search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக்கோப்பை- நெதர்லாந்தின் பந்து வீச்சில் சுருண்ட ஜிம்பாப்வே- 117 ரன்கள் மட்டுமே எடுத்தது
    X

    டி20 உலகக்கோப்பை- நெதர்லாந்தின் பந்து வீச்சில் சுருண்ட ஜிம்பாப்வே- 117 ரன்கள் மட்டுமே எடுத்தது

    • ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக ராசா 40 ரன்னும், வில்லியம்ஸ் 28 ரன்னும் எடுத்தனர்.
    • நெதர்லாந்து அணி தரப்பில் பால் வான் மீகெரென் 3 விக்கெட்டும், பிரண்டன் கிளெவர், லீடெ, வான் பீக் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் 12 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    உலக கோப்பை போட்டி யில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் மைதா னத்தில் தொடங்கிய ஆட்டத் தில் குரூப்-2' பிரிவில் உள்ள ஜிம்பாப்வே-நெதர் லாந்து அணிகள் மோதின.

    ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப் பட்டது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 1 ரன்னில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் வங்கா ளதேசத்திடம் 3 ரன்னில் தோற்றது. நெதர்லாந்து அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்றது. வங்காளதேசத்திடம் 9 ரன்னிலும், இந்தியாவிடம் 56 ரன்னிலும், பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியா சத்திலும் தோற்றது.

    ஜிம்பாப்வே 2-வது வெற்றி ஆர்வத்திலும், நெதர்லாந்து முதல் வெற்றிக்காகவும் களத்தில் குதித்தன. ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் எர்வின் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மாதவேரா, எர்வின் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் மாதவேரா 1 ரன்னுக்கும், எர்வின் 3 ரன்னுக்கும், அடுத்து வந்த சகப்வா 5 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    அந்த அணி 20 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 4வது விக்கெட்டுக்கு அந்த அணியின் சீனியர் வீரர்கள் சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோர் களம் புகுந்தனர்.

    இதில் பொறுமையாக ஆடி வந்த வில்லியம்ஸ் 28 ரன்னுக்கும், அதிரடியாக ஆடிய ராசா 40 ரன்னுக்கும், இதையடுத்து களம் புகுந்த மில்டன் ஷூம்பா 2 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து அந்த அணியின் ரியான் பர்ல், லூக் ஜோங்வே ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் அந்த அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களே எடுத்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக ராசா 40 ரன்னும், வில்லியம்ஸ் 28 ரன்னும் எடுத்தனர். அந்த அணியில் சிக்கந்தர் ராசா, சீன் வில்ல்லியம்சை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர்.

    நெதர்லாந்து அணி தரப்பில் பால் வான் மீகெரென் 3 விக்கெட்டும், பிரண்டன் கிளெவர், லீடெ, வான் பீக் தலா 2 விக்கெட்டும், கிளாசென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடி வருகின்றன.

    Next Story
    ×