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்தவும்.
ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 3ல் ராகுவும் 9ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள்.சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரலாம். ஞாபக சக்தி குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும். சிலர் சட்டச் சிக்கல் நிறைந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சனை ஏற்படலாம். உயர் கல்வி முயற்சி சிறு தடைக்குப் பின் சீராகும்.
குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்:வியாழக்கிழமை சித்தர்கள் வழிபாடு செய்து வர முத்தாய்பான மாற்றங்கள் தேடி வரும்.
ஐஸ்வரியம் கிடைக்கும்
தன குருவால் சிலரின் பேச்சுத் திறமை வருமானத்தை அதிகரிக்கும். பற்றாக்குறை வருமானம் பிள்ளைகளின் பங்களிப்பால் உபரி வருமானமாகும். வீட்டில் மகாலஷ்மி வாசம் செய்வாள். குடும்பத்திற்கு நிலையான நிரந்தமான வருமானம் கிடைக்கும். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும்.தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். அடமானத்தில் இருந்தநகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். கடன் தொல்லை குறையும். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஏழரைச் சனிதான் தொடங்கியது! இறைவழிபாட்டால் மகிழ்ச்சி வரும்!
கும்ப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 12-ம் இடத்திற்கு வருகின்றார். இப்பொழுது ஏழரைச்சனி உங்களுக்குத் தொடங்குகின்றது. ஏழரைச்சனி என்றவுடன் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே யோகத்தையும் கொடுப்பார், விரயத்தையும் கொடுப்பார். விரயத்தைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோகம்’ உருவாகின்றது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை குரு, தன-லாபாதிபதி என்பதால் எந்தச் செயலைச் செய்தாலும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு செய்ய வேண்டுமென்ற நிலை ஏற்படாது.
ஏழரைச்சனி ஆரம்பம்
மிகப்பெரிய கிரகமாகச் சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கு இப்பொழுது ஏழரைச்சனியாக வருகிறார். விரயச்சனி இப்பொழுது வந்திருக்கின்றது. இதற்குபிறகு ஜென்மச்சனி, அதன்பிறகு குடும்பச்சனி என்று வரும். பொதுவாக விரயச்சனி காலத்தில் அமைதியாகச் செயல்படுவது நல்லது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். தொழிலில் தேக்கநிலையும். தெளிவற்ற மனதுடன் செயல்படும் சூழ்நிலையும் ஏற்படும். உறவினர் களும், நண்பர்களும் செய்த உதவிக்கு நன்றி காட்ட மாட்டார்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்படும். நினைக்க இயலாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 6, 9 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், எதிர்ப்பு, வியாதி, கடன், தந்தை வழி உறவு, பாக்கியம், பாகப்பிரிவினை போன்றவற்றைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால் அங்கெல்லாம் புதிய திருப்பங்களும், மாற்றங்களும் வரப்போகின்றது. 2-ம் இடத்தில் சனி பார்வை பதிவதால் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடினாலும் அதைச் சமாளிப்பீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோகத்தில் மாற்றம் உண்டு. தொழிலைப் பொறுத்த வரை புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். எதிரிகள் விலகுவர். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பெற்றோர் வழியில் பிணக்குகள் ஏற்பட்டு பிறகு இணக்கம் வரும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வாய்ப்பு உண்டு. கைக்கு கிடைத்த பூர்வீக சொத்தை விற்றுவிட்டு புதிய இடம் வாங்கி மனை கட்ட வேண்டுமென்ற ஆர்வம் கைகூடும். தேவைகள் பூர்த்தியானாலும் கூட சில சமயத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் சனி உங்கள் ராசிக்கும் அதிபதி என்பதால் அதை வழிபடுவதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செய்திகள் அதிகம் வந்து சேரும். தங்களுக்கோ, தங்கள் சகோதரர்களுக்கோ, தங்களின் பிள்ளைக ளுக்கோ கல்யாணம் போன்ற சுபகாரியங்கள், பெற்றோர்களின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டு ஒப்பந்தங்களும் வரலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடும், உங்களின் மதிநுட்பத்தாலும் மகத்தான பலன்களை வரழைத்துக் கொள்ளும் நேரம் இது.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மனதில் நினைத்ததை மறு கணமே செய்யும் யோகம் உண்டு. நடக்கும் தொழிலைக் கொடுத்துவிட்டு வேறு தொழிலை செய்ய நண்பர்களின் ஆதரவைக் கேட்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு, ‘வெளிநாடு செல்ல முடியவில்லையே’ என்ற ஆதங்கம் தீரும். திடீரென நிர்வாகம் உங்களை வெளி நாட்டிற்கு அனுப்ப பரிசீலனை செய்வர். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மனக்குழப்பம் அகல அனுபவஸ்தர்கள் ஆலோசனை சொல்வர். பொது நலத் தில் இருப்பவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதர சச்சரவுகள் அகலும். பத்திரப் பதிவிலிருந்த தடைகள் விலகும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழி காட்டுவர். இக்காலத்தில் சனி பகவானும் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். ஜென்ம சனியாவதால் உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. முன்கோபத்தின் காரணமாகச் சில பாதிப்புகளும், முன்னேற்றத்தில் குறுக்கீடும் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களும் விலகிக்கொள்வதாக பயமுறுத்துவர். எதிரிகளின் பலம் கொஞ்சம் அதிகரிக்கும் நேரமிது.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடக்கிறது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே தன லாபாதிபதி உலா வருவதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, வாக்கு ஸ்தானம் பலப் படுகின்றது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கேதுவின் ஆதிக்கத்தால், தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். பழைய வாகனத்தை பைசல் செய்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆலயத் திருப்பணிகளிலும் கவனம் செலுத்துவீர்கள்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை அமையும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் கோளாறுகள் உருவாகும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்லியதன் மூலம் சிக்கல்கள் உருவாகலாம்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானையும், சிவனையும், உமையவளையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் நந்தீஸ்வரர் படம் வைத்து அதற்குரிய பதிகங்கள் பாடி வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
2மிடம் என்பது தனம் வாக்கு குடும்ப ஸ்தானம். வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. ஜென்ம குருவால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும். பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். அமைதியாக பேசுபவர்கள் கூட அதிகார தோரணையான பேச்சில் அனைவரையும் கட்டிப் போடுவார்கள். சிலர் பேசியே பிறரை வதைப்பார்கள். சிலர் பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிக்கப்பார்கள். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தால் நிமிர்ந்து நிற்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.
குடும்பத்திற்கு நிலையான நிரந்தரமான வருமானத் திற்கான வழி தென்படும். இதுவரை வீட்டு வேலையில் காலத்தை கழித்த பெண்கள் கைத் தொழில் கற்று வருமானம் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள். கடன் சுமை குறையத் துவங்கும்.வீடு முழுவதும் பண வாசனை நிரம்பும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். பணத்தைப் பார்த்தசில போலியான உறவுகள் உண்மையானவர்கள் போல் நடிப்பார்கள்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும்.சொல் வலிமை, வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் உருவாகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள்.
5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் 5ம் பார்வை ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய6ம் இடத்திற்கு இருப்பதால் உடல் ஆரோக்யம் சீராகும். எந்த முறை வைத்தியம் செய்து நோய் நிவாரணம் பெறலாம் என்று திணறியவர்களுக்கு நோயின் தன்மை புலப்படும். நோயின் தன்மைக்கு தகுந்த வைத்தியம் கிடைக்கும். ஆச்சரியப்பபடத்தகுந்த வகையில் நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள். வலது காதில்சிறு குறைபாடு தோன்றும். செய்வினை, கண் திருஷ்டி அகலும். கடன் தொல்லைகள் முற்றிலும் அகலும். வராக்கடன்கள் வசூலாகும். கொடுக்க வேண்டியபணத்தை திரும்ப கொடுத்து விடுவீர்கள். பணம் எல்லாநேரத்திலும் எல்லோருக்கும்வந்து விடாது. கடன் இல்லா வாழ்க்கை பெரும் பாக்கியம். குருவருளால் உங்களுக்கு சாத்தியமாகும் . கடனை வளரவிடாமல் பார்த்து கொள்ளவது வளமான எதிர்காலத்தை கொடுக்கும்.
பொருளாதார உயர்வு எற்படும். பொருளாதார வரவைதிட்டமிட்டு செயல்படுத்த குருபகவான் பக்கபலமாக இருப்பார். அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் சுமூகமான நல் இணக்கம் ஏற்படும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் செயல்கள் உங்களுக்கு சாதகமாகும்.3ல்ராகு நிற்பதால் சகோதரர்களிடம் அவ்வப்போதுகருத்து வேறுபாடு தோன்றி மறையும்.சகோதரர்களுக்குகாக அதிக செலவு செய்ய நேரும். எதற்கும்கலங்காமல் மன உறுதியுடன் செயலாற்றுவீர்கள். இது வரை வாடகை வீட்டில் குடியிருந்த சிலர் கடன் பெற்று சொந்த வீடு கட்டி குடிபுகும்ஆர்வம் உண்டாகும். உங்கள் எண்ணம் போல் வீடு, வாகன யோகம் அமையும். சிலர் வீடு, வாகனங்களை விற்று கடன் அடைக்கலாம்.
6, 8 ம்மிடத்திற்கான குரு பார்வைபிரச்சனையை மூடி மறைக்கும். வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்குகடன் தொகை தள்ளுபடியாகும் . விவசாயிகள் கடன் பிரச்சனையிலிருந்தும் மீண்டு வருவார்கள். 6ம் இடம் குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால்கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் போட்டி போடும்.குரு பார்வை இல்லாத போது கடனே கழுத்தை நெரிக்கும் என்பதால் தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 8ம்மிடமான ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் ஆயுள் பலம் ஏற்படும். நீண்ட நாள் வைத்தியம் செய்யக் கூடிய பரம்பரை வியாதியின் தாக்கம் வெகுவாக குறையும்.நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் ஏற்படும். கடுமையான உயிருக்கு ஆபத்தான நோயில் போராடுபவர்களுக்கு சிறிய நிவாரணம் ஏற்படும். சிலருக்கு கண், பல், முகம் தொடர்பான அறுவை சிகிச்சை செய்ய நேரும். வழக்கு வெற்றிகள்தள்ளிப்போகும். அல்லது இடைக்கால நிவாரணம் கிடைக்கும். யோகா மெடிடேசன், பிராணயாமம் கை கொடுக்கும்.இயற்கை வைத்தியம் நல்ல பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனையாக உருவாகும். முன்னோர்களின் மரபு வழி நோய் தாக்கம் உருவாகலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம்.மன வேதனை மற்றும் அவமானப்படுத்திய வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். உங்களுக்குசாதகமான தீர்ப்பு கிடைக்கும்.கணவனுக்கோ , மனைவிக்கோதிடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம்போன்றவை லாட்டரி, பங்குச் சந்தை, உயில் மூலம்கிடைக்கலாம்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிவதால். அபாரமான வளர்ச்சி ஏற்படும். அரசு, அரசியல், நிர்வாகம் சார்ந்த செயல்கள் சாதகமாகும். அரசு சார்பாக செய்யும் செயல்களுக்கு வாய்ப்பு தேடி வரும்.தொழிலில் புதிய கிளைகளை துவக்கி நல்ல லாபங்கள் பார்க்கலாம். மறைமுக எதிரிகளால் தொழில் முடக்கம் இடையூறுகள் ஏற்படும். சம்பளத்திற்கு சென்றவர்கள் கூட புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
சின்னத்திரை, பெரிய திரை கலைஞர்களுக்குபுதிய வாய்ப்புகூடி வரும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் உள்ளவர்களுக்கு தனி முத்திரை பதிக்க ஏற்ற நேரமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் வேலையில் இருந்து வந்தபிரச்சனைகள் தீரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்குவெளிநாட்டு வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு மத்திய அரசு வேலை கூட கிடைக்கும்.
குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் குலப் பெருமையை காப்பாற்ற போராட நேரும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்தபிரச்சனைகள் இழுபறியாக இருக்கும். தந்தை வழி உறவினர்களிடம் சிறு சிறு மனத்தாங்கல் இருக்கும். உரிமைக்காவும், நியாத்திற்காகவும் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.ஆலயத் திருப்பணி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பொதுக் காரியங்களுக்காக அதிக நேரம் செலவு செய்வீர்கள். சமூக அந்தஸ்து மிகச் சிறப்பாக இருக்கும். நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும்.
தந்தையின் ஆரோக்யம் சீராகும். நிம்மதியான உறக்கம் இருக்காது. பேச்சில் தெளிவின்மை இருக்கும். குடும்பவாழ்வில் ஆர்வம் இருக்காது. குடும்பத்தில் சுகமும் துக்கமும் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கும்.கடுமையான வாக்கு பிரயோகம், கூசாமல் பொய் பேசுதல் ஆகியவைகளால் குடும்பத்தில்தேவையில்லாத பிரிவினையை உண்டாகும். சிலருக்கு உண்மையே பேச முடியாமல் சூழ்நிலை ஏற்படும்.பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு தேவையில்லாதகெட்ட பெயர் ஏற்படும்.பொருளாதாரத்தில் கடுமையானஏற்ற இறக்கம் இருக்கும். எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற இனம் புரியாத மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.
திருமணம்: இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பெயர்ச்சி யாவதால் திருமணத் தடை அகலும். ராசி அதிபதி சனியின் பார்வையும் தன ஸ்தானத்தில் பதிவதால் கும்ப ராசி இளைஞர்கள், இளைஞிகளுக்கு திருமணம் நடைபெறும்.
பெண்கள்: குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதியஅணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம். சுற்றுலா சென்று ஆனந்தம்அடைவீர்கள்.கணவன் மனைவி கருத்துஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால்இல்லறம் நல்லறமாகும்.
பரிகாரம்: குளத்து மீன்களுக்கு அரிசிப் பொரி இட பொருள் வரவு அதிகரிக்கும். உடல் ஊனமுற்றோருக்கு தயிர் சாதம் தண்ணீருடன் வழங்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
மூன்றில் ராகு/ ஒன்பதில் கேது
விவேகமான கும்ப ராசியினரே உங்கள் ராசிக்கு 3ல் ராகுவும் 9ல் கேதுவும் உள்ளார்கள். குருபகவான் 2 ,3ம் இடத்திலும், சனி பகவான் 12 , 1ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்.
3மிட ராகுவின் பலன்கள்:மூன்றாமிடம் என்பது முயற்சி ஸ்தானம், சகாய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானம், உப ஜெய ஸ்தானம், வெற்றி ஸ்தானம். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை ராகுவைச் சேரும். எந்த செயலிலும் விரைந்து செயல்பட்டு தெளிவாக முடிவு எடுப்பீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் காலம்.
தைரியம், தெம்பு , ஞாபக சக்தி அதிகரிக்கும். இது வரை அனுபவித்து வந்த சங்கடங்கள் தீரும். நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் பெற்று வாழ்வீர்கள்.உடல் ஆரோக்கியம் அதிகரித்தும். நன்மைகள் அதிக அளவில் நடக்கும். குடும்ப தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். உங்கள் சொத்தை சகோதர, சகோதரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார். சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். ஆடை ,ஆபரணச் சேர்க்கை உண்டாகும். செய்தி, தகவல்தொடர்பு, அச்சுத் துறை நூலகத்தில் வேலை செய்பவர்களுக்கு , எழுத்தாளர்களுக்கு ஏற்றம் உண்டாகும். சிலருக்கு செவித்திறன் குறைபாடு வரலாம்.
ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:கிருத்திகை நட்சத்திர அதிபதி. சூரியன் கும்பத்திற்கு ஏழாம் அதிபதி. ராசிக்கு 3ல் பயணிக்கும் ராகு ஏழாமதிபதியின் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். புதிய நண்பர்கள், தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நல்ல புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். தொழில் கூட்டாளிகளிடையே நல்லிணக்கம். நீடிக்கும். தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் பங்குதாரர் கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக தொடர்பில்லாத பள்ளி, கல்லுரி மற்றும் அக்கம் பக்க பால்ய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியைத் தரும். கணவன் மனைவி உறவு மகிழ்வை தரும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி கும்பத்திற்கு 4,9ம் அதிபதி. பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் காலம். தங்களின் தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும். எண்ணிய எண்ணம் பலிதமாகும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் கிடைக்கும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் கோட்சார ராகு பயணிக்கும் காலம்.மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்படையும். சாஸ்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். புகழ் பரவும். பணிபுரியும் துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகள் மெமோ வாங்குவீர்கள் அல்லது இடமாற்றம் செய்யப்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
9 மிட கேதுவின் பொது பலன்கள்:ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றை போதிப்பவர். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை புரிய வைப்பவர். தந்தையின் அருமை, பெருமைகளை உணர்வீர்கள். தந்தை இல்லாமல் ஒரு மனிதனுக்கு பிறவி என்பதே கிடையாது என்ற உண்மை மனதை வாட்டும். லௌகீக நாட்டம் குறையும். தந்தை ஆன்மீக வாதியாக மாறுவார்.தந்தை மகன் உறவில் ஏற்பட்ட விரிசல் சீராகும்.
பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையில் தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகமாகும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டின் மூலம் காரிய சித்தி அடைய முயற்சிப்பீர்கள். சிலருக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் யோகா, தியானம் போன்ற வற்றில் ஆர்வம் அதிகரிக்கும். ஒன்பதில் நிற்கும் கேது பகவான் இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் வழங்க தயராக இருக்கிறார். அதை பயன்படுத்த கும்ப ராசியினர் தயாராக வேண்டும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம்.குரு கும்பத்திற்கு தன லாபாதிபதி. கோட்சார குரு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் குடும்ப வாழ்க்கை மனநிறைவு தரும். உற்றார் உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும். திருமண வயதில் உள்ள மகள், மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்துவார்கள். தொழிலில் பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் நேரம். உங்கள் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் காலம். லாபம் வீடு தேடி வந்து கதவை தட்டும். ஜனன கால ஜாதகத்தில் சனி சுப வலு பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். மனைவிக்கு தாய் வழி சொத்து கிடைக்கும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 3ல் பயணிக்கும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலம். பாக்கியஸ்தானத்தில் நிற்கும் கேது உங்களுக்கு பாடம் புகட்ட தயார் நிலையில் உள்ளதால் சுபமும் அசுபமும் கலந்தே நடக்கும்.
உயர் கல்வி முயற்சி சிறு தடைக்குப் பின் சீராகும். தந்தைக்கும் சகோதரருக்கும் கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.அண்டை, அயலாருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். உங்களின் பூர்வீக மற்றும் சுய சம்பாத்திய சொத்துகளின் ஆவணங்கள் தொடர்பான குழப்பம் உங்களை கவலையில் ஆழ்த்தும்.பத்திர பதிவு அலுவலகத்திற்கு நடந்தே அழுத்துவிடுவீர்கள் .அதாவது கேதுவின் டார்கெட் நிம்மதியின்மை கொடுத்து முக்திக்கு அழைப்பது.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் கும்பத்திற்கு 3,10ம் அதிபதி. சிலர் வேலையை விட்டு விடுவார்கள் அல்லது வேலையிலிருந்து நிறுத்திவிடுவார்கள். சிலர் வீடு அல்லது வியாபர நிறுவனத்தை மாற்றலாம். சிலர் தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய நேரும். தொழில் தர்மத்தை கடைபிடித்து நியாயமான முறையில் சம்பாதித்து புகழடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம். சிலர் தங்களின் மறைமுக வருமானத்தைக் கொண்டு புதிய தொழில் கிளைகளை உருவாக்கலாம். அதிக பொருள் ஈட்டும் ஆசையால் சட்டத்திற்கு புறம்பான தொழிலை செய்பவர்களுக்கு அசுப விளைவுகளை தந்து தவறை சுட்டிக் காட்டும்.
திருமணம்:ஜென்மச் சனியின் காலத்தில் திருமண முயற்சியில் தடை தாமதங்கள், மனம் வருந்தும் நிலை ஏற்படும். பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் காண்பிக்கும் முன்பு பல முறை யோசிக்கவும். அதிக கவனத்துடன் வரனை தேர்வு செய்ய வேண்டும். தவறான சுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம்.
பெண்கள்:திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பீர்கள். மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . வீடு , வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.
உத்தியோகஸ்தர்கள்:தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கும்பராசியினருக்கு குருவின் சஞ்சாரம் மிகச் சாதக மாக உள்ளது. ஏழரைச் சனி மற்றும் ராகு/கேதுவின் தாக்கம் உங்களை பாதிக்காது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406


