search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிஎஸ்கே தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கிய ஜடேஜா- டோனியுடன் மோதலா?
    X

    சிஎஸ்கே தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவுகளை நீக்கிய ஜடேஜா- டோனியுடன் மோதலா?

    • ஒவ்வொரு வருடமும் டோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார்.
    • சிஎஸ்கே அணியுடனான நெருக்கம் குறைந்து வருவதால் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரியவந்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5-வது சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து 9-வது இடத்தில் நீடித்து வந்தது.

    15-வது சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலுமே படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகியவுடன் அவர் தொடரில் இருந்தே வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியது. கேப்டன் பொறுப்பை மாற்றியதில் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் வெளியேறியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் அதனை உறுதி செய்யும்படியான விஷயங்களை ஜடேஜா செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டு ஐபிஎல் பதிவுகளை திடீரென முற்றிலுமாக நீக்கியுள்ளார். சிஎஸ்கே குறித்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது ஒருபுறம் இருக்க டோனிக்கும் - ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொரு வருடமும் டோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா மறக்காமல் வாழ்த்து தெரிவிப்பார். ஆனால் இந்தாண்டு மற்ற அனைத்து வீரர்களும் வாழ்த்து தெரிவித்த போதும், ஜடேஜா எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.

    சிஎஸ்கே அணியுடனான நெருக்கம் குறைந்து வருவதால் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம் தான் எனத் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×