என் மலர்

  கிரிக்கெட்

  மூன்றாவது போட்டியில் அபார வெற்றி- நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
  X

  மூன்றாவது போட்டியில் அபார வெற்றி- நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தேவன் கான்வே 138 ரன்கள் குவித்தார்.
  • ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

  இந்தூர்:

  இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து, 385 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 101 ரன்களும், ஷுப்மன் கில் 112 ரன்களும் விளாசினர்.

  இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் தேவன் கான்வே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். மறுமுனையில் ஹென்றி நிக்கோல்ஸ் 42 ரன்கள், டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர். சதம் கடந்து முன்னேறிய தேவன் கான்வே 138 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல் 26 ரன்களிலும், சான்ட்னர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

  41.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி 295 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

  இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றதால், மூன்று போட்டி கொண்ட தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது.

  Next Story
  ×